நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மிடம் இருக்கும்.
பெரும்பாலானவர்கள் நம்புவதையே புரிந்ததாக எண்ணுகின்றார்கள், தகவல் சேகரிப்பதையே அறிவாக எண்ணுகின்றார்கள், அதனால் தான் படித்தவன் அறிவாளியாக இந்த உலகில் பார்க்கப் படுகின்றான்.
2+2=4,4x4=16 என்பதை புரிந்துகொண்டால் கணிதம் வாழ்க்கைக்கு பயன்படும். புரிந்து கொள்ளாமல் ஆசிரியர் சரியாகத்தான் சொல்லி இருப்பார் என்று எண்ணி விடையை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் கணிதம் வாழ்க்கைக்கு பயன் படாது. அதுபோல் விதியை உண்மை என்று நம்புவதும், பொய் என்று நம்புவதும் வாழ்க்கைக்கு பயன் தராது.
விதி உண்மை என்ற என்னுடைய ஆய்வின் முடிவை, விதியை உண்மை என்று நம்பும் பலர் ஏற்றுக்கொள்வார்கள். காரணம் அவர்களுடைய நம்பிக்கை சார்ந்த விடையும், என்னுடைய ஆய்வின் விடையும் ஒத்துப் போவதால்.ஆனால் நான் சொல்வதை புரிந்தது போல் எண்ணி நம்புகின்றார்கள் என்றுதான் பொருள்.
கணிதத்தில் step ஐ தவறாக போட்டுவிட்டு விடையை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு சரியாக எழுதி விட்டால் கணிதம் தெரிந்ததாக பொருளல்ல.
விதி உண்மை என்பதை கணிதம் போல் step-by-step உலக மக்கள் என்னுடைய ஆய்வை புரிந்து கொண்டால் தான் பிரிவினை அரசியலை விட்டு சமத்துவம் என்ற அற்புத உலகை வரும் காலத்தில் உருவாக்க முடியும்.