சுய பரிசோதனை
6 November 2025
by
Vijayakumaran
நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும், எந்த ஊரில் இருக்கிறோம் என்பது தெரிந்தால் தான் பயணத்தின் திசை எந்த திசையை நோக்கி என்பதை அறிந்து பயணிக்க முடியும்,அப்போதுதான் செல்ல வேண்டிய ஊருக்கு சரியாக சென்றடைய முடியும். அதுபோல் நம் வாழ்க்கை பயணத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என்பதை முடிவு செய்வதற்கு முன் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு இலக்கை முடிவு செய்தால் தான் வாழ்க்கை பயணம் இனிமையாக இருக்கும்.
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அறிவை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அப்போதுதான் நம்மைப் பற்றிய புரிதல் நமக்குத் தெரியவரும்,நம்முடைய அறிவை எப்படி சுய பரிசோதனை செய்து கொள்வது என்பதை தெளிவுபடுத்தும் ஆய்வு கட்டுரைதான் இது.
அறிவாளி யார் ?
அறிவு இல்லாதவர் யார்?
அறியாமையில் உள்ளவர் யார்?
மூடநம்பிக்கில் உள்ளவர் யார்?
முட்டாள் யார் என்று எப்படி வகைப்படுத்துகின்றீர்கள் என்பதை தொடர்ந்து படிப்பதற்கு முன் ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அப்போதுதான் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்க முடியும். எழுதி வைத்துக்கொள்ளவில்லை என்றால் இந்தக் கட்டுரையை படித்து முடித்துவிட்டு அதான் தெரியுமே என்று புதிய அறிவை பெற முடியாமல் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வீர்கள்.
நீர் தாழ்வான இடத்தை நோக்கி செல்வது இயற்கையின் விதியாக இருப்பது போல், அறிவும் தாழ்வான இடத்தை நோக்கி செல்வதுதான் இயற்கையின் விதி. நான் அறிவாள் யாரை விடவும் உயர்ந்தவன் அல்ல என்ற புரிதலோடு தன்னை கொஞ்சம் தாழ்ந்த இடத்தில் வைத்து கொண்டால்தான் அனைவரிடம் இருந்தும் புதுப்புது அறிவை பெற முடியும்.
அறிவாளி ,அறியாமையில் இருப்பவர் ,மூடநம்பிக்கையில் இருப்பவர் ,முட்டாள் என்று மனிதர்களை நான்காக பிரிக்க முடியாது நம் அனைவரிடமும் அறிவு, அறியாமை, மூடநம்பிக்கை, முட்டாள்தனம் என்று அனைத்தும் இருக்கின்றது காரணம் “நாம் கற்றது கையளவு கல்லாதது உலகளவு “நம்முடைய ஒவ்வொரு செயலிலும் அறிவின் வெளிப்பாடும், முட்டாள்தனத்தின் வெளிப்பாடும் ,அறியாமையின் வெளிப்பாடும் மற்றும் மூடநம்பிக்கையின் வெளிப்பாடும் இருக்கும், இதை நாம் தெரிந்து கொள்வதற்கு தான் சுயபரிசோதனை தேவை .
மருத்துவர் மருத்துவத்தில் அறிவாளி, மண் வெட்டுபவர் மண் வெட்டுவதில் அறிவாளி, மருத்துவருக்கு மண் வெட்டுவதில் அறிவு இன்மை, மண் வெட்டுபவருக்கு மருத்துவத்தில் அறிவு இன்மை, அறியாமை தாழ்த நிலை அல்ல பல இடங்களில் அறிவை விட அறியாமையே கற்பை போல் நன்மையை கொடுக்கும். மற்றவர்களை விட எனக்கு நினைவாற்றல் குறைவு எனவே அறிவு என்ற பெயரில் குப்பைகளை என் நினைவில் சேகரித்து வைத்துக் கொள்வது இல்லை ,இதனால் நான் பல தகவல்களை அறிந்து கொள்ளாமல் அறியாமையில் தான் இருப்பேன்,இந்த அறியாமை தான் புதியதாக சிந்தித்து ஆய்வு கட்டுரைகள் எழுதுவதற்கு எனக்கு பயன்படுகின்றது.
இந்த கட்டுரையை எழுத பல ஆண்டுகளாக ஆய்வு செய்கின்றேன் ஆய்வு செய்ய முடியவில்லை காரணம் நம்பிக்கையையும்,மூடநம்பிக்கையையும், முட்டாள்தனத்தையும் எப்படி வகைப்படுத்துவது என்று தெரியாமல் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. மூடநம்பிக்கையையும், நம்பிக்கையையும் எப்படி பிரித்துப் பார்ப்பது என்று சிந்தித்துக் கொண்டு இருந்தபோது ஒரு அறிவியலாளர் நேர்காணலில் சொன்னார் ஒரு நம்பிக்கை அறிவியல் பூர்வமாக தவறு என்று நிரூபிக்காத வரை அது நம்பிக்கை ,அறிவியல் பூர்வமாக தவறு என்று நிரூபித்து விட்ட பிறகும் அதை நம்பினால் அது மூடநம்பிக்கை என்று தெளிவுபடுத்தினார் .அதை நான் கேட்டதும் நாம் தேடிக் கொண்டு இருப்பதை ஒருவர் எடுத்து கையில் கொடுத்தால் எப்படி இருக்குமோ அது போல் இருந்தது எனக்கு. நாம் முழு ஈடுபாடோடு தொடர்ந்து முயற்சித்தால் எதை அடைய நினைக்கின்றோமோ அதை நிச்சயம் அடைவோம் என்பதற்கு இந்த நிகழ்வு சான்று.
பூமி தட்டையானது ,சூரியன்தான் பூமியை சுற்றி வருகின்றது போன்ற நம்பிக்கைகள் அறிவியலால் தவறு என்று தெளிவு படுத்திய பிறகும் அதை நம்பினால் அது மூடநம்பிக்கை. இது போல் தான் பல மத நம்பிக்கைகள், ஆன்மீக நம்பிக்கைகள், மருத்துவ நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக இருக்கின்றன.
நாம் ஒரு விடயத்தை தெரிந்து இருந்தால் அது அறிவு ,
நாம் ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் அது அறியாமை,
நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளக்கூடிய அறிவு இல்லாமல் மற்றவர் சொல்வதை நம்பினால் அது நம்பிக்கை ,
நாம் ஒரு விடயத்தை தவறு என்று புரிந்து கொண்ட பிறகும் நம்பினால் அது மூடநம்பிக்கை,
நாம் மூடநம்பிக்கையில் செயல்பட்டால் அது முட்டாள்தனம் ,
இந்த அளவீடை வைத்து நாம் ஒவ்வொருவரும் நம் அறிவை சுயபரிசோதனை செய்து கொள்ளலாம், நம் ஒவ்வொரு செயலிலும் அறிவு இருக்கா, அறியாமை இருக்கா,நம்பிக்கை இருக்கா,அல்லது முட்டாள்தனம் இருக்கா என்று சுயபரிசோதனை செய்து நம்மை நாமே திருத்திக் கொள்ளலாம்.
இந்தக் கட்டுரை முட்டாள்களுக்கு பயன்படாது, அறிவு உள்ளவர்களுக்கு தான் பயன்படும். இந்த கட்டுரையை போல் பல கட்டுரைகளை எழுதி விட்டேன் ஒரு முட்டாளை கூட என்னால் திருத்த முடியவில்லை.
நம்முடைய சிந்தனையும் ,செயலும் நம் கட்டுப்பாட்டில் இல்லை தொடர்வினை எனும் இறந்த காலத்தின் தொடர்போடுதான் உள்ளது என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்தேன் .இருப்பினும் முட்டாள்களின் செயலில் மாற்றமில்லை தொடர்ந்து நம்முடைய செயலுக்கு நாம் தான் காரணம் என்று நம்புகின்றார்கள்.
அனுபவம் தான் அறிவு ,அனுபவம் இல்லாமல் படிப்பதன் மூலம் அறிவைப் பெற முடியாது என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்தேன். இருப்பினும் முட்டாள்களின் செயலில் மாற்றமில்லை தொடர்ந்து படித்தவனை தான் அறிவாளியாக நம்புகின்றார்கள்.
நம் சிந்தனை முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தும் தொடர்வினை எனும் இறந்தகால நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இருப்பதால் விதி உண்மை என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்தேன். இருப்பினும் முட்டாள்களின் செயலில் மாற்றமில்லை தொடர்ந்து விதியை மதியால் வெல்லலாம் என்று தான் நம்புகின்றார்கள்.
விதி உண்மை ,விதியை மாற்ற உலகில் எந்த சக்தியும் இல்லை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனதால், கடவுள் எனும் ஒரு சக்தி இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தேன். இருப்பினும் முட்டாள்களின் செயலில் மாற்றம் இல்லை தொடர்ந்து கடவுளை நம்பி தன்னுடைய செல்வங்களையும் ,நேரத்தையும் ஊர் ஊராக சென்று செலவழித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
பகுத்தறிவு ஆறாவது அறிவு அல்ல,ஆறாவது அறிவு என்பது நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திப்பதன் மூலம் பெறுவதே என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்தேன். முட்டாள்களின் செயலில் மாற்றமில்லை தொடர்ந்து பகுத்தறிவை ஆறாவது அறிவாக நம்பி ஐந்து அறிவிலேயே வாழ்கின்றார்கள்.
நம் அறிவுக்கு எதை தெரியப்படுத்த வேண்டும் எதை தெரியப்படுத்தக் கூடாது என்பதை அறிந்து அறிவை அறிவால் ஆளுமை செய்வதுதான் ஏழாவது அறிவு என்றும் ,தேவையில்லாத அறிவை பெறாமல் இருப்பதே நல்லது என்றும், நாம் எதை பார்க்கின்றோமோ ,எதைக் கேட்கின்றோமோ, எதை உணர்கின்றோமோ அது நம்மை நம் அனுமதி இல்லாமலேயே இயக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்தேன். இருப்பினும் முட்டாள்களின் செயலில் மாற்றமில்லை, “களவும் கற்று மற” என்ற பழமொழியை நம்பி தேவையில்லாத அறிவை (அனுபவத்தை )பெற்று சீரழிகின்றார்கள்.
தன்னுடைய பிள்ளை சாப்பிட வேண்டும் என்பதற்காக உலகிலேயே இது போன்ற சுவையான உணவு எதுவும் இல்லை என்று தாய் சொல்வது தற்பெருமை அல்ல, பிள்ளை சாப்பிட வேண்டும் என்ற நோக்கமே.அதுபோல் உலகிலேயே என்னுடைய ஆய்வு கட்டுரையை போல் யாரும் எழுதியது இல்லை என்று நான் சொல்வது தற்பெருமைக்காக அல்ல அனைவரும் படித்து புரிந்து கொண்டு புதிய அறிவின் பலனை அடைய வேண்டும் உலகில் சமாதானமும்,சமத்துவமும், மகிழ்ச்சியும் ஏற்பாட வேண்டும் என்பதற்காகவே.
அறிவாள் நான் யாரை விடவும் உயர்ந்தவன் அல்ல என்று என்னை நான் அறிவேன். அதேபோல் என்னை விட யாரும் அறிவில் உயர்ந்தவர் இல்லை என்பதையும் அறிவேன்.
மற்றவருடன் ஒப்பிடும்போது மூளையின் செயல் திறனும், நினைவாற்றலும் எனக்கு குறைவு தான். என்னை ஐந்து வயதில் முதல் வகுப்பில் அப்பா சேர்த்தார்கள்,நான் “அ” போட ஆறு மாதம் ஆனது, எனக்கு அப்பாதான் கைபிடித்து சொல்லிக் கொடுப்பார், சொல்லிக் கொடுத்துவிட்டு அழுவார் எனக்கு படிப்பு வராது என்று எண்ணி ,இரண்டு வயது வரை எனக்கு அம்மா தாய்ப்பால் கொடுத்ததால் தான் மந்தமாக இருக்கிறேன் என்று சொல்லி அம்மாவை திட்டுவார் ,”அ”வை கோட்டுக்கு மேலேயே எழுதினால் சரியாக எழுதுவேன் தனியாக எழுதச் சொன்னால் தலைகீழாக தான் எழுதுவேன்.
நினைவாற்றல் எனக்கு குறைவு என்பதால் பொய் சொல்ல முடியாது ,பொய் சொல்ல முடியாது என்பதால் அனைத்திலும் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது, அதனால் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டிய கட்டாயம் சிறுவயதிலிருந்தே எனக்கு ஏற்பட்டது, அதன் காரணமாக தேவையில்லாத அறிவு எனக்குள் வருவது தடைப்பட்டு விட்டது.மற்றவர்களை விட என்னிடம் தேவையில்லாத அறிவு குறைவாக இருப்பதால்தான் தெளிவாக சிந்தித்து இதுபோன்ற ஆய்வு கட்டுரைகளை எழுத முடிகின்றது.
மருத்துவரை இரண்டு நோயாளிகள் பார்த்து காய்ச்சலுக்கு மருந்து வாங்கி வந்தார்கள் முதல் நோயாளி நேராக வீட்டுக்குச் சென்று மருந்தை சாப்பிட்டார் காய்ச்சல் குணமாகிவிட்டது, இரண்டாவது நோயாளி வெளியே வந்து ஒருவரிடம் கேட்டார் இந்த மருத்துவர் கொடுக்கும் மருந்து காய்ச்சலுக்கு வேலை செய்யுமா என்று அதற்கு அவர் குரங்கை நினைக்காமல் மருந்தை சாப்பிட்டால் இவர் கொடுக்கும் மருந்து வேலை செய்யும் என்றார் , நோயாளி வீட்டுக்குச் சென்று மருந்தை கையில் எடுத்தார் குரங்கை நினைக்க கூடாது என்பது நினைவுக்கு வந்தது மருந்தை உட்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து பலமுறை முயற்சித்தும் குரங்கை நினைக்காமல் மருந்தை சாப்பிட வேண்டும் என்ற தான் பெற்ற அறிவே தடையாக மருந்தை கையில் எடுத்தாலே குரங்கு நினைவுக்கு வந்து விடுகின்றது இதற்கு பெயர் தான் “அறிவு சூனியம்”.இங்கு பலரை அறிவு என்ற பெயரில் அறிவு சூனியம் தான் இயக்குகின்றது.
உங்கள் அளவுக்கு அதிக அறிவு என்னிடம் இல்லை என்றாலும் உங்களிடம் இல்லாத அறிவை உங்களுக்கு கொடுக்கும்.