3 September 2016
by
Vijayakumaran
"வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது.
காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்"
பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்னதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும் வேறுபாடு உண்டு.
அனுபவமுள்ள பெரியவர் சொல்வதை அனுபவமில்லாத சிரியவர் கேட்டு நடந்தால் நல்லது. இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அனுபவமுள்ள முன்னோர்கள் சொன்னதை தற்போது வாழும் அனுபவம் உள்ளவர்கள் கேட்க வேண்டியதோ, அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டியதோ இல்லை. காரணம் பரினாம வளரிச்சியின் காரணமாக நாம் தான் அவர்களைவிட பெரியவர்கள், எனவே முன்னோர்கள் சொன்னதை அப்படியே கேட்டு நடக்க வேண்டும் என்பதர்க்கில்லை. மாறுப்பட்ட நம்முடைய கருத்தை சொல்வது தவறில்லை.அதே நேரத்தில் முன்னோர்களின் அறிவை அடிப்படையாக வைத்துத்தான் நம்முடைய அறிவு வளர்ச்சி இருக்கும் என்பதால் முன்னோர்கள் சொன்னவற்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் முன்னோர்கள் சொன்ன அறிவுரை:
" நீ தூங்கினாலும் நீ போட்ட விதை தூங்காது" இதை மக்கள் எளிதில் புரிந்துகொண்டார்கள் காரணம் தினம் தினம் அவர்கள் வாழ்க்கையில் பார்க்கும் நிகழ்வை சொல்லும்போது எளிதில் புரிகின்றது.
ஒரு நூற்றாண்டுக்கு முன் விவேகானந்தர் சொன்ன மந்திரம். "நீ என்னவாக ஆக நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆவாய்". இது உண்மை ஆனால் பலர் அன்று இதை நம்பவில்லை சிலர் மட்டும் நம்பினார்கள். காரணம் இது அறிவின் மூலம் ஆராயக்கூடிய உண்மை என்பதால்,பலருக்கு இது புரியவில்லை. இருப்பினும் விவேகானந்தர் சொன்னதால் பலரும் இந்த வாசகத்தை சொல்லி தன்னை அறிவாளிகளாகக் காட்டிக் கொண்டார்கள்.
சென்ற தலைமுறைத் தலைவர் அப்தூல் கலாம் அவர்க்ள் சொன்னது "கனவு காணுங்கள்" என்று,இது புதிய கருத்து அல்ல, திரு.விவேகானந்தர் சொன்ன அதேக் கருத்தை புதிய வார்த்தையில் அப்துல் கலாம் அவர்கள் சொன்னார்கள், இதை இந்த தலைமுறையினர் புரிந்து கொண்டார்கள் இதனைப் புரிந்துக் கொள்வதற்கே நம்முடைய சமுதாயத்திற்கு 100 ஆண்டுகள் தேவைப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் இந்த தலைமுறையின் அறிவாக நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்து எழுதிய புதிய கருத்து.
" நீ என்னவாக ஆக நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆவாய்" ஆனால் நீ என்ன நினைக்க வேண்டும் என்பதை நீ தீர்மானிக்க முடியாது".
இதன் பொருள் "எல்லாம் உன்னால் முடியும் என்பது மாயை".
" உன் செயலுக்கு நீ காரணம் அல்ல"
"நீ ஒரு கல்லைப் போல்தான் வெளி சக்தி இயக்கினால் தான் நீ இயங்க முடியும்".
"அனைவரும் சமம்"
"வெளி சக்தி உன்னை இயக்காமல் நீ ஒருத்துரும்பையும் அசைக்க முடியாது"
"இறந்த காலத்தொடர்பு இல்லாமல் நீ எதையும் சிந்திக்க முடியாது" என்பதாகும்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மலைவாழ்மனிதர்கள் சொன்ன அறிவுரைகளை நாகரீக உலகில் வாழும் நாம் அப்படியேக்கடைப்பிடிக்க வேண்டும் என்று மதத்தலைவர்கள் சொல்வதும்,அதை அடிப்படையாக வைத்து நம்முடைய நீதித்துரை இருப்பதும் எவ்வளவு பெரிய அறிவற்ற செயல் என்று எண்ணிப்பாருங்கள்.ஒருவனுடைய செயலுக்கு அவன் தான் காரணம் என்று ஆதி மனிதன் எண்ணினான் அதனால் குற்றம் செய்தவனைத் தண்டித்தான். அதை அடிப்படையாக வைத்து இந்தியத் தண்டனைச்சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் குற்றம் குறையவில்லை அதிகரித்துக் கொண்டேதான் போகின்றது. இது ஒன்றே சான்று தண்டனையால் குற்றத்தை குறைக்க முடியாது என்பதற்கு இன்று ஒருவனுடைய சிந்தனைக்கு அவன் காரணம் அல்ல என்று நம்முடைய அறிவுக்கு தெரிய வந்த பிறகு நாம் தண்டனை சட்டத்திற்க்கு பதில் குற்ற தடுப்புச்சட்டத்தை தான் உருவாக்கவேண்டும். அது தான் இந்த நாகரீக உலகத்திற்கு சரியான வழிகாட்டுதலை கொடுக்கும் அப்போது சமுதாய நீதி மாறும். அதனால் சாதிக் கலவரம், மதக்கலவரம், கொலை-கொள்ளை அனைத்தும் குறைந்து அமைதியான சமுதாயம் உருவாகும்.
மகாத்மா காந்திக்கு முன்புவரை வன்முறையால்தான் நம்முடைய உரிமையை பெறமுடியும் என்று பலரும் நம்பினார்கள். அது அந்தக்காலத்து மனிதர்களின் அறிவு.
மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் அகிம்சை முறையில் நம்முடைய உரிமையை பெற முடியும் என்று பலரும் நம்பி போராட்டங்கள் செய்தார்கள் இது 100 ஆண்டுக்கு முந்தைய அறிவு.
இன்றைய சமுதாயத்தின் அறிவு சர்வாதிகாரியை அறிவாளியாக மாற்றிவிட்டால் போதும் நீ உன்னுடைய உரிமைகளை பெற்றுவிடுவாய் என்பதுதான்.
நான் என்ற உணர்வின் உச்சம்தான் சர்வாதிகாரம், சர்வாதிகாரத்தின் உச்சம் தான் அடிமைப்படுத்தும் செயல். அடிமையில் இருந்து விடுபட சர்வாதிகாரியின் நான் என்ற உணர்வை அறிவைக் கொடுத்து குறைத்து விட்டால் போதும். நாம் நம்முடைய உரிமைகளைப் பெற்று விடுவோம்.
நாம் இந்த உலகை ஆளமுடியாது, அப்படியே ஆண்டாலும் சில வருடங்கள் தான் ஆளமுடியும் ஆனால் நம்முடையக் கருத்து அறிவுப்பூர்வமாக இருந்தால் இந்த உலகத்தை எப்போதும் அது ஆண்டுக்கொண்டே இருக்கும். இதில் சர்வாதிகாரம் கொண்டவரும் உட்பட்டவர். எனவே நாம் நம்முடைய உரிமைகளை பெற, இந்தத் தலைமுறையின் அறிவால் இந்த உலகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம்.
இது உங்களுக்கு புரியவில்லை என்றாலும், மற்றவர்களுக்கு பகிருங்கள் அவர்களுக்கு புரியலாம்! அல்லது அடுத்த தலைமுறைக்காவது புரியட்டும். காத்திருப்போம்!