அறிவற்ற நிலையில் ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் ! இதை படித்து புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் வாழ்த்துவதாக நினைக்கமாட்டார்கள் சாபம் விடுவதாகதான் நினைப்பார்கள், புரிந்துகொண்டால் மணமக்களை வாழ்த்த இதைவிட சிறந்த வார்த்தை இல்லை என்பது புரியும். அறிவற்ற நிலையில்தான் உணர்வை அனுபவிக்க முடியும். இல்லறத்தில் இன்பமாக வாழ இந்த இரண்டு அறிவும் இருக்கக் கூடாது. ஒன்று, இளமைப்பருவத்தில் இருந்தது போன்று யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயக்கூடிய அறிவு இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டாவது, கற்பு என்ற அறியாமை, அழிவற்ற நிலை இருக்கவேண்டும். இந்த அறியாமை இருவரிடமும் இருந்தால் மட்டுமே இன்பமான இல்லற வாழ்க்கையை அனுபவிக்க முடியும். அறிவற்ற நிலையில் ஆனந்தமாக வாழ திருமண வாழ்த்துக்கள்