18 August 2022
by
Vijayakumaran
அறிவியல் ஆய்வின்படி தொடர்வினை தத்துவத்திர்க்கும், அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிர்வினை உண்டு என்ற தத்துவத்திற்கு உட்பட்டு தான் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. அறிவியல் ஆய்வின்படி நேற்றைய நிகழ்வுகளே இன்றைய நிகழ்வுகளுக்கு காரணம், இன்றைய நிகழ்வுகளே நாளைய நிகழ்வுகளுக்கு காரணம் என்று உறுதியாவதால், எது நடக்குமோ அது நடந்தே தீரும் என்ற கருத்தை உள்ளடக்கிய விதி உண்மை என்பது என்னுடைய ஆய்வின் முடிவு.
தந்தை பெரியாரும் முற்போக்கு பகுத்தறிவாளர்களும் விதியை பொய்யென்றும், ஆன்மிகவாதிகள் விதியை உண்மை என்றும், படித்த ஆன்மிகவாதிகளும், தன்னை முற்போக்கு சிந்தனை உடைய ஆன்மீக வாதியாக காட்டிக் கொள்ளும் ஜக்கி வாசுதேவ் அவர்களும் விதி உண்மை ஆனால் மதியால் விதியை வெல்ல முடியும் என்று கூறி உள்ளார்கள். இவர்கள் யாரும் அனுபவப்பூர்வமாக அல்லது அறிவியல் பூர்வமாக அவர்களுடைய கருத்தை மக்களிடம் நிரூபிக்கவில்லை, மாறாக அவர்களுடைய முகமதிப்பை வைத்து மக்களை நம்ப வைத்தார்கள்.
விதியை பொய் என்று சொல்பவர்களின் கருத்தை தவறு என்று நிரூபிக்க அறிவியல் ஆதாரம் இருக்கு, ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்று மதியை நம்புபவர்களின் கருத்தை தவறு என்று சொல்ல உலக அறிவியலில் அதற்கான அறிவியல் ஆய்வு எதுவும் இல்லை. பிரபஞ்ச சக்தியால் மனிதன் எப்படி இயங்க படுகின்றான் என்பதை நான் தொடர்ந்து ஆய்வு செய்ததின் பலனாக 2010இல் ஒரு மனிதனின் சிந்தனை அவனுக்கு உட்பட்டு இல்லை, மனிதனின் சிந்தனையும் தொடர்வினை தத்துவத்திற்கு உட்பட்டு இருப்பதால்,இறந்தகால நிகழ்வுகளேஒருவன் சிந்தனைக்கு காரணமாக இருக்கின்றது என்பதை அறிந்தேன்.
ஒரு மனிதனின் சிந்தனை அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை என்பதை உலகிலேயே முதல்முறையாக என்னுடைய ஆய்வில் கண்டு பிடித்ததால் அதைப் பதிவு செய்யும் வகையில் “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற முதல் புத்தகத்தை 2011-இல் நான் எழுதினேன். இந்த கண்டுபிடிப்பே நான் தொடர்ந்து ஆய்வுகள் செய்து பல புத்தகங்கள் எழுதுவதற்கு காரணமாக உள்ளது.
என்னுடைய சிந்தனையே என் கட்டுப்பாட்டில் எனக்கு உட்பட்டு இல்லை, நான் எதைச் சிந்தித்தாலும் அனைத்தும் இறந்தகால தொடர்போடு தான் உள்ளது, இறந்தகால தொடர்போடு நான் சிந்தித்தாலும் அந்த சிந்தனையால் என்னுடைய கடந்த கால அனுபவத்தை தாண்டி சிந்திக்கவே முடியவில்லை. எனவே ஒரு மனிதனுடைய சிந்தனையும், சிந்தனையின் தூரமும் விதிக்கு உட்பட்டே உள்ளதால் விதி அறிவியல் பூர்வமான உண்மை.
விதியை மதியால் வெல்ல முடியாது.
விதி உண்மை என்றால், நான் படிக்காமல், உழைக்காமல், முயற்சி செய்யாமல் இருந்தால் விதியின் படி அனைத்தும் எனக்கு கிடைக்குமா என்பதுதான் அனைவரின் கேள்வி.
இதற்கும் நாம் அறிவியலால் விடை தேடுவோம், நடக்க இருப்பது அனைத்தும் விதிப்படிதான் நடக்கும். ஆனால் எது விதி என்று நடந்து முடிந்த பிறகு தான் நமக்குத் தெரியும். காரணம் பல கோடி இறந்த கால நிகழ்வுகளின் கூட்டு எதிர்வினை தான் இந்த நொடி நடக்கும் நிகழ்வுக்கு காரணம்.
தொடர்வினை தத்துவத்தின்படி
படித்தால்தான் தேர்ச்சி பெறமுடியும் !
உழைத்தால்தான் உயர முடியும் !
முயற்சி செய்தால்தான் வெற்றி பெற முடியும் !
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் தொடர்வினை தத்துவத்தின்படி முயற்சியின் எதிர்வினை தான் வெற்றி.
வெற்றி நம்முடைய விதியாக இருக்க வேண்டுமென்றால் வெற்றியின் முன்வினை முயற்சியாக இருக்க வேண்டும் முயற்சி இண்மையின் தொடர்வினை ஒருபோதும் வெற்றியாக இருக்காது.
நமக்குத் தெரியாத ஒருவர் தேர்வு எழுதினால் விதியின்படி எல்லாம் நடக்கும் என்று நாம் சொன்னால் அது தவறு இல்லை, தேர்வு எழுதுபவர் எல்லாம் விதிப்படி நடக்கும் என்று படிக்காமல் தேர்வு எழுதினால் அது தவறு.
நம்மால் பங்களிக்க முடியாத செயலுக்கும், நம் சக்திக்கு அப்பாற்பட்ட செயலுக்கும், நடந்துமுடிந்த செயலுக்கும், எல்லாம் விதி என்று சொல்வது அறிவு.
நாம் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் விதிப்படி நடக்கும் என்று பலனை மட்டும் எதிர்பார்ப்பது, தொடர் வினை தத்துவத்திற்கு முரணான அறிவு இல்லா செயல்.
விதியை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாத நிலையில், விதி உண்மை என்பதை அறிந்து என்ன பயன் என்று பலரும் நினைக்கலாம், மின்சாரத்தை பெஞ்சமின் பிராங்கிளின் கண்டுபிடித்தபோது இன்றைய மின்சார பயன்பாட்டை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை, அதுபோல் விதி உண்மை என்று கண்டுபிடித்ததை தொடர்ந்து உலக நீதியை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று உலக நாடுகள் சிந்திக்க வேண்டும்.
விதி உண்மை என்பதை ஏற்றுக் கொள்வதால் மட்டுமே மனிதர்களுக்கு இடையே சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.
தவறு செய்தவனை குற்றவாளியாக மட்டும் பார்க்காமல் விதியால் பாதிக்கப்பட்டவனாகவும் பார்த்து அவனை அந்த சூழலில் இருந்து மீட்கவேண்டும்.
போட்டிக்கு முன் தொடர் வினையை நினைவு கொண்டால் வெற்றி பெறுவோம், வெற்றி பெற்றபிறகு விதியை நினைவு கொண்டால் ஆணவம் இல்லாமல் அமைதியாக இருப்போம்.
விதி தொடர்வினையின் உள்ளடக்கம்.
தொடர்வினை என்ற முயற்சி இல்லாமல் வெற்றி என்ற விதியை அடையமுடியாது.