கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, " பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்" என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவர்கள் புரிந்து கொண்டது போன்ற மாயையில் உவமையால் நம்பவைக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஆம் அதே பாடலை " பொருத்தால் நீரும் ஆவியாகிவிடும் என்று மாற்றி எழுதி இருந்தால்! நாம் பொருமையாக இருந்தால் கையில் கிடைத்ததும் கை நழுவி போய்விடும் என்பதை புரிந்ததுப்போல் நினைப்பார்கள். இது இரண்டுமே தவறுதான்.
புரிதல் என்றும் பொய்யானது இல்லை, நம்பிக்கை பல இடத்தில் மெய்யாக இருந்தது இல்லை. எனவே ஒரு தகவலை நம்புவதைவிட அதை புரிந்து கொள்வது நல்லது. ஆனால் அனுபவம் இல்லாமல் அறிவை பெறமுடியாது, அறிவில்லாமல் எதையும் புரிந்துகொள்ள முடியாது எனவே எந்த ஒரு மனிதனும் அனைத்தயும் புரிந்து செயல்பட முடியாது.எனவே சில தகவலை நம்பிதான் நாம் செயல்பட முடியும். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பலர் ஆன்மிகம் உட்பட அனைத்தையும் புரிந்து கொண்டதாக எண்ணி பலவற்றை நம்பி செயல் படுவது நல்லது அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.