என்னுடைய நண்பர் போஸ்கோ அவர்கள் “சரியா “என்ற அமைப்பின் மூலம் புத்தகங்களை திறனாய்வு செய்து வருகின்றார், அவரிடம் நான் உரையாடும்போது ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன், அதற்கு போஸ்கோ அவர்கள் குறிப்பிட்டு நல்லவர் என்பதற்கு என்ன அளவுகோல் வைத்து இருக்கின்றீர்கள், அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுபவனும், அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுபவனும், கொலைகாரனும், கொள்ளைக்காரனும் தன்னுடைய செயலை சரி என்று நினைப்பதால் தான் செய்கின்றார்கள், அதனால் அனைவரும் தன்னை நல்லவராகவே தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உங்களுடைய பார்வையில் தனக்கு நன்மை செய்பவர் மட்டும் நல்லவர்கள் என்றால் அனைவரும் யாராவது ஒருவருக்கு நல்லவர் தானே ? என்ற கேள்வியோடு முடித்தார். அதற்கான பதில் பல ஆண்டுகளாக எனக்கு கிடைக்கவில்லை, இன்று தான் எனக்கு கிடைத்தது.
நாம் செய்யும் செயலை போல் நம்மை சுற்றியுள்ளவர்கள் செய்தால் அந்த செயலால் நமக்கு எந்த கேடும் இல்லை என்றால் நாம் நல்லவர் என்று பொருள், இதுதான் நல்லவர் என்பதற்கான அளவுகோல்.
நீங்க நல்லவரா ?கெட்டவரா?