Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    துன்பத்திற்கு மருந்து ஞானம்

  • All Blogs
  • Understanding knowledge
  • துன்பத்திற்கு மருந்து ஞானம்
  • 15 January 2026 by
    Vijayakumaran
    அறியாமையால் மட்டுமே ஆனந்தமாக வாழ முடியும்!
    அறியாமையில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். இது உங்களுக்கானது அல்ல. துன்பத்தில் வாழ்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால் இந்த கட்டுரையை படித்து பயன்பெறுங்கள், இதை உங்களுக்காக தான் எழுதி இருக்கின்றேன். 

    அறிவில் இரண்டு வகை உண்டு, நான் என்ற உணர்வின் ஆளுமையில் ஐந்து அறிவு மூலம் பகுத்து அறிந்து வாழ்வதற்கு தேவையான அறிவை பெறுவது முதல் வகை. நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டும், வாழ்வதற்காக என்ற நிலையில் இருந்தும் விடுபட்டும் சிந்திக்கும்போது கிடைக்கும் அறிவு இரண்டாவது வகை. இரண்டாவது வகை அறிவை பெற்றவர்கள் தான் ஞானிகள். ஞானநிலையை அடைந்து விட்டால் இன்பத்தை அனுபவிக்க முடியாது, துன்பமும் இவர்களை தீண்டாது. ஆன்மீகவாதிகள் ஞானிகள் அல்ல, ஆன்மீகத்திற்கும் ஞானத்திற்கும் சம்பந்தமில்லை. ஆன்மீகம் உணர்வின் வெளிப்பாடு, ஆன்மீகம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது, ஞானம் அறிவை அடிப்படையாகக் கொண்டது, ஞானம் பெற்று விட்டால் ஆன்மீகத்தில் இருந்து விடுபட்டு விடுவார்கள். ஆத்திகத்திற்கு நாத்திகம் மாற்று அல்ல, நாத்திகமும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதுதான். பாதுகாப்புக்காக தான் ஆன்மீகத்தை விட்டு வெளியில் வர முடியாமல் பலர் அதற்குள்ளேயே அடைத்துக் கொள்கின்றார்கள். 

    விதியின் பயனால் தான் ஞானத்தை நான் பெற்றேன், இதில் எனக்கு எந்த பெருமையும் இல்லை. இயற்கை என் மூலம் உலக மக்களுக்கு ஞானத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக என்னை தேர்வு செய்துள்ளது. இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும்  ஏதோ ஒன்றை செய்ய வேண்டும் என்பதற்காக தான் இயற்கை படைத்துள்ளது. எனக்கு கொடுத்த பணியை நான் செய்யவில்லை என்றால் சிறிது காலம் கழித்து வேறு ஒருவரை தேர்வு செய்யும், என்னோடு நின்று விடாது. 

    ஞானத்தால் நான் பெற்ற அறிவு
    விதி உண்மை. 
    கடவுள் இல்லை. 
    கடவுளைப் போல் நம்முடைய செயலை இயற்கை பார்த்துக் கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக. 
    நம்முடைய சிந்தனைக்கும், செயலுக்கும் நாம் காரணம் அல்ல. இறந்தகால நிகழ்வுகளே காரணம். 
    தற்பெருமையும், நான் என்று என்னை நான் நினைத்துக் கொள்வது மாயை. 
    ஒவ்வொரு உடலும் வாழ வேண்டும் என்பதற்காக நான் என்ற உணர்வோடு வாழ்வது இயற்கையின் அமைப்பு. 
    முன் ஜென்மம், மறு ஜென்மம், ஆத்மா என்று எதுவும் இல்லை, அனைத்தும் கற்பனையே. 
    மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. 
    எல்லா உயிரிலும் நாம் இருக்கின்றோம் என்று எண்ணுவது தான் ஞானத்தின் உச்சம். 
    இவைகள் அனைத்தும் ஆய்வின் மூலம் அறிவியல் பூர்வமாக விவரித்து "குமார் விதிகள்" என்ற புத்தகத்தில் நான் எழுதியிருக்கின்றேன். 

    இயற்கையின் நீதி வேறு, மனிதனின் நீதி வேறு, மனிதன் இது நாள் வரை அவன் பெற்றிருக்கும் அறிவின் அடிப்படையில் நீதியை வகுத்திருக்கின்றான். இயற்கை அனைத்து பொருளையும், அனைத்து உயிரையும் ஒன்றாக பார்ப்பதால் ஒரு பொருள் வேறு ஒரு பொருளாக மாறுவதும், ஒரு உயிர் வேறு ஒரு உயிரை உண்பதன் மூலம் உருவ மாற்றம் அடைவதும் இயற்கையின் நீதியாக உள்ளது. 

    இயற்கையின் நீதிபடி நம்முடைய செயலுக்கான நன்மையும், தீமையையும் நாமோ, நம் சந்ததிகளோ அல்லது நம் சமுதாயமோ அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் நம்முடைய செயலுக்கு நாம் காரணம் அல்ல இறந்த காலமே காரணம். இது மனித நீதிக்கு முற்றிலும் முரணானது. 

    இயற்கையின் நீதியை புரிந்து கொண்டால் புலால் உண்பதும் பாவமல்ல, புலால் உண்ணாமல் வேறு உணவை உண்பதும் தவறல்ல. நம் செயலுக்கு நாம் காரணம் அல்ல என்பதால், குற்றவாளியின் செயலுக்கு குற்றவாளி காரணம் அல்ல இறந்த கால நிகழ்வுகளே காரணம் என்ற புரிதலோடும், குற்றவாளிக்கு தண்டனை கொடுக்காவிட்டால் அவன் தொடர்ந்து குற்றங்களை செய்வான் என்ற புரிதலோடும், குற்றவாளி திருந்துவதற்கு ஏதுவாக அறிவையும், தண்டனையையும் சேர்த்து கொடுக்க வேண்டும். வருங்காலங்களில் குற்றவாளிகள் உருவாகாத வகையில் நிகழ்கால நிகழ்வுகளையும், சுற்றுச்சூழலையும் உருவாக்க வேண்டும். 

    சுற்றுலா சென்று வருவது போல் ஞான நிலைக்கும் அவ்வப்போது சென்று வந்து விட வேண்டும், அங்கேயே தங்கிவிடக்கூடாது அப்போதுதான் சுற்றுலாவும் இன்பத்தை கொடுக்கும் ஞானமும் இன்பத்தை கொடுக்கும். ஞானத்திலேயே இருந்தால் வாழ்க்கை பாழாகிவிடும். உணர்வின் விருப்பப்படி வாழ்வதுதான் வாழ்க்கை. ஞானத்தையும், உணர்வையும் சரியாக கையாள வேண்டும். 

    ஞானத்தால் நான் பெற்ற நன்மைகள் ஏராளம், முதலில் போதும் என்ற மனநிறைவு வந்துவிடும், பொறாமை இருக்காது, போட்டியாகவும், எதிரியாகவும் யாரையும் நினைக்க மாட்டோம், அனைவரும் விதியின் கையில் இருக்கும் பொம்மைகள் என்ற புரிதல் இருப்பதால் யாருக்கும் அஞ்ச மாட்டோம், யாரையும் அடிமைப்படுத்த மாட்டோம், அனைவரையும் சமமாக பாவிப்போம், யாரும் நம்மை கண்காணிக்க தேவையில்லை, எதிர்வினைக்காக இயற்கை நம்மை பார்த்து கொண்டே இருக்கின்றது என்று எண்ணி நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் நடந்து கொள்வோம் இதன் மூலம் பல தீமைகளிலிருந்து ஞானத்தால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். 

    ஞானத்தின் பாதுகாப்பில் நாம் இருந்தால் முதலமைச்சர் பதவியே கிடைத்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிடுவோம் காரணம் ஞானம் பெற்றவர்களுக்கு பதவியும், அதிகாரமும் பாரமாக தான் தெரியும். ஞானம் இல்லாதவர்கள் தான் பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் துன்பப்படுகின்றார்கள். CM, PM போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு ஓய்வில்லாமல் துன்பப்படுவதை பார்த்தால் பாவமாக இருக்கின்றது, இவர்களைப் போல் அனைத்து செல்வங்களையும் பெற்றவர்கள் ஆனந்தமாக வாழாமல் பதவிக்கும், பகட்டுக்கும், தற்பெருமைக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்டு துன்பப்படுவது ஞானம் இல்லாததால் தான். பெரும்பாலானவர்கள் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக துன்பப்படுவது இல்லை, மற்றவர்களை விட தான் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே துன்பப்படுகின்றார்கள். 

    உயர் பதவியில் இருப்பவர்களில் ஆயிரம் பேர் ஞானம் பெற்று விட்டால்! நாட்டில் உள்ள அனைவரின் துன்பமும் பணிபோல் மறைந்துவிடும்.
    in Understanding knowledge
    சுய பரிசோதனை
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us