உன்னால் செய்ய முடிந்ததைதான் நீ செய்ய முடியும், உன்னால் முடியாததை நீ செய்ய முடியாது. எனவே சாதனையாளர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. என்னை போல் யாரும் இந்த உலகில் இல்லை என்பதால் நான் சாதனையாலரா? என்னை போல் நான் இருப்பது என் இயல்பு, இது எப்படி சாதனையாக முடியும்.. உசேன் போல்ட் பிறப்பாலும் வளர்ப்பாலும் வேகமாக ஓடக்கூடிய திறனை பெற்று இருக்கின்றார் என்பது அவருடைய இயல்பு இதை சாதனை என்று எப்படி சொல்ல முடியும். இவர் வேகமாக ஓடுவதால் இந்த உலக மக்களுக்கு என்ன பயன்? பயனற்ற சாதனைகளை விட, மற்றவர்களுக்கு சிறு சேவை செய்கின்றவர்களை இந்த உலகம் பாராட்டினால் உலகில் மனித நேயம் மலரும். எனவே நமக்கு சாதனையாளர்கள் தேவை இல்லை, அரசு சாதனையாளர்களுக்கு விருதுகள் கொடுப்பதை தவிர்த்து மக்களுக்கு சேவை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும். சேவை உள்ளம் உள்ளவர்களை பாராட்டுவோம்!போற்றுவோம்!வாழ்த்துவோம்!