ஒருவனுடைய சிந்தனையும் செயலும் அவனுக்கு உட்பட்டதே. அனைத்து சக்தியும் அவனுள்ளே இருக்கின்றது -சுவாமி விவேகானந்தர்.
ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் இறைவன் அருளே காரணம், அவன் இன்றி அணுவும் அசையாது. - புத்தர், பட்டினத்தார், மாணிக்க வாசாகர் முதல் பல்லாயிரம் மத தலைவர்கள் சொன்னதும், சொல்லிக்கொண்டு இருப்பதும்.
ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் மதி பாதி, விதி பாதி. -சத்குரு ஜக்கி வாசுதேவ்.
ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும், கடவுள் காரணம் அல்ல; விதியை நினைப்பவன் முட்டாள், மதியை நினைப்பவன் அறிவாளி. -பகுத்தறிவு தந்தை பெரியார்.
ஒருவனுடைய சிந்தனைக்கும் செயலுக்கும் அவன் காரணம் அல்ல, கடவுள் காரணம் அல்ல, இறந்த கால நிகழ்வுகளே காரணம். நம் முன்னோர்கள், பெரியவர்கள், அனைவருடைய கருத்தையும் என்னுடைய ஆய்வு பொய்யாக்கி விட்டது. இதை புரிந்து கொண்டால் உலகில் புதிய நீதி உருவாகும்.