8 March 2020
by
Vijayakumaran
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெரிந்து கொள்கின்ற தகவலால் பயனில்லை.
மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகளை புரிந்துகொள்ளவே இதைப் படிக்கின்ற வாசகர்களுக்கு அறிவை சார்ந்த அறிவு இருக்க வேண்டும் இல்லை என்றால் என் எழுத்து பயனற்றது தான்.
எழுத்தாளர்களும் அவர்களுடைய எழுத்துக்களும் மக்களிடம் பிரபலம் ஆவதற்கு காரணம், மக்களிடம் உள்ள ஒற்றை செருப்புக்கு ஜோடியாக மற்றொரு ஒத்த செருப்பை இவர்கள் செய்து தருவதால் மட்டுமே. இவர்கள் செய்த ஒற்றை செருப்பு மக்களுக்கு தேவைப்படுகின்றது இதனால்தான் பெரும்பாலான எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் மக்களை சென்று அடைகின்றார்கள். (மக்களிடம் உள்ள ஒற்றை செருப்பு என்பது அவர்கள் பெற்றிருக்கும் அறிவு, எழுத்தாளன் செய்த ஒற்றை செருப்பு என்பது எழுத்தாளனின் அறிவு.
அறிவு இல்லாத வாசகர்களுக்கு எந்த ஒரு எழுத்தாளராளும் அறிவைக் கொடுக்க முடியாது. வாசகர்கள் ஏதாவது ஒரு செருப்பை வைத்திருந்தால் மட்டுமே அதற்கு பொருத்தமான மற்றொரு ஒத்தசெருப்பை எழுத்தாளர்களால் செய்து கொடுக்க முடியும். எந்த ஒரு எழுத்தாளராளும் வாசகனுக்கு இரண்டு செருப்பையும் செய்து கொடுக்க முடியாது. யாராலும் அறிவு இல்லாமல் அறிவை பெற முடியாது.
நாம் எந்த அனுபவங்களை பெற்று இருக்கின்றோமோ அதை சார்ந்த படிப்பறிவு, கேள்வி அறிவை மட்டுமே நாம் பெறமுடியும். அனுபவ அறிவு இல்லாமல் யாரொருவரும் படித்தும், கேட்டும், புதிதாக எந்த ஒரு அழிவையும் பெறமுடியாது. நம்முடைய அறிவு அனைத்தும் நம் அனுபவத்தை சார்ந்தே உள்ளது. நம்மிடம் உள்ள ஒற்றை செருப்புக்கு ஜோடியாக தான் நம் படிப்பின் மூலம் கிடைக்கும் மற்றொரு செருப்பும் இருக்கும் என்பது அறிவியல் விதி. புதிய அறிவை பெற விரும்பும் வாசகர்கள் புதிய அனுபவ அறிவைப் பெற்றால் மட்டுமே புதிய அறிவை பெற முடியும்.நம்மிடம் உள்ள ஒற்றை செருப்பை மாற்றாமல் புது செருப்பு நம்மை வந்து சேராது.
செருப்போடு அறிவை ஒப்பிட்டு எழுதியதன் நோக்கம் வாசகனின் அனுபவ அறிவோடு என்னுடைய தகவல் அறிவாகமாற வேண்டும் என்பதால் தான். ஆனாலும் எப்போதும் போல் பல வாசகர்களுக்கு என் எழுத்து பயன்படாத பொக்கிஷமாக தான் இருக்கப் போகின்றது என்பதில் சந்தேகமில்லை, காரணம் வர்த்தக நோக்கில் நான் செய்கின்ற செருப்பை மக்கள் விருப்பத்திற்கு செய்யவில்லை, மக்கள் ஆரோக்கியத்திற்கு எந்த செருப்பு நல்லதோ அதை செய்து வைத்துள்ளேன்,ஒத்த செருப்பை வைத்து உள்ளவர்கள் போட்டு செல்லலாம்.
வருமானத்துக்காக எழுதப்படுகின்ற அனைத்து எழுத்துகளும் வாசகனின் ஒற்றை செருப்புக்கு ஒத்த செருப்பாகவே செய்யப்படுகின்றன. (எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றன)
ஆத்திகம், நாத்திகம், என்ற புரிதலுக்கும். கடவுள் இருக்கா ? இல்லையா ?என்ற கேள்விக்கும் அப்பாற்பட்டு ஆன்மீகத்தை பற்றிய தேடல் மக்களிடம் இல்லாததால் ஆன்மீகத்தைப் பற்றிய என்னுடைய ஆய்வு எழுத்தை மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
மற்றவர்களை பற்றி கவலை இல்லாமல் தனக்கு எது நன்மையோ அதுவே சரியானது என்ற சிந்தனையில் இருக்கும் மக்களிடம், பொதுத்தேர்தலில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இட ஒதுக்கீடு செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், சாதி அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், இட ஒதுக்கீடு செய்வது தான் சமத்துவத்தை உருவாக்கும் என்பதையும் நடுநிலையோடு எழுதினால், அதை தற்போது உள்ள நடைமுறையால் நன்மை அடைபவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அறிவால் அனைவரும் சமம். அனுபவம் இல்லாமல் அறிவை பெற முடியாது. என்ற என் ஆய்வின் முடிவை படிப்பால் பயனடைந்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
திருமணத்துக்கு முன் காதல் செய்வது விபச்சாரத்திற்கு சமமானது என்று ஆய்வு செய்து எழுதினால் முற்போக்குவாதிகள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
குற்றம் செய்தவன் தண்டனைக்கு உரியவன் அல்ல, இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவன், எனவே தூக்கு தண்டனை இயற்கையின் நீதிக்கு எதிரானது என்று ஆய்வு செய்து எழுதினால் நீதியரசர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
விதி உண்மை, தொடர்வினை தத்துவத்தின்படி எது நடக்குமோ அது நடந்தே தீரும் என்ற அறிவியல் உண்மையை ஆய்வு செய்து எழுதினால் பகுத்தறிவாளர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை.
விதி உண்மை என்பதால் கடவுள் இல்லை என்று ஆய்வு செய்து எழுதினால் ஆத்திகனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
கடவுள் இல்லை, ஆனால் கடவுளை வணங்கினால் நன்மைகள் நடக்கும் என்று எழுதினால் நாத்திகனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
நம்முடைய சிந்தனையும், செயலும் நமக்கு உட்பட்டு இல்லை. நீ என்னவாக வேண்டும் என்று எண்ணுகின்றாயோ அதுவாகவே ஆவாய், ஆனால் எதை என்ன வேண்டும் என்பதை நீ தீர்மானிக்க முடியாது என்று ஆய்வு செய்து எழுதினால் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
‘கற்பு’ அறியாமையால் புனிதம் ஆகின்றது, ’அறிவு ‘ அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதனால் சூனியம் ஆகின்றது. “அனைத்தையும் கற்று மற “ என்பது தடம்மாறியவர்கள் தவற்றில் இருந்து தப்பிக்கும் சூழ்ச்சி. நாம் எதைப் பார்க்கின்றோமோ, எதை கேட்கின்றோமோ, எதை உணர்கின்றோமோ, அது நம்மை நம் அனுமதி இல்லாமலேயே ஆள ஆரம்பித்துவிடும், எனவே அறிவுக்கு எதை தெரியப்படுத்த வேண்டும் என்பதை அறிந்து அறிவால் அறிவை ஆளுமை செய்வதுதான் ஏழாவது அறிவு. தடம்மாறாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லாததால் யாரும் இதை ஏற்கவில்லை.
நான் செய்து வைத்துள்ள செருப்புகள் அனைத்தும் மக்கள் வைத்துள்ள செருப்போடு பொருந்தாததால் என்னுடைய எழுத்துக்கள் அனைத்தும் பயன்படாத பொக்கிஷமாகவே உள்ளன. விரைவில் நான் செய்த ஒற்றை செருப்புக்கு பொருத்தமாக மக்கள் வைத்துள்ள ஒற்றை செருப்பு மாற்றமடையும் என்ற நம்பிக்கையில். ...