15 June 2025
by
Vijayakumaran
திறமையான திருடனை இந்த சமுதாயம் திருடனாக ஏற்றுக் கொள்ளாது. திறமை இல்லாமல் திருடி மாட்டிகொண்டவனை தான் திருடனாக ஏற்றுக்கொள்ளும். அதுபோல் பதவிக்காகவும், பணத்துக்காகவும், மக்களிடம் சாதி உணர்வை தூண்டியும், சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லியும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் தலைவர்களைத் தான் ஆளுமை மிக்க தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்,நேர்மையான, ஒழுக்கமான, அனைவரையும் சமமாக பார்க்கும் திறமையான அரசியல் தலைவர்களை மக்கள் அரசியல் தலைவராகவே ஏற்க மாட்டார்கள்.இது மக்களின் தவறல்ல, இது இயற்கையின் நீதி.
அனுபவ அறிவு இல்லாமல் தகவலை அறிவாக பெற முடியாது என்பதால் மக்களிடம் எந்த அறிவு இருக்கின்றதோ அதை சார்ந்து எழுதுகின்ற எழுத்துக்கள் தான் மக்களிடம் சென்றடைகின்றன, அதை எழுதுகின்ற எழுத்தாளர்களைத்தான் மக்கள் அறிவாளியாக பார்க்கின்றார்கள்.உண்மையில் புரியாத, ஏற்க முடியாத புதிய எழுத்துக்கள் தான் நமக்கு புதிய அறிவை கொடுக்கும்.
நாம் இயற்கையால் எப்படி இயக்கப்படுகின்றோம் என்பதை பற்றி நான் ஆய்வு செய்து எழுதிய “குமார் விதிகள்”என்ற புத்தகத்தை படிக்க:-
https://drive.google.com/file/d/1uO8Dul1V859ifE8qT_s0DNNBQDaU3X_4/view?usp=sharing
சாதியைப் பற்றி ஆய்வு செய்து எழுதி இருக்கும் இந்த கட்டுரையை படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றால் “குமார் விதிகள்” என்ற புத்தகத்தை படித்த பிறகு படித்தால் மட்டுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.நான் ஆய்வு கட்டுரைகள் எழுத பேனாவை திறந்து விட்டாலே முழுமையாக நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு எந்த ஒரு விருப்பும்,வெறுப்பும் இல்லாமல் நான் பெற்றிருக்கும் அறிவு என்ன சொல்கின்றதோ அதை மட்டுமே பதிவு செய்வேன். இந்த கட்டுரையை படிப்பவர்களும் என்னை போல் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு ஆறாவது அறிவைப் பெறுவதற்கு, தான் எந்த சாதி என்பதை மறந்து படித்தீர்கள் என்றால் என்னுடைய ஆய்வு கட்டுரையை முழுமையாக ஏற்றுக் கொள்வீர்கள்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருக்குறளை சமத்துவத்துக்கு மேற்கோள் காட்டுவதும்,
கடவுள் இல்லை என்பதற்கு பெரியாரை மேற்கோள் காட்டுவதும்,
கடவுள் நம்பிக்கைக்கு ராமாயணத்தை மேற்கோள் காட்டுவதும் அறிவு அல்ல.
இவர் சொல்லியிருக்கின்றார், அவர் சொல்லி இருக்கின்றார் என்பது அனைத்தும் தான் சொல்ல வரும் கருத்தை நம்ப வைப்பதற்கான யுத்தியே ஆகும். நம்முடைய அனுபவத்தை மேற்கோள்காட்டி அங்கிருந்து நம்மை எது அழைத்துச் செல்கின்றதோ அந்த எழுத்து மட்டுமே நமக்கு அறிவை கொடுக்கும். இந்த அளவுகோலை வைத்துக் கொண்டு நீங்கள் படித்தால் எது நம்ப வைக்கின்ற எழுத்து, எது புரிய வைத்து அறிவை கொடுக்கின்ற எழுத்து என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
நாம் ஒரு கல்லை போல் தான், வெளிசக்தி இயக்கினால் தான் நாம் இயங்க முடியும் நம்முடைய பிறப்பும், இறப்பும், சிந்தனையும், செயலும் அனைத்தும் விதிப்படிதான் நடக்கின்றது என்பது என்னுடைய ஆய்வின் முடிவு.நம்முடைய செயலுக்கு நாம் காரணம் அல்ல, ஆனால் நம் செயலுக்கான பலனை நாம் தான் அனுபவிக்க வேண்டும்.இந்த முரண்பாடான இயற்கையின் நீதிதான் நம்மை இயக்கிக் கொண்டு உள்ளது.
நான் என்ற உணர்வு மாயை, நான் என்று நாம் நினைத்துக் கொண்டுள்ள இந்த உடல் வாழவேண்டும் என்பதற்காகவே நான் என்ற உணர்வோடு வாழ்கின்றது.இந்த புரிதலோடு ஒரு கணம் நான் என்ற மாயை உணர்வில் இருந்து விடுபட்டு பார்த்தால் அனைத்து உயிரிலும் நம்மை நாம் பார்க்கலாம்.பிறப்பால் இங்கு யாரும் உயர்ந்தவரும் அல்ல, தாழ்ந்தவரும் அல்ல. எல்லா உயிர்களும் இயற்கையின் முன் சமம் என்ற புரிதலோடு தான் நான் இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.
நாகரீகம் வளர வளர மனிதர்களுக்கு இடையில் சண்டை, சச்சரவு இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக உரிமைகளையும் உறவு முறைகளையும் ஏற்படுத்தி புதிய நீதியை உருவாக்கி வாழ ஆரம்பித்திருப்பான் மனிதன். காலப்போக்கில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சனாதன தர்மம் என்ற நீதி உருவாகி இருக்கும். காலத்துக்கு ஏற்ப சமுதாய அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப நீதி மாறவேண்டும் என்பதற்கு சனாதன தர்மத்தின் நீதியை இன்று சமுதாயம் ஏற்காததே சாட்சி. யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுக்கு தான் நீதி பெயர்.
சனாதன தர்மத்தை கடைபிடித்த காலத்தில் பிறப்பால் ஒருவர் அவர்களின் குலத் தொழிலை தான் செய்ய வேண்டும் என்பது அடிமைத்தனமாக இல்லாமல் அவர்களுக்கான உரிமையாக கூட இருந்திருக்கலாம். நம்முடைய குடும்ப வாழ்க்கை முறையில் மனைவி மீது கணவனுக்கும் இருக்கும் உரிமையும், கணவன் மீது மனைவிக்கு இருக்கும் உரிமையும் மேலை நாட்டில் இருப்பவர்களுக்கு அடிமைத்தனமாக தான் தெரியும்.அது போல் குலத் தொழிலை இன்றைய பொருளாதார சூழலில் ஒப்பிட்டு அடிமைத்தனமாக பார்ப்பது தவறு.
என்னுடைய அனுபவத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களுக்கு இடையில் பெரிய அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லை, அனைவரும் ஒரே கம்பங்கூழ், கேழ்வரகு கூழைதான் சாப்பிட வேண்டும்.என்னுடைய தாத்தா நிலத்தில் வேலை செய்யும் பொழுது வேலை செய்யும் தாழ்த்தப்பட்டவரும் என்னுடைய தாத்தாவும் ஒரே மரத்தடியில் ஒரே கூழைத்தான் குடித்தார்கள்.அவர்கள் கட்டியிருந்த கோமணத்தில் கூட உயர்வு தாழ்வு இல்லை. ஆனால் இன்று ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வை பார்க்க சகிக்க முடியவில்லை,இன்று பணம் இல்லாதவன் மிருகத்தை விட கேவலமாக நடத்தப்படுகின்றான்.இன்றைய சூழலோடு பழைய நீதியை ஒப்பிடுவதும் தவறு,பழைய நீதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதும் தவறு.காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனின் உரிமைகளும் துல்லியமாக வகுக்கப்பட்டு புதிய நீதியை உருவாக்க வேண்டும்.
குடும்ப வாழ்க்கை முறை என்ற நாகரீகத்தின் வளர்ச்சி தான் சாதி, குடும்பங்களின் கூட்டமைப்பு தான் சாதி,சாதி என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல,ஒரு இனத்தை அல்லது கூட்டத்தைக் குறிக்கும் சொல் தான் சாதி, சாதி அடையாளம் என்பது தனிமனித பிறப்புரிமை அந்த உரிமையை பயன்படுத்திக் கொள்வதும், பயன்படுத்தாததும் அவரவர் விருப்பம்,ஆனால் யாரும் சாதி அடையாளத்தை பயன்படுத்தக் கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சாதிப் பெயரை சொல்லக்கூடாது என்றோ சாதி ஒழிய வேண்டும் என்றோர் எங்கும் சொல்லப்படவில்லை, மாறாக சாதிய ஏற்றத்தாழ்வு தான் ஒழிய வேண்டும் சாதிகளுக்கு இடையில் சமத்துவம் உருவாக வேண்டும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது,சாதியை ஒழிக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த செயல் திட்டமும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
குடும்பம் என்ற நாகரீகத்தால் உருவான குடும்பங்களின் குடும்பமான சாதி உறுதியாக இருந்தால்தான் குடும்பம் என்ற நாகரீகம் வாழ்ந்து கொண்டு இருக்கும்.குடும்ப ஒழுக்கம் இல்லாத ஒழுக்கக்கேடான மனிதர்கள் தான் திருமணத்திற்கு முன் காதலிப்பதை புனிதமானதாக சொல்லி இளைஞர்களை சீரழிக்கின்றார்கள்.
நான் எழுதிய சாதி நல்லிணக்க கட்டுரையை படிக்க:-
https://drive.google.com/file/d/1PCnrLhCQkKZBihOeZbSxj1zbQiOoCtqC/view?usp=share_link
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லாத நிலையில் சாதி ஒழிய வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் சொல்வது தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை பெறுவதற்கும், பெரும்பான்மை சாதியை அல்லாதவர்கள் சமூக நீதிக்கு எதிராக ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்காகவும் தான் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்கள்.
சாதிய ஏற்றத்தாழ்வு ஒழிய வேண்டும் என்பதற்கும் சாதி ஒழிய வேண்டும் என்பதற்கும் வேற்றுமை தெரியாமல் பகுத்தறிவை ஆறாவது அறிவாக நினைத்துக் கொண்டு இருக்கும் பகுத்தறிவாளர்கள் சாதி ஒழிய வேண்டும் என்று சொன்னால்தான் நம்மை அறிவாளியாக இந்த உலகம் பார்க்கும் என்று எண்ணி சாதியை பற்றிய புரிதல் இல்லாமல் பலர் சாதி ஒழிய வேண்டும் என்று நடிக்கின்றார்கள்.
சாதி சமத்துவம்,சமுதாய நடவடிக்கைகளுக்கு மட்டும் தான் பொருந்தும் என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தனிமனித உரிமைக்குள் யாரும் சாதி சமத்துவம் கோரமுடியாது.
நான் சம்பாதித்த பணம் என்னுடையது, என்னுடைய வீடு, என்னுடைய குடும்பம், என் குடும்ப சொத்து, நான் சம்பாதித்தது எனது பிள்ளைகளுக்கு என்ற உரிமை, தனி மனித உரிமை இதில் மூன்றாவது நபர் சமத்துவம் கோரமுடியாது.இந்த நிலையில் மூன்றாவது நபர் அத்துமீறி ஒருவர் வீட்டுக்குள் சென்று சாதி சமத்துவம் வேண்டும் என்று கூற என்ன உரிமை இருக்கின்றது.திருமணத்துக்கு முன் காதல் என்ற ஒழுக்கக்கேடான செயலால் ஒரு தனி மனிதனின் உரிமைகளும், உடைமைகளும் பறிக்கப்படுவது நீதி அல்ல.
காதலைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதிய கட்டுரையை படிக்க:-
https://drive.google.com/file/d/1eMsQhH60FCdUoEHucTafuDciXBF2laNj/view?usp=share_link
கற்காலம் முதல் இன்றைய காலம் வரை ஆணும், பெண்ணும் காதலித்து கொண்டு தான் இருக்கின்றார்கள் எனவே காதல் புதியது அல்ல. நாகரீகம் வளர வளர யாரை காதலிக்க வேண்டும் எப்போது காதலிக்க வேண்டும் என்று உறவுகளின் சம்மதத்துடன் திருமணத்திற்கு பிறகு இருவரும் காதலிக்கும் உரிமை திருமணத்தால் வந்த பிறகு காதலித்தார்கள்,இதனால் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு சமுதாயத்தில் அமைதி நிலவியது. தற்போது கற்கால மனிதர்களைப் போல் யார் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்பதால் தனிமனித உரிமைகளுக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நாகரிகம் வளர வளர ஒவ்வொரு மனிதனின் உரிமைகளும் துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டும். சமத்துவத்தை தவறாக புரிந்து கொண்டு அனைத்திலும் அனைவருக்கும் உரிமை என்ற நிலை உருவானால் மனிதன் மீண்டும் மிருகத்தைப் போல் சண்டை போட்டு செத்து விடுவான்.
சனாதன தர்மத்தின் படி உயர்ந்த சாதியினர் கடவுளின் தலையில் இருந்து பிறந்தவர்கள், தாழ்ந்த சாதியினர் கடவுளின் பாதத்தில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்வது மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட கதைகள். என்னுடைய ஆய்வுப்படி கடவுள் இல்லை.எனவே சாதியால் யாரும் உயர்ந்தவரும் அல்ல தாழ்ந்தவரும் அல்ல இயற்கையின் முன் பிறப்பால் அனைவரும் சமம்.
பிறப்பால் அனைவரும் சமம் என்றாலும் யாருடைய தனிமனித உரிமையிலும் சமத்துவம் கோரமுடியாது நீயும் நானும் சமம் என்று சொல்லிக்கொண்டு மற்றவர் சட்டை பையில் கையை விட முடியாது, காரணம் சமத்துவம் என்பதற்கு எல்லை உண்டு.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அனைத்து சாதியினரும் சமம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு உயர்ந்த சாதியினரைப் போல் தாழ்ந்த சாதியினரும் செருப்பணிந்து சாலையில் நடக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டோம்.
தேநீர் கடையில் அனைத்து சாதியினரும் சமமாக அமர்ந்து தேநீர் அருந்துவதை ஏற்றுக்கொண்டோம்.
பொது கோயிலில் தாழ்ந்த சாதியினரும் உள்ளே செல்லலாம் என்பதை ஏற்றுக்கொண்டோம்,
தாழ்ந்த சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை ஏற்றுக்கொண்டோம்,
கல்வி, வேலைவாய்ப்பில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற சமத்துவத்தையும் ஏற்றுக்கொண்டோம்,
பொது இடங்களில் சாதி வேற்றுமை இல்லாமல் அனைவருக்கும் சம உரிமை என்பதையும் ஏற்றுக்கொண்டோம்,
பொது சுடுகாட்டில் அனைத்து சாதியினரும் சமம் என்பதையும் ஏற்றுக்கொண்டோம்.
சாதி சமத்துவத்துக்கான எல்லை இதுவரை தான்.
எல்லையை மீறி ஒரு குடும்பத்தை சிதைத்து சாதி சமத்துவம் கோறுவது தனிமனித உரிமைக்கு முற்றிலும் எதிரானது.
சாதி சமத்துவத்தை உயர்ந்த சாதியினர், தாழ்ந்த சாதியினர்களுக்கு பாவம் பார்த்து கொடுத்த பிச்சை அல்ல,உலக அரசியல் மாற்றத்தால் இந்தியாவில் ஜனநாயக ஆட்சி ஏற்பட்டதால் தாழ்ந்த சாத்தினர் அவர்களுடைய உரிமையை உரிமையோடு பெற்றதுதான் சாதி சமத்துவம்.
சாதி சமத்துவம் தாழ்த்தப்பட்டவரின் உரிமையாக இருப்பது போல்,சாதி ஒவ்வொரு தனிமனிதனுடைய உரிமை. சாதி குடும்பங்களின் குடும்பம் என்பதால் ஒருவருக்கு தன்னுடைய குடும்பத்தின் மீது எப்படி உரிமை இருக்கின்றதோ அதே போல் அவருடைய ஜாதியை பாதுகாக்கின்ற உரிமையும் இருக்கின்றது. இந்த நிலையில் சாதி ஒழிய வேண்டும் என்று தாழ்ந்த சாதியினர் சொல்வது தனிமனித உரிமைக்கு எதிரானது.
சிலர் குடும்ப அமைப்போடு வாழாமல் விருப்பப்படி வாழ்வது போல், சாதி பார்க்காமல் வாழ்வது அவரவர் உரிமை இதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் தன்னை சமுதாய சீர்திருத்தவாதியாக காட்டிக் கொள்ள மக்களிடம் சமத்துவம் உருவாக சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்வது தவறு.உறுதியாக சொல்கின்றேன் என்னுடைய ஆய்வுப்படி மனிதர்கள் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவே முடியாது காரணம் ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவர்களிடமிருந்து வேற்றுமைபடுத்தி தனித்துவமாக காட்டிக் கொள்ளவே விரும்புகின்றான்.
சாதி வேற்றுமையைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை படிக்க:-
https://drive.google.com/file/d/1CYoYmxc8ff12fGHQcxVVhcBSTOGiXl-R/view?usp=share_link
இன்றைய சூழலில் சாதி வேற்றுமையை விட பொருளாதாரம், கல்வி, வேலை என்று பல வேற்றுமைகளில் மக்கள் வாழ்கின்றார்கள் எனவே சாதியை ஒழித்தால் சமத்துவம் உருவாகும் என்பது அடிமட்ட முட்டாளின் கருத்து. பணம் பொருளாதார ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதால் மக்களிடையே பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த பணத்தை ஒழிக்க முடியுமா ?சிந்திக்க வேண்டும்.
பொதுவெளியில், சமுதாயம் மற்றும் அரசு நடவடிக்கையில் அனைத்து சாதியினரும் சமம் என்பது அனைவருக்கும்மான உரிமை, இங்கு அனைவரும் சமம். ஆனால் தனிமனித உரிமையில் பிறப்பால் அனைவரும் சமம் அல்ல, பிறப்பால் தாய், தந்தை, தாத்தா, பாட்டியின் நோயையும், ஆரோக்கியத்தையும் பெறுவது போல் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்துக்கும் பிறப்பால் அவர்களுடைய வாரிசுகளே உரிமையாளர்கள், இந்த நீதி தனிமனித உரிமையை பாதுகாக்கின்றது, இந்த உரிமையில் வாரிசு அல்லாதவர்கள் உரிமை கோர முடியாது, சாதி சமத்துவம் கோற முடியாது.எனக்கும் சிகப்பு ரத்தம் தான் ஓடுது, உனக்கும் சிகப்பு ரத்தம் தான் ஓடுது என்ற சமத்துவம் இங்கு செல்லாது.
ஒரு குடும்பத்தில் குடும்ப உறவுகளுக்கு இருக்கும் உரிமையை சாதி சமத்துவத்தால் யார் ஒருவரும் பறிக்க முடியாது,திருமணத்துக்கு முன் காதல் என்ற ஒழுக்கக்கேடான செயலின் மூலம் குடும்ப உறவுகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களுடைய தனி மனித உரிமையில் தலையிட்டு அங்கு சாதி சமத்துவம் கோறுவது நீதிக்கு எதிரானது. இதை நீதித்துறையும், காவல்துறையும் புரிந்து கொள்ளாமல் செயல்படுவது தனிமனித உரிமைக்கு எதிரானது.
ஆயிரத்தில் ஒருவர் கூட ஆறாவது அறிவை பெறும் நிலையில் இல்லை,தனக்கு எது நன்மையோ அதையே சரி என்று என்னும் நிலையில்தான் மனிதர்கள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.அறிவால் முதிர்ச்சி அடையவே இல்லை என்பதுதான் நேற்றைய நிகழ்வுகளும், இன்றைய நிகழ்வுகளும் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. அரசர்கள் ஆண்ட காலத்தில் அதிகாரத்தில் இருந்த உயர் சாதியினர் தனக்கு சாதகமாக சனாதன தர்மம் என்ற நீதியை உருவாக்கி மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வை நீதியாக்கி உழைக்காமலேயே அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்து வந்தார்கள். அதுபோலவே இன்று சாதி சமத்துவம் என்று சொல்லிக்கொண்டு திருமணத்திற்கு முன் காதலிக்கும் ஒழுக்க கேடான செயலின் மூலம் குறுக்கு வழியில் உழைக்காமல் அடுத்தவர் செல்வத்தை அபகரிக்க சாதி சமத்துவம் பேசுகின்றனர்.
சாலையில் நாம் செல்லும்போது எதிரில் வருபவர் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக இடது புறமாக செல்ல வேண்டும் என்ற ஒழுக்கத்தை நமது நாட்டில் சட்டமாக்கி உள்ளார்கள், இதே நடைமுறை உலகம் முழுவதும் இல்லை, பல நாடுகளில் வலது புறமாக தான் செல்கின்றார்கள்.இதில் எது சரி, எது தவறு என்றால் இரண்டும் சரிதான் ஆனால் ஒரே நாட்டில் இரண்டு விதமாகவும் போகலாம் என்றால்தான் அது தவறு, அது விபத்தை ஏற்படுத்தும்.
நம்முடைய வாழ்க்கை முறையும், மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை முறையும் வேறுவேறு. நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக குடும்பம் என்ற வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருவதால் அதன் பரிணாம வளர்ச்சியாக பல குடும்பங்களின் கூட்டமைப்புக்கு பெயரிட்டு அழைக்கும் பழக்கத்தின் மூலம் அதுவே சாதியாக இன்று உள்ளது.
மேலை நாடுகளில் குடும்ப வாழ்க்கை முறையே இல்லாததால் தான் அங்கு சாதி இல்லை, சாதி இல்லாததால் அங்கு வேற்றுமை இல்லாமல் வாழ்கின்றார்கள் என்று எண்ணி விடக்கூடாது அங்குதான் மாத வேற்றுமை, இனவேற்றுமை, நிறவேற்றுமையும் அதிகம் உள்ளது.எனவே உலகம் முழுவதும் மனிதர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மொழியாலோ, நிறத்தாலோ, இனத்தாலோ, மதத்தாலோ,பொருளாதாரத்தாலோ அல்லது ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தி அல்லது வேற்றுமைப்படுத்தி தான் வாழ்கின்றார்கள். இது மனிதனின் இயல்பு, இதை சரி செய்து மனிதர்களுக்கு இடையே நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கு தான் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப சட்டங்களும், நீதிகளும் வகுக்கப்பட்டுள்ளது.
குடும்ப அமைப்பு இல்லாத மேலை நாடுகளில் 18 வயதுக்கு பிறகு யார் எப்படி வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் என்று தனிமனித உரிமை இருப்பது போல், குடும்ப வாழ்க்கை முறையில் வாழும் நம்முடைய நாட்டிலும் தனிமனித உரிமைகள் இருப்பது, ஒரே சாலையில் இடது புறமாகவும் செல்லலாம், வலது புறமாகவும் செல்லலாம் என்பதற்கு சமம். இது குடும்ப வாழ்க்கை நாகரிக முறையையே அழித்துவிடும். நம்முடைய குடும்ப வாழ்க்கை முறைதான் உலகிலேயே மேன்மையான நாகரீகம். எனவே குடும்ப வாழ்க்கை முறையை பாதுகாக்க புதிய சட்டங்களை அரசு இயற்றுவது காலத்தின் கட்டாயம். குடும்ப வாழ்க்கை முறையை பாதுகாக்க காதல் என்ற பெயரில் ஒரு குடும்பத்துக்குள் வேறு ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் ஆத்துமீறி நுழைவதை சட்டத்தால் தடுக்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மாறாக யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வது தனிமனித உரிமை என்று ஒருவர் குடும்பத்தை விட்டு சென்று விட்டால்,தனக்கான கடமையை தன் குடும்பத்துக்கு செய்யாதவர் தனக்கான உரிமையை தன் குடும்பத்திடம் கேட்பது நீதி அல்ல என்ற அடிப்படையில், அவர் தான் பிறந்த குடும்பத்தின் மீது எந்த உரிமையும் கோர முடியாது என்ற புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும், அப்போதுதான் மேன்மையான குடும்ப வாழ்க்கை முறை பாதுகாக்கப்படும்.
இது என்னுடைய பணம், அது உன்னுடைய பணம்
இது என்னுடைய வண்டி, அது உன்னுடைய வண்டி
இது என்னுடைய வீடு, அது உன்னுடைய வீடு
இவர்என்னுடைய மனைவி, அவர்உன்னுடைய மனைவி
இது என்னுடைய குடும்பம், அது உன்னுடைய குடும்பம்
இதுபோன்ற தனிமனித உரிமைக்குல் வேறு ஒருவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருவள்ளுவரே சொல்லி இருக்கின்றார் என்று சமத்துவ உரிமை கோற முடியுமா? முடியாது.மீறி சமத்துவம் பேசினால் அங்கேயே வெட்டி விடுவார்கள்,நாடு முழுக்க கலவரம் வெடிக்கும், அதனால்தான் சமத்துவத்துக்கு ஒரு எல்லையை வகுத்து அதுவரை தான் நீயும் நானும் சமம், அதற்கு மேல் என்னுடைய உரிமை இதுவரைக்கும், உன்னுடைய உரிமை அதுவரைக்கும் என்று நீதியை உருவாக்கி வாழ்கின்றார்கள்.
எல்லையை மீறி சமத்துவம் என்று சொல்லிக் கொண்டு வேறு ஒருவர் குடும்பத்துக்குள் பின்புற வழியில் நுழையும் போது தான் அங்கேயே வெட்டப்படுகின்றார்கள்.தன்னை பாதுகாத்துக் கொள்ள கொலை செய்தால் தண்டனை இல்லை, ஆனால் தன் குடும்பத்தை பாதுகாக்க கொலை செய்தால் அது ஆணவக் கொலை என்றும், அதற்கு கடுமையான தண்டனையும் கொடுக்கின்றார்கள். காரணம் வாக்குக்காக ஆளும் அரசியல் தலைவர்களுக்கு ஒழுக்கமான குடும்ப வாழ்க்கை முறை தவறாக தெரிகின்றது.ஒழுக்கம் இல்லாமல் திருமணத்துக்கு முன் காதலிக்கும் செயல் சரியாக தெரிகின்றது. இவர்களுடைய நோக்கம் சாதிகளுக்கு இடையில் நல்லிணக்கம் இருக்கக்கூடாது, சாதியை வைத்து அரசியல் லாபம் அடைய வேண்டும் என்பதுதான்.
மக்களுக்கு உணர்வை தூண்டுவது தான் பிடிக்கும் அதனால் தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மத உணர்வு, சாதி உணர்வு, மொழி உணர்வு, இன உணர்வு என்று ஏதோ ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு மக்களின் உணர்வை தூண்டி லாபம் அடைகின்றார்கள். திரை துறையினரும் இதையேதான் பின்பற்றுகின்றார்கள், ஆரம்பக் காலத்தில் அண்ணன் தங்கை பாசம், சகோதர பாசம், கணவன் மனைவி பாசம், போன்ற பாச உணர்வை தூண்டி படங்கள் வந்தன. பிறகு வீர உணர்வை தூண்டி, காதல் உணர்வை தூண்டி படங்கள் வந்தன, பிறகு பள்ளிக்கு செல்லும் சிறுவர்களுக்கு காதல் உணர்வை தூண்டி திருமணத்துக்கு முன் காதல் செய்யும் ஒழுக்கக்கேடான செயலை நியாயப்படுத்தினர், தற்போது சாதி உணர்வை தூண்டும் படங்கள் வந்து சாதி நல்லிணக்கத்தை கெடுத்துக் கொண்டு இருக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளாக திரை துறையினர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் சமுதாய அக்கறையே இல்லை, சமுதாயத்தை அரசியல்வாதிகளும்,திரை துறையினர்களும் சீரழித்து விட்டார்கள்.தான் வாழ வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் நோக்கமாக உள்ளது.
அரசியலைப் பற்றி நான் எழுதிய “என் பார்வையில் அரசியல்” என்ற புத்தகத்தை படிக்க:-
https://drive.google.com/file/d/1C-jLxtChpH4A0_Jg5bXV8roxB3i5dLiA/view?usp=share_link
இந்த கட்டுரையின் சுருக்கம் :-
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சாதி சமத்துவத்துக்கான செயல்திட்டம் மட்டுமே இருப்பதால் சாதி சமத்துவம் என்ற பெயரில் சாதி ஒழிய வேண்டும் என்பது தவறு. சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வது தனிமனித உரிமையில் தலையிடும் செயல் என்பதால்அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
உலகிலேயே குடும்ப வாழ்க்கை முறையே உயர்ந்த நாகரிக வாழ்க்கை முறை என்பதால் குடும்ப அமைப்பையும், குடும்பங்களின் குடும்பமான சாதிய அமைப்பையும் சிதையாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
நம்முடைய நாட்டின் குடும்ப நாகரிக வாழ்க்கை முறைப்படி திருமணத்துக்கு முன் காதலிப்பதை ஒழுக்க கேடான செயலாக அரசு அறிவிக்க வேண்டும்.
தன்னை பாதுகாத்துக் கொள்ள கொலை செய்தாலும் குற்றம் அல்ல என்பதைப் போல் தன் குடும்ப உறவுகளை பாதுகாக்க கொலை செய்தாலும் குற்றம் அல்ல என்று புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஒருவர் குடும்பத்திற்குள் வேறு ஒருவர் அத்துமீறி நுழைய மாட்டார்கள்.குடும்பம் சிதையாமல் பாதுகாக்கப்படும்.
மக்கள் சாதியை பற்றிய விழிப்புணர்வும், சமத்துவத்தை பற்றிய விழிப்புணர்வும் பெற்று சாதி நல்லிணக்கத்துடன் அனைவரும் அவரவர் பாதையில் பயணித்து ஆனந்தமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக இந்த ஆய்வு கட்டுரையை எழுதி இருக்கின்றேன்.