இது அரசியல் கட்டுரை அல்ல, வாக்கு அளித்தவர்கள், அளிக்காதவர்கள் அனைவருக்கும் ஆன விழிப்புணர் கட்டுரை படித்து பயன்பெறுங்கள்.நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற புத்தகத்தில் அறிவைப் பற்றி ஆய்வு செய்து எழுதி இருக்கின்றேன் அதை படித்துவிட்டு இதை படித்தால் தெளிவாக புரியும்.லிங்கை தொட்டு “குமார் விதிகள்”புத்தகத்தை படிக்கவும். https://www.vijayakumaran.in/kumar-vidhigal
விஜய்யின் வெற்றிக்கு அவருடைய ரசிகர்களின் அரசியல் அறியாமை தான் காரணம் என்று அனைவரும் சொல்கின்றார்கள், அதை தாண்டி யாராலும் சிந்திக்க முடியவில்லை காரணம் அறிவை பற்றிய புரிதல் இந்த உலகில் அந்த அளவுக்கு தான் இருக்கின்றது. எம்ஜிஆர் தேர்தலில் வெற்றி பெற்ற போது படிக்காத பாமர மக்கள் திரைப்படத்தைப் பார்த்து எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் வருவது போல் நன்மைகள் செய்வார் என்று வாக்களித்து ஏமாந்து போய்விட்டார்கள் என்று சொன்னார்கள், இன்று விஜய்க்கு வாக்களித்தவர்கள் அனைவரும் படித்த இளைஞர்கள் இவர்கள் எப்படி திரைப்படத்தில் விஜய் நடிப்பது போல் நிஜ வாழ்க்கையிலும் இருப்பார் என்று நம்பினார்கள் என்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
நமக்கு உடன்படாத செயலை ஒருவர் செய்தால் அவர்களுக்கு அறிவில்லை என்று சொல்லிவிட முடியாது,மாறுபட்ட கருத்துக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்தால் தான் நாமும் அதுபோன்ற தவற்றைத் திருத்திக் கொள்ள முடியும்.
நம் உணர்வுகளுக்கு முன் நாம் பெற்றிருக்கும் அறிவு தோற்றுவிடும், நம் உணர்வின் விருப்பப்படி தான் வாழ்கின்றோம்,உணர்வின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளதான் நம் அறிவை பயன்படுத்திக் கொள்கின்றோம், எனவே நம்மை ஆளுமை செய்வது நம் உணர்வு தான் என்பதால் இதில் படித்தவர், படிக்காதவர் என்று எந்த வேறுபாடும் இல்லை அனைவரும் உணவுக்கு முன் சமம் தான்.எனவே உணர்வுக்கு நாம் அடிமையாகி விட்டால் நம்முடைய அறிவு வேலை செய்யாது.
நம் உணர்வை தூண்டக்கூடிய பழக்கங்கள் எதுவாக இருந்தாலும் நாம் அதற்கு அடிமையாகி விடுவோம். திரைப்படம்,நாடகம் பார்ப்பது கதை, நாவல்,இலக்கியம் படிப்பது, போதைப்பொருளை பயன்படுத்துவது, அதிகாரத்தில், செல்வத்தில்,சோம்பேறியாக வாழ்வது, என்று நம் உணர்வு அடிமையாகி விட்டால் நம் அறிவும் உணர்விடம் தோற்றுவிடும்,இந்த நிலையில் நம் செயலை நாம் நியாயப்படுத்துவோம்,இந்த அடிப்படையில் தான் நாம் அனைவரும் இயங்குகின்றோம்.
திரைப்படத்தை தொடர்ந்து பார்க்கும் பழக்கம் உருவாகும் போது ஒரு சில கதாநாயகனை பார்க்கும்போது தன்னையே நாயகனாக நினைத்துக் கொள்வார்கள் அதனால் தான் ஒரு சில நடிகர்களுக்கு மட்டும் அதிக ரசிகர்கள் இருக்கின்றார்கள். கதாநாயகன் செய்கின்ற செயலை எல்லாம் தான் செய்ததாக உணர்வால் தூண்டப்பட்டு ஆனந்தப்படுவார்கள்,வில்லனை கதாநாயகன் அடித்தால் இவர்கள் அடித்ததாக நினைத்துக் கொள்வார்கள், கதாநாயகியை கட்டிப்பிடித்தால் இவர்கள் கட்டி அணைத்ததாகவே ரசிகர்கள் நினைத்துக் கொள்வார்கள், இந்த உணர்வின் வெளிப்பாட்டால்தான் விஜய் CM ஆக வரவேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனும் விரும்பி இருக்கின்றார்கள்,விஜய் CM ஆக பதவி ஏற்தை தான் பதவி ஏற்று கொண்டதாகவே நினைத்துக் கொண்டு ஒவ்வொரு ரசிகனும் கொண்டாடுகிறார்கள்.
விஜய் ரசிகர்களை போல் நாமும் பல பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றோம் நம் உணர்வை தூண்டக்கூடிய செயலை நாம் விரும்பி தொடர்ந்து செய்தால் நாம் அதற்கு அடிமையாக இருக்கின்றோம் என்று பொருள். கதை,நாவல் என்று உணர்வைத் தூண்டக்கூடிய புத்தகங்களாக இருந்தாலும் சரி,திரைப்படமாக இருந்தாலும் சரி அனைத்தும் மதுவைப் போல் நம் உணர்வை தூண்டி அறிவை செயலிழக்க செய்துவிடும்.இதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது! இதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
நாம் எதை உணர்கின்றோமோ, எதை பார்க்கின்றோமோ, எதை படிக்கின்றோமோ, எதை நுகர்கின்றோமோ, எதை கேட்கின்றோமோ, எதை சுவைக்கின்றோமோ அது நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஆளுமை செய்யும் என்பது இயற்கையின் விதி இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. நம்முடைய ஐந்து புலன்கள் மூலம் பெறும் தகவல்களை மூளைக்கு தெரியப்படுத்தி விட்டால் அதில் இருந்து நாம் விடுபட முடியாது. எனவே நம் உணர்வுக்கும், அறிவுக்கும் எதை தெரியப்படுத்த வேண்டும் எதை தெரியப்படுத்தக் கூடாது என்பதை அறிவால் அறிவை ஆளுமை செய்வதுதான் ஏழாவது அறிவு. இந்த அறிவு இல்லாதவர்கள் தான் எல்லா அறிவும் நல்லறிவு என்று எண்ணி கண்ட குப்பைகளையும் மூளையில் சேகரித்துக் கொள்வார்கள் அந்த குப்பை அவர்களை தவறான வழியில் இயக்கும். இதுபோல் நாம் பல கெட்ட பழக்கங்களை அனுபவித்து விட்டாலும் அதிலிருந்து விடுபட முடியாமல் அதை நியாயப்படுத்துவதே நம்முடைய அறிவாகவும் இருக்கும்.இந்த அடிப்படையில் தான் நாம் ஒவ்வொருவரும் இயங்குகின்றோம்.
விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல இந்த சமுதாயத்தில் நாம் அனைவரும் ஏதோ ஒரு உணர்வின் பிடியில் சிக்கிக் கொண்டுதான் இருக்கின்றோம் என்பதை புரிந்து, அறிவால் அறிவை ஆளுமை செய்து வாழ்ந்தால் மட்டுமே ஆரோக்கியமான அரசியல் மாற்றம் ஏற்படும்.