தன்னை அறிவால் உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற யாரொருவரும் மற்றவருடைய அறிவைப் பெற முடியாது.
அறிவும், நீரும் ஒன்று தாழ்வான பகுதிக்கு, சமமான பகுதிக்கும் தான் செல்லுமே தவிர உயர்ந்த பகுதிக்கு செல்லாது.
நான் தான் அறிவாளி என்னுடைய கருத்து தான் சரியானது என்று எண்ணி எதிரியின் கருத்தை ஆரம்பத்திலேயே நிராகரிப்பவன் புதிய அறிவை பெற முடியாது.
உதாரணத்திற்கு :-மின்சாரத்தைத் தொட்டால் shock அடிக்கும் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் shock அடிக்காது என்று ஒருவர் சொன்னால், அவர் சொல்வது தவறு, என்னுடைய கருத்து தான் சரி என்று எண்ணி அவர் கருத்தை கேட்க மறுத்துவிட்டால், புதியஅறிவை பெறுகின்ற வாய்ப்பை இழந்து விட்டோம் என்று பொருள்.
நமக்கு தெரியாதது எதிரிக்கு தெரிந்திருக்கின்றது என்று எண்ணி எதிரியை அறிவாளி என்று எண்ணும் போது, எப்படி என்று கேட்கத்தோன்றும் அப்போது அவர் பாதுகாப்பு முறைப்படி மின்சாரத்தைத் தொட்டால் shock அடிக்காது என்று தெளிவுபடுத்தும் போது நமக்கு புது அறிவு கிடைக்கின்றது. எனவே அனைவரையும் அறிவால் சமமாக என்னுவோம், புதிய அறிவைப் பெறுவோம்.