Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    தகுதி உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பேன்

  • All Blogs
  • Understanding knowledge
  • தகுதி உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பேன்
  • 24 June 2024 by
    Vijayakumaran
    என்னுடைய மகளும், மகனும் எனக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாகவும்,என்னுடைய மனைவியின் ஆதரவின் காரணமாகவும்,புத்தகம் எழுதுவதால் எந்த பயனும் இந்த சமுதாயத்திற்கு இல்லை என்ற விரக்தியில் இருந்த நான் அதிலிருந்து விடுபட்டு மீண்டும் ஒரு முயற்சியாக “குமார் விதிகள் “ என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றேன். தமிழில் நான் எழுதியதை ஆங்கிலத்தில் என்னுடைய மகள் மொழிபெயர்த்து “Kumar laws”என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றார்கள். உடலை ஆளுமை செய்ய யோகா எப்படி உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவசியமோ, அது போல் உணர்வை ஆளுமை செய்ய உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் அறிவு அவசியம். அந்த அறிவை இந்த புத்தகம் அனைவருக்கும் கொடுக்கும்.உணர்வை அறிவால் ஆளுமை செய்தால் தான் ஆறாவது அறிவை நாம் பெற்று மனிதனாக வாழமுடியும். இந்தப் புத்தகத்தில் நான் ஆய்வு செய்து எழுதி இருப்பதை இதுவரை எந்த ஒரு மாகானும் சொன்னது இல்லை, அறிவியல் வல்லுனர்களும் சொன்னது இல்லை. இதை நான் என்னுடைய தற்பெருமைக்காக சொல்லவில்லை, இந்த புத்தகத்தின் முக்கியத்துவத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள நான் எழுதுவதற்கு வேறு வார்த்தை எனக்கு தெரியவில்லை.இந்த புத்தகத்தை நீங்கள் படித்து முடித்த பிறகு உங்களுக்கு புரியும் தற்பெருமை என்ற உணர்வில் இருந்து நான் விடுபட்டு இருந்ததால்தான் என்னால் இந்த புத்தகத்தை எழுத முடிந்தது என்று. நான் ஆறாவது அறிவின் மூலம் பெற்ற அறிவை இறைவன் எனக்கு கொடுத்த வரமாக பார்க்கின்றேன். நான் பெற்ற வரம் இந்த சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் என்று எண்ணுவதால் என்னுடைய சிரமத்தையும் பார்க்காமல் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்க விரும்புகின்றேன். என்னிடம் அரசியல் தலைவர்களும், உயர்பதவியில் இருப்பவர்களும் பயிற்சி எடுத்துக் கொண்டால் நேர்மையானவர்களாக, ஒழுக்கமானவர்களாக, மகான்களாக நிச்சயம் மாறி விடுவார்கள்.மக்கள் மகான்களாக மாறிவிட்டால் நம் பூமி எப்படி இருக்கும் என்று எண்ணும் போது ஆனந்தமாக உள்ளது. நான் பெற்று இருக்கும் அறிவு இந்த உலகில் அறிவில் எந்த உயரத்தில் யார் இருந்தாலும் அவர்களுக்கும் தேவையான அறிவு. என்னிடம் பயிற்சி பெற விரும்புபவர்கள் வாழ்வியல் சம்பந்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளோடு வந்தாலும் அனைத்துக்கும் கணிதம் போல் விடையோடு ரூட்டையும் சொல்லிக் கொடுப்பேன். பயிற்சியின்போது உணர்வில் இருந்து விடுபட்டு ஞான நிலையில் இருக்கும்போது தன்னை ஒரு ஞானியாகவே உணர்வார்கள். அந்த உயரத்திற்கு ஒருவர் சென்று வந்துவிட்டால் அவர் ஒரு மகானாகவே மாறிவிடுவார். இது போன்ற பயிற்சியை இந்த உலகில் யாரும் யாருக்கும் இதுவரை கொடுத்திருக்க மாட்டார்கள் என்று உத்தரவாதம் கொடுக்கின்றேன். தமிழகத்தில் உள்ள Top 100 VVIP களுக்கு மட்டும் பிரத்யோகமாக ஒவ்வொருவர்களுக்கும் தனித்தனியாக பயிற்சி கொடுக்கப்படும். பயிற்சி பெற விரும்புவார்கள் உங்களுடைய விபரத்தை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் நான் எதிர்பார்க்கும் தகுதி உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பேன். இது பயிற்சி அல்ல இயற்கை உங்களுக்கு கொடுக்கும் வரம். தயவு செய்து அனைவருக்கும் பகிருங்கள் அறிவால் உணர்வை ஆளுமை செய்து அனைவரும் ஆனந்தமாக வாழட்டும்.
    in Understanding knowledge
    சர்வதேச புத்தக தினம்
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us