அனைவரும் சமம் என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும், ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடோடும், மனிதர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தோடும் வாழ ஒவ்வொருவரின் உரிமையையும் துல்லியமாக வரையறுப்பது மனிதனின் நீதியாக இருப்பது போல்.
விதி என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும் நம்முடைய முயற்சியும், உழைப்பும் தான் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
இதை புரிந்து கொள்ளாமல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருக்குறளை மேற்கோள்காட்டி அனைவரும் சமம் என்று தனிமனித உரிமைகளுக்குள் அத்து மீறி ஒருவர் சென்றாலோ, அல்லது விதி என்பது இயற்கையின் நீதி என்று எண்ணி, விதிப்படி அனைத்தும் நடக்கும் என்று ஒருவர் தன் கடமையை செய்யாமல் இருந்தாலோ, அதற்கான தண்டனையை விதி அவர்களுக்கு நிச்சயம் கொடுக்கும்.
எனவே அனைவரும் சமம் என்பதையும், விதி உண்மை என்பதையும் முழுமையாக புரிந்து கொண்டால் அதுதான் ஆறாவது அறிவு.