அறிவு துன்பத்துக்கு மருந்தாகவும், அறியாமை இன்பத்திற்கு வித்தாகவும் இருக்கின்றது.
அறிவு வலிக்கு மருந்து, இது வலி உணர்வை போக்குவதோடு மட்டுமில்லாமல் பக்கவிளைவாக இன்ப உணர்வையும் நம்மிடமிருந்து போக்கி விடும் எனவே வாழ்வியல் அறிவை வாழ்க்கையில் அனைத்து இன்பத்தையும் அனுபவித்த 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொடுத்தால் மட்டுமே சிறந்தது.
மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை, இந்த நான் என்ற உணர்வில் இருந்து விடுதலையை ஒருவர் அறிவின் மூலம் பெற்றுவிட்டால் அவர் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாகப் பொருள். அப்படி நான் என்ற உணர்வை இழந்தவர்கள் தான் ஞானிகள்.