குடும்ப புத்தி, சாதி புத்தி, மத புத்தி, பிறந்த ஊரின் புத்தி, என்று பிறப்பால் ஒருவர் அறிவைப் பெறுகின்றார்களா அல்லது அனுபவத்தால், படிப்பால் ஒருவர் அறிவிவை பெறுகின்றார்களா என்று அறிவைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்து இந்த கட்டுரையில் எழுதி இருக்கின்றேன்.
இந்த கட்டுரையை படிப்பதற்கு முன் இதற்கு முன் அறிவைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகளைப் படித்துவிட்டு இந்த கட்டுரையை படித்தால் புதிதாக என்னுடைய கட்டுரையை படிப்பவர்களுக்கு எளிதாக புரியும். (https://www.vijayakumaran.in/blog/understanding-knowledge-41)
அறிவை நாம் இரண்டு வழிகளால் மட்டுமே பெற முடியும் ஒன்று ஐந்து புலன்களின் அனுபவத்தால் பெறுவது, இரண்டாவது அனுபவம் சார்ந்த தகவலை படிப்பது, கேட்பது, பார்ப்பது மூலம் பெறுவது.அனுபவம் இல்லாததை பற்றி படிப்பதாலோ, கேட்பதாலோ, பார்ப்பதாலோ அறிவை பெற முடியாது, எனவே ஒரு மனிதனின் அடிப்படை அறிவு அவன் ஐந்து புலன்களால் பெற்று இருக்கும் அனுபவம் மட்டுமே.
ஐந்து புலன்கள் அனைவருக்கும் இருந்தாலும் அந்த புலன்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அனுபவத்தை கொடுக்குமா என்றால் இல்லை, எனவே ஒரு நிகழ்வு அல்லது ஒரு அனுபவம் அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிவை கொடுப்பதில்லை.அதனால்தான் ஒரு தாயின் பிள்ளைகள் ஒரே சூழலில் பிறந்து வளர்ந்தாலும் அவர்களின் அறிவில், அணுகுமுறையில் வேற்றுமை இருக்கின்றன.அதனால்தான் ஒவ்வொருவருக்கும் ஒரு சில சுவை பிடிக்கும், ஒரு சில வண்ணம் பிடிக்கும், ஒரு சில இசை பிடிக்கும், ஒரு சில தட்பவெப்ப நிலை பிடிக்கும், ஒரு சில மனம் பிடிக்கும், இதற்கு பிறப்பால் பெற்ற உணர்வு, ஆரோக்கியம், வளர்ந்த சூழல் தான் காரணம்.
ஒரே பெற்றோர்களின் பிள்ளைகளாக இருந்தாலும், பிறப்பால் ஒருவர் பெரும் உணர்வுக்கு பெற்றோர்களின் மரபணு கலப்பின் விகிதாச்சாரமே காரணம்.சிலருக்கு பயஉணர்வு அதிகம் இருக்கும், சிலருக்கு சாப்பாட்டு உணர்வு அதிகம் இருக்கும், சிலருக்கு காம உணர்வு அதிகம் இருக்கும், சிலருக்கு இந்த உணர்வுகள் ஒன்று அதிகமாகவும் மற்றொன்று குறைவாகவும் இருக்கும். இந்த உணர்வுகளுக்கு தகுந்தார் போல் தான் அவர்கள் பெரும் அனுபவத்தின் அறிவு அவர்களின் மூலையில் சேமிக்கப்படுகின்றது. பிறப்பால் நாம் பெற்றிருக்கும் உணர்வை நாம் மாற்றிக் கொள்ளவே முடியாது சாகும் வரை அதே உணர்வில் தான் வாழ வேண்டும். இதற்குப் பெயர்தான் குடும்ப புத்தி, பரம்பரை புத்தி, சாதி புத்தி என்று அனுபவத்தால் கண்டறிந்து முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
உணர்வு ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருப்பதால்தான் சிலர் உணவு கட்டுப்பாடு இல்லாமலும், சிலர் மது பழக்கத்துக்கு அடிமையாகவும், சிலர் காமத்துக்கு அடிமையாகவும், சிலர் சோம்பலுக்கு அடிமையாகவும் இருந்து வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றார்கள். பெரிய செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், படிப்பால் உயர் பதவியில் இருப்பவர்கள் என்று பலர் அவர்களுடைய கட்டுப்படுத்த முடியாத உணர்வுகளால் சீரழிந்து இருக்கின்றார்கள் இதற்கு அவர்களுடைய உணர்வு சரியான அறிவை மூளையில் பதிவு செய்யாமல் உணர்வுக்கு பிடித்தார் போல் அறிவை மூளையில் பதிவு செய்வது தான் காரணம். உதாரணத்திற்கு மது உடலுக்கு கேடு என்ற அறிவை மூளையில் பதிவு செய்யாமல் மது குடிக்காதவன் சாகாமல் இருக்கின்றானா? மதுவின் இன்பத்தை அனுபவிக்காமல் வாழ்ந்து என்ன செய்யப் போகின்றோம் என்று இதுபோன்ற அறிவை மூளையில் பதிவு செய்வதால் மதுவை அருந்துபவர்களுக்கு மது அருந்துவது தவறு என்ற அறிவு அவர்களுடைய அறிவாக இருக்காது.இதுபோன்றுதான் அனைவருக்கும் உணர்வுக்கு எது பிடிக்குமோ அதுவே அவர்களுடைய அறிவாகவும் இருக்கின்றது.
ஒருவருடைய உணர்வே அவருடைய அறிவாகவும் இருப்பதால்தான் சாதி பெருமை பேசுவது, சாதி ஒழிய வேண்டும் என்பது, மொழிப்பெருமை பேசுவது, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது, பொருளாதார அடிப்படையாலான இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது, திருமணத்துக்கு முன் காதலிப்பதை ஆதரிப்பது, தனக்கு எது நன்மையோ அதுவே சரி, என்பது போன்ற அனைத்தும் உணர்வுக்கு எது பிடிக்குமோ அதையே சரிஎன்று மூளையில் அறிவாக பதிவு செய்து விடும்.அதனால்தான் அத்திகத்துக்கு எதிராக நாத்திகம், பிற்போக சிந்தனைக்கு எதிராக முற்போக்கு சிந்தனை என்று பலன் அடைபவர்கள் ஒருபுறமும் பாதிக்கப்படுபவர்கள் மறுபுறமும் இருந்து கொண்டு தனக்கு எது நன்மையோ அதையே சரி என்று வாதம் செய்கின்றார்கள்.
குழந்தை பருவத்திலிருந்து ஆரோக்கியமாகவும் உடல் வலிமையுடனும் வளர்ந்த குழந்தையின் செயல்பாடு மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்கும், பலவீனமாக வளர்ந்த குழந்தையின் செயல்பாடு வெளிப்படைத்தன்மை இல்லாமல் சூழ்ச்சியாக இருக்கும், காரணம் உடல் பலம் இல்லாததால் சாமாத்தியமாக வாழ வேண்டிய கட்டாயம் பலவீனமான குழந்தைகளுக்கு ஏற்பட்டு அவர்களுடைய உணர்வு சூழ்ச்சியாக வாழக்கூடிய அறிவை அவர்களுக்கு கொடுத்து விடும், இதனால் தான் குள்ளமாக இருப்பவர்கள், உடல் ஊனம் ஏற்பட்டவர்கள், சைவ உணவை மட்டும் உண்ணும் பிராமணர்கள், மற்றும் பலவீனமானவர்கள் அனைவரும் சூழ்ச்சியாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படுவார்கள்.
வளர்ந்த சூழலால் பெற்ற அனுபவம் தான் ஒருவரின் உண்மையான அறிவு, அனுபவத்தால் அனைவரும் தனித்துவமானவர்கள்.சகோதரர்களாக இருந்தாலும் அவர்கள் பழகும் மனிதர்களும், சூழலும் மாறுவதால் இருவருக்கும் இரு வேறு அனுபவம் தான் அறிவாக இருக்கும்.
ஒருவர் படிப்பதன் மூலமும், கேட்பதன் மூலமும் பெரும் தகவல் அறிவாக மாற வேண்டும் என்றால் அதை சார்ந்த அனுபவத்தை அறிவாக பெற்று இருக்க வேண்டும்.அனுபவம் இல்லாமல் பெரும் தகவல் அறிவாக மாறாது தகவலாக மட்டுமே இருக்கும்.படித்த தகவலை அறிவாக பெறுவதற்கு அனுபவம் இல்லை என்றாலும் பல இடங்களில் தகவலை நம்புவதாலும் அறிவை பெற்றதற்கு சமமான பலனை அடையலாம்.
படிப்பதன் மூலமும் கேட்பதன் மூலமும் அறிவைப் பெறுவதற்கு அனுபவம் முக்கியம் என்பதை போல் நம்பிக்கையும் முக்கியம், இந்த புத்தகத்தை படித்தால் இவர் சொல்வதை கேட்டால் புதிய அறிவு நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை வாசகர்களுக்கும், கேட்பவர்களுக்கும் வரவேண்டும்.இந்த முதல் நிலையில் ஒருவர் வெற்றி பெற்றால் தான் ஒரு புத்தகத்தை படிக்கவோ அல்லது ஒருவர் சொல்வதைக் கேட்கவோ முடியும்.இரண்டாவது நிலையில்தான் படித்ததை, கேட்டதை அறிவாக பெற அது சார்ந்த அனுபவம் தேவை, மூன்றாவது நிலை படித்ததை, கேட்டதை புரிந்து கொள்ள அனுபவம் இல்லை என்றாலும் படித்ததையும் கேட்டதையும் நம்பி விட்டால் அறிவை பெற்றதற்கு இணையான பலனை நம்பிக்கை கொடுத்து விடும்.ஆனால் நம்பிக்கை மிகவும் ஆபத்தானது, இந்த நம்பிக்கையில் தான் பலரும் அறிவைப் பெற்றுள்ளதாக நம்பி தன் உணர்வின் விருப்பப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், அதனால் தான் ஒருவர் பெற்றிருக்கும் அறிவு அவருடைய விருப்பப்படியே உள்ளது.
மூளையின் செயல்பாடும் அறிவும் ஒன்றல்ல, எனவே மூளையின் செயல் திறன்( IQ )அதிகம் உள்ளவர்கள் அறிவாளிகள் அல்ல. ஆனால் நம் கல்விமுறை IQ அதிகம் உள்ளவர்களையே இனம் காணும் வகையில் உள்ளது. IQ அதிகம் உள்ள ஆயிரம் மனிதர்கள் செய்யும் வேலையை ஒரு கணினி செய்துவிடும் ஆனால் ஒரு அறிவாளி எடுக்கும் முடிவை ஆயிரம் கணினியால் செய்ய முடியாது. மூளையின் செயல்திறன் அடிப்படையில் தான் IAS அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் ஆனால் உண்மையில் IAS பதவிக்கு தேவையான அறிவு அவர்களிடம் இருக்கா என்று சோதித்தால் ஒரு சதவிகிதத்தினர் கூட தேர்ச்சி பெற மாட்டார்கள்.
அனைவரிடமும் உணர்வின் விருப்பப்படியே அறிவு இருப்பதால் கடவுள் இருக்கு என்ற நம்பிக்கையே ஆத்திகர்களுக்கு அறிவாகவும், கடவுள் இல்லை என்ற நம்பிக்கையே நாத்திகர்களுக்கு அறிவாகவும் இருக்கின்றது. இருவருமே தன் உணர்வின் விருப்பத்திற்கு ஏற்ப நம்பிக்கையை அறிவாக நினைத்துக் கொள்கின்றார்கள்.பெரும்பாலானவர்கள் தன்னுடைய உணர்வின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு அறிவையும் உள்வாங்கிக் கொள்ள தயாராக இல்லை என்பதற்கு சான்று, நான் கடவுளை பற்றியும் விதியை பற்றியும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து கடந்த 16 வருடமாக கடவுள் இல்லை என்றும், விதி உண்மை என்று எழுதி வருகின்றேன் இதை படிக்கின்ற நாத்திகர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விதி உண்மை என்பதை ஏற்க மறுக்கின்றார்கள், கடவுள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள்.ஆத்திகர்களும் அவர்கள் விருப்பப்படி கடவுள் இல்லை என்பதை ஏற்கவில்லை, விதி உண்மை என்பதை ஏற்கின்றார்கள்.
இந்த ஆய்வின் மூலம் எனக்கு கிடைத்த ஆய்வின் முடிவு, ஒரு மனிதன் பிறப்பால் தான்பெற்ற உணர்வின் விருப்பப்படியே அறிவைப் பெறுகின்றான், அவனுடைய சிந்தனையும் உணர்வின் விருப்பப்படி தான் இருக்கின்றது. எனவே புத்தகங்கள் யாருக்கும் உணர்வுக்கு எதிராக அறிவை கொடுக்கவில்லை, தன்னுடைய உணர்வுக்கு தீனி போடும் எழுத்தை தான் வாசகர்கள் படிப்பார்கள், அதனால்தான் ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒரு வாசகர் கூட்டம் இருக்கின்றது.
தன்னுடைய கருத்திற்கு எதிர்மறையான கருத்தை உணர்விலிருந்து விடுபட்டு யார் ஒருவர் அறிவாக பெறுகின்றார்களோ அவர்கள்தான் ஆறறிவு மனிதர்கள்.