“புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதி 10 ஆண்டுகள் ஆகின்றது ஆனால் இந்த புத்தகம் இதுவரை இந்த சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, காரணம் இந்த புத்தகத்தில் உள்ள தகவலை அறிவாக பெறுவதற்கு வாசகர்களிடம் அறிவு (அனுபவம்)இல்லை. அறிவு என்பது அனுபவத்தால் பெறுவது மட்டுமே.
கண்ணால் பார்த்து படித்து ஒரு தகவலை பெறுவதற்கும், காதால் கேட்டு ஒரு தகவலை பெறுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, இரண்டும் ஒன்றுதான்.
பழங்காலத்தில் குரலை பதிவு செய்யக்கூடிய தொழில்நுட்பம் இல்லாததால் எழுத்து மட்டுமே தகவலை கடத்தும் சாதனமாக இருந்தது, தகவலை ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் கடத்துவதாலேயே அறிவையும் கடத்த முடியுமா என்றால் முடியாது என்பதே என்னுடைய ஆய்வின் முடிவு. எனவே அனுபவம் என்ற அறிவு இல்லாமல் படிப்பதாலோ, கேட்பதாலோ அறிவைப் பெற முடியாது.
புத்தகம் படித்தால் அறிவை பெற முடியும் என்று எண்ணுவதும், படித்தவர்களை அறிவாளியாக பார்ப்பதுவுமான அறியாமை இந்த உலகில் உள்ளவரை சர்வதேச புத்தக தினத்தை கொண்டாடுவோம்.
அறிவைப் பற்றிய புரிதலுக்கு நான் எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை படித்து பயன்பெருங்கள்.