சாலையின் ஓரத்தில் உள்ள மரத்தடியில், சருகுக்கு அடியில் கிடக்கும் தங்க நாணயத்தை பார்க்காமல் பல ஆயிரம் பேர் சாலையைக் கடந்து செல்வதால் அனைவருக்கும் கண் பார்வை இல்லை என்று பொருள் அல்ல. மரத்தடியில் கிடந்த தங்க நாணயத்தை காட்டிய பிறகும் தெரியவில்லை என்றால் தான் கண் பார்வை இல்லாதவர் என்று பொருள்.
ஒவ்வொரு மனிதன் பெரும் அறிவும் தற்செயலானவையே !அந்த அடிப்படையில் நானும் “என்னுடைய சிந்தனை எனக்கு கட்டுப்பட்டு இல்லை, இறந்த காலத்தின் தொடர்போடு தான் என்னுடைய சிந்தனை இருக்கின்றது, தொடர்வினையிலிருந்து விடுபட்டு என்னால் புதியதாக, சுதந்திரமாக சிந்திக்க முடியவில்லை “என்ற அறிவை தற்செயலாகவே பெற்றேன்.
நான் பெற்ற அறிவை பல அறிவியல் அறிவோடு ஒப்பிட்டு சொல்லியும், #குமார்விதிகள் என்ற புத்தகத்தை எழுதியும் ஒருவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவரிடம் சிந்திக்கும் அறிவே இல்லை என்று தான் பொருள்.
என்னுடைய இலக்கு சாதாரண மனிதர்களின் முகமூடியை கழட்டுவதல்ல, கடவுளின் அவதாரம் என்ற முகமூடியை போட்டு இருக்கும் பிரதமர் மோடி, ஜக்கி வாசுதேவ் போன்ற உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் முகமூடியை கழட்டுவது தான்.