வெற்றியும், தோல்வியும் இரண்டு மார்க்கங்கள். எந்த மார்க்கமாக நாம் பயணம் செய்தால் நன்மைகள் நடக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. எனவே வாழ்க்கையில் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் சமமாக நினைத்து ஆணவம் இல்லாமலும், தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே இன்பமாக வாழ முடியும்.