சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந்தவர்களால் எழுதப்பட்டவை. விதி என்ற வார்த்தையை இவர்கள் முரண்பாடாக பயன்படுத்தி உள்ளனர். உண்மையில் “விதியின்” பொருள் என்ன?
“விதி என்பது எது நடக்குமோ, அது நடந்தே தீரும், மாற்றத்திற்கு உட்படாதது, மாற்ற முடியாது என்று பொருள்”. சூரியன் காலையில் கிழிக்கில் உதிக்கும் என்பது விதி. தண்ணீரை 100 டிகிரி செல்சியஸ் சூடாக்கினால் ஆவியாகும் என்பது விதி. சாலையில் இடதுபுரம் தான் மனிதன் செல்ல வேண்டும் என்பது விதியல்ல, அது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள்.
நம்முடைய கல்வி முறை எழுத்துப்பிழையினை கண்டறிய சொல்லிக் கொடுக்கின்றது. ஆனால் அறிவை கொடுப்பதில்லை. தன்னை தானே அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்ளும் பகுத்தறிவாளிகள் விதியை மூட நம்பிக்கையான வார்த்தை என்றும், அதை மதியால் வெல்லலாம் என்றும் எண்ணுகின்றார்கள்.
உலக நீதியையே மாற்றக்கூடிய “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல” – என்ற புத்தகத்தை நான் எழுதியிருக்கின்றேன் என்ற ஆணவத்தில் நான் இருக்கும்போது எனக்கு தெரிய வந்தது விதி என்ற ஒரு வார்த்தையில் நான் எழுதிய அனைத்தையும் இரண்டு எழுத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழர்கள் இந்த உலகத்திற்கு சொல்லி விட்டார்கள். ஆனால் நம்முடைய படிப்பாளிகளுக்கு இன்னும் இதை புரிந்து கொள்ள முடியவில்லை, அதனால் தான் “விதி” என்ற அறிவியல் வார்த்தையை தவறாகப் பயன்படுத்துகின்றாக்கள்.