புரிந்து கொள்ளக்கூடிய அறிவுள்ள வாசகன் என்ன சொல்லி இருக்கின்றது என்று தான் பார்ப்பான், புரிந்துகொள்ள முடியாத வாசகன் யார் சொன்னார்கள் என்றுதான் பார்ப்பான், காரணம் நம்புவதர்க்காக.
எழுத்தாளர்கள் பலர் பிரபலமானவர் பெயரைச் சொல்லி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதன் நோக்கம் உன்னை சிந்திக்க விடாமல் நம்ப வைப்பதற்கு என்பதை வாசகன் புரிந்துகொள்ள வேண்டும்.
விதி உண்மை என்று ஒரு எழுத்தாளர் சொல்ல நினைத்தால் எப்படி என்று விளக்க வேண்டுமே தவிர, மாறாக பெரிய மனிதர்களின் பெயரை குறிப்பிட்டு அவர் சொன்னார், இவர் சொன்னார், என்று நம்பவைப்பது பயனற்ற எழுத்து. இதுபோன்ற எழுத்தை படிக்காமல் இருப்பது நம் அறிவுக்கு சிறந்தது.