புத்தரும், வள்ளலாரும் சமத்துவத்தை மக்களிடம் போதித்தது ஞானத்தின் வெளிப்பாடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அம்பேத்கார் சமத்துவத்தை சட்டமாக்கியது உணர்வின் வெளிப்பாடு, உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியார் சமத்துவத்தை பேசியது அரசியல் வெளிப்பாடு,
சமத்துவம் பேசும் அனைவருக்கும் பல காரணம் இருக்கின்றது. இங்கு சமத்துவம் பேசுகின்றவர்கள் உயர்ந்த உடன் மற்றவர்களை அடிமைப்படுத்தும் குனம் இயல்பாகவே உள்ளது. மனிதன் சமத்துவம் பேசுவது சுயநலத்துக்காகவே, மனிதன் மிருகம் போல தான் உயர்ந்துவிட்டால் தாழ்ந்தவனை அடிமைப்படுத்தாமல் இருக்க மாட்டான், எனவே சமத்துவத்தை சரியாக போதித்தால் மட்டுமே சமுதாயத்தில் சமத்துவம் எப்போதும் நிலைத்து நிற்கும்.
“உன்னுடைய செயலுக்கு நீ காரணமல்ல “விதியே உன்னுடைய செயலை தீர்மானிக்கின்றது. நேற்றைய நிகழ்வுகளே இன்றைய நிகழ்வுகளுக்கு காரணம், இன்றைய நிகழ்வுகளே நாளைய நிகழ்வுகளுக்கு காரணம், இதுவே தொடர்வினை அறிவியல் தத்துவம். இதன் பெயர்தான் வீதி, இந்த விதியை மாற்ற எந்த மதத்திலும் கடவுள் இல்லை.
விதியே வலியது !விதியே கடவுள் !!
மாடு நம்மை முட்டவந்தால் விதியின்படிதான் அனைத்தும் நடக்கும் என்று நம்பி ஓடாமல் நிற்கலாமா, அல்லது ஓடலாமா என்பதுதான் அனைவரின் கேள்வியும்.
விதியை சரியாகப் புரிந்து கொண்டவர்களுக்கு இந்த கேள்வியே எழாது, விதி உண்மை ஆனால் எது விதி என்பது நிகழ்வுக்கு முன்பே யாரும் தெரிந்து கொள்ள முடியாது. முன்கூட்டியே விதியை தெரிந்து கொள்ள முடியாது என்பதும் விதியே.
விதியை தவறாக புரிந்து கொண்டு ஓடாமல் இருந்தால் அதுவும் விதியே, விதியை சரியாக புரிந்து கொண்டு ஓடினால் அதுவும் விதியே,விதியைப் பற்றி எதுவுமே தெரியாமல் எது செய்தாலும் அதுவும் விதியே.
விதியை உண்மை என்று சரியாக நாம் புரிந்து கொண்டால் நம்முடைய செயலை, முயற்சியை யாரும் ஒருபோதும் கைவிடப் போவதில்லை. மாறாக செயல் நிறைவுபெற்றப்பிறகு நாம் பெற்ற வெற்றிக்கும், தோல்விக்கும் விதியே காரணம் என்று நாம் என்னும்போது எளியவரை ஏளனம் செய்ய மாட்டோம், வளியவரிடம் வணங்கி நிற்க மாட்டோம், இந்த புரிதலே சமுதாயத்தில் சமத்துவத்தை உருவாக்கும்.
தவறு செய்தவர்களை குற்றவாளியாக பார்க்காமல் சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவராக பார்க்கும் நிலை உருவாகும். இதனால் புதிய நீதி உருவாகும். விதி ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் இணைக்கும் பாலம், எனவே மனிதர்களுக்கிடையே சாதி, மதம்,மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, அறிவு, பொருளாதாரம்,ஆகிய அனைத்திலும் சமத்துவம் உருவாக, விதியை மூடநம்பிக்கையாக பார்க்காமல் விதியை அறிவியலாக பார்க்க வேண்டும்.