யார் சொல்லியிருந்தாலும்,
எங்கு படித்திருந்தாலும்,
நானே சொன்னாலும்,
உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே.
----பெரியார்.
பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரிந்து கொண்டவர்கள் பெரியாரையும் சேர்த்து இந்த உலகில் யாருமில்லை.
ஒன்றை ஓருவர் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதை சார்ந்த அறிவு அவரிடம் இருக்க வேண்டும். அறிவு இல்லாமல் எதை ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாது.
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு, என்றால் ஒருவர் எப்படி அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
மருத்துவர் சொல்வதை நோயாளி நம்பவேண்டும், பொறியாளர் சொல்வதை மருத்துவர் நம்பவேண்டும், நம்பிக்கைதான் வாழ்க்கை, நான் எதையும் நம்ப மாட்டேன் என்று யாராவது சொன்னால் அவர் இந்த உலகில் வாழத் தகுதியற்றவர் என்றே பொருள்.
பெரியாரின் உபதேசத்தை போல், பல ஆன்மீக கதைகளையும், புரிந்து கொண்டது போல் நம்புவதுதான் பகுத்தறிவற்ற செயல்.
பெரியவர்களின் வாழ்க்கை அனுபவத்தை, சிறியவர்களின் அனுபவத்தால் புரிந்துகொள்ள முடியாது. நம்பமட்டுமே முடியும்.
புரிந்துகொள்ள முடிந்ததை புரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ள முடியாத்தை சொல்வரைபொருத்து நம்புங்கள், தவறில்லை.
புரியாத கருத்தை, புரிந்ததாக எண்ணி ஏமாறுவதற்கு பெயர்தான் மூடப்புரிதல்.
மூடநம்பிக்கையைவிட மூடப்புரிதலே பகுத்தறிவற்ற செயல்.