என்னுடைய ஆய்வின்படி பெற்றோர்கள், தான் செய்த தவறை, தவறு என்று ஒத்துக் கொண்டால்தான் அதே தவறை பிள்ளைகள் செய்யமாட்டார்கள். பல குடிகாரர்களின் பிள்ளைகள் குடிகாரர்களாகவும், சில குடிகாரர்களின் பிள்ளைகள் குடிக்காமல் இருப்பதற்கு தந்தையே காரணம்.
எப்படி வாழ வேண்டும் என்பதையும், எப்படி வாழக் கூடாது என்பதையும் பெற்றோர்களைப் பார்த்தே பிள்ளைகள் தெரிந்து கொள்கிறார்கள்.
தான் செய்த தவறையும், ஒழுக்கக்கேடான செயலையும் நினைத்து வெட்கப்படும், வருத்தப்படும் பெற்றோரை பார்க்கும் பிள்ளைகள் இந்தத் தவறை நாமும் செய்யக்கூடாது என்ற அறிவை பெற்றோர்களிடமிருந்து பெறுகின்றனர்.
தான் செய்த தவறையும்,ஒழுக்கக்கேடான செயலையும் நியாயப்படுத்தும் பெற்றோரை பார்க்கும் பிள்ளைகள், பெற்றோர் செய்வது தான் சரி என்ற அறிவை பெறுகின்றார்கள்.
எப்படி வாழவேண்டும் என்ற அறிவையும், எப்படி வாழக்கூடாது என்ற அறிவையும் பெற்றோர்களே பிள்ளைகளுக்கு கொடுக்கின்றார்கள்.
நீங்கள் செய்த தவறை நியாயப்படுத்தி பிள்ளைகளையும் கெடுத்து விடாதீர்கள், பிள்ளைகள் ஒழுக்கமானவர்களாக வாழ வேண்டும் என்றால் பெற்றோர்கள், தான் செய்த தவறுக்கும், ஒழுக்கக்கேடான செயலுக்கும் வருத்தப்பட்டு பிள்ளைகளுக்கு நல்லறிவை கொடுங்கள்.