பெரியார் (ஈ. வெ. ராமசாமி) அவர்கள் கடவுளை வணங்குபவர்களை காட்டுமிராண்டி என்று சாடியவர், சமத்துவத்தை வலியுறுத்தியவர், இந்து மதத்தை விமர்சித்த இவர் தன் பெயர் இந்து மத கடவுளின் பெயராக இருந்தும் தன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. சமத்துவத்தை விரும்பும் பெரியார் தன்னை மற்றவர்கள் சாமி என்றே அழைக்க வேண்டும் என்று விரும்பி உள்ளார்.பெரியார்..,அவருடைய பெயரை பொருளற்ற அடையாளமாகவே பார்த்ததால்தான் அவருடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.
ஏழுமலை என்ற பெயரை எந்த மொழியில் எழுதினாலும் ஏழுமலை தான். காரணம் பெயர் பொருளைக் குறிக்க வில்லை பெயர் அடையாளமாகத்தான் பார்க்கப்படுகின்றது எனவே பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் பொருளற்ற தனிமனித அடையாளம் என்று கல்வித்துறை புரிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் மாணவர்களுக்கு அவர்கள் அறிவை கொடுக்க முடியும்.