16 August 2022
by
Vijayakumaran
இளைஞர்களை நேர்மையானவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட ஊக்கப்படுத்தும் கட்டுரை இது.
12 வயது வரைக்கும் மாணவர்களால் அறிவியலைப் புரிந்து கொள்ள முடியாது, எனவே 40 ஆண்டுகளுக்கு முன் பல நீதிக் கதைகளைச் சொல்லி நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்தால் நன்மையே நடக்கும். நேர்மை தவறினால் கேடு தான் விளையும் என்று நம்ப வைத்தார்கள்.
சிறுவயதிலேயே மாணவர்கள் மனதில் நேர்மை விதைக்கப்பட்டதால் பெரும்பாலானவர்கள் ஒழுக்கமானவரகளாகவும், நேர்மையானவர்களாகவும் இருந்தார்கள். காலப்போக்கில் நீதி கதைகளை மாணவர்களுக்கு சொல்ல ஆசிரியர்கள் தவறிவிட்டார்கள் காரணம் பகுத்தறிவுக்கு எதிராகவும் மூட நம்பிக்கையாகவும் கதைகள் இருப்பதால் ஆசிரியர்கள் இந்த கதைகளை அறிவுபுர்வமானதாக இல்லை என்று எண்ணி காலப்போக்கில் நீதிக்கதைகள் சொல்வதை தவிர்த்து விட்டார்கள்.
நீதி கதைகளுக்கு மாற்றாக “வினையை விதைத்தவன் வினையை தான்அறுவடை செய்வான் “என்ற தத்துவத்தை உறுதியாக மாணவர்களுக்குப் புரியவைக்க கல்வியாளர்களிடம் அறிவியல் சார்ந்த அறிவு இல்லை. காரணம் அறிவியல் என்றால் புதுப்புது பொருட்களை தயாரிப்பது மட்டும்தான் என்ற தவறான புரிதலே.
பகுத்தறிவு என்பது பள்ளிக் கல்வியை முடித்த மாணவனின் அறிவை போன்றது,
அறிவியல் என்பது PhD முடித்து டாக்டர் பட்டம் வாங்கியவர் அறிவை போன்றது.
பகுத்தறிவால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, அறிவியல் சார்ந்த ஆய்வால் மட்டுமே உலக நிகழ்வுகளுக்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
நூறு ஆண்டுக்கு முன் பிறந்த தந்தை பெரியாரின் பகுத்தறிவுக்கு விதி பொய்யாகத் தெரிந்தது, இன்று என்னுடைய அறிவியல் சார்ந்த ஆய்வில் விதி உண்மை என்று தெரிய வந்துள்ளது இது காலத்தால் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி.
நல்லது செய்தால் நன்மையும், கெடுதல் செய்தால் கேடும்தான் விளையும் என்ற முன்னோர்களின் நம்பிக்கை என்னுடைய ஆய்வின்படி உண்மையே.
நீதிக் கதைகளில் வருகின்ற நீதியை அறிவியலால் உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன். 1) இந்த உலகம் தொடர்வினை தத்துவத்தில் தான் இயங்குகின்றது, இது அறிவியல் கண்டுபிடிப்பு.
2) ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு, இதுவும் அறிவியல் கண்டுபிடிப்பு.
ஒரு பட்டாம்பூச்சி தன் சிறகை விரிப்பதால் ஏற்படுகின்ற எதிர்வினை இந்த உலகை அழிக்கும் வல்லமை கொண்டதாக மாறவும் வாய்ப்புள்ளது என்று ஒரு அறிவியல் ஆய்வு சொல்கிறது, இது உண்மை என்பதை ஒவ்வொருவரும் தன் அனுபவத்தால் இதை உணரலாம்.
மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதை நியூட்டன் பார்த்ததால் தான் புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்க அந்த நிகழ்வு உதவியது.
புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்ததால் தான் விமானங்களும், செயற்கைக்கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு ஆப்பிள் கீழே விழுந்ததால் ஏற்பட்ட எதிர்வினை இந்த உலகையே மாற்றி விட்டது, இன்றுவரை மாறிக்கொண்டே இருக்கின்றது.
செய்தித்தாளில் படித்த ஒரு வரி செய்தியே ஒருவரின் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம், வீட்டில் இருந்து வெளியே புறப்படும்போது காலனியில் உள்ள தூசியை துடைப்பதால் ஏற்பட்ட காலதாமதமே விபத்தில் இருந்து தப்பிக்க சிலருக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
ஒரு அணுவின் அசைவும் எதிர்வினையை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது, எனவே நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் நம்மை சுற்றி எதிர்வினையை ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளது என்பதை அறிவியலால் புரிந்துகொள்ளுங்கள், அறிவியலைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் உறுதியாக நம்புங்கள்.
நம்மை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணி நீதிக்கும், நேர்மைக்கும் புறம்பாக ஒழுக்கக்கேடான எந்த ஒரு செயலையும் செய்யாதிர், நம்மை யாரும் பார்க்கவில்லை என்றாலும் நம் செயலின் எதிர்வினை நம்மை சுற்றியே தான் இருக்கும், ஒவ்வொரு அணுவின் அசைவும் இயற்கையால் கண்காணிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றது, எதிர்வினைக்காக!..
ஒழுக்கமாணவர்களையும், நேர்மையானவர்களையும் அவர்களுடைய செயலின் எதிர்வினை அவர்களை சூழ்ந்து பாதுகாப்பு வளையமாக பாதுகாத்துக் கொண்டு தான் இருக்கும். இந்த சக்திக்கு அழிவே இல்லை.
அறிவியலை சிலரால் புரிந்து கொள்ளவும் முடியாது, நம்பவும் மாட்டார்கள். அவர்கள் என்னிடம் கேட்பது ஒழுக்கக்கேடானவன்,குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவன், லஞ்சம் வாங்குபவன் தான் நாலுபேரு மதிக்கும்படி காரில் போறான். நேர்மையாக வேலை செய்பவர்கள், தொழில் செய்பவர்கள் கஷ்டத்தில் தான் இருக்காங்க இதற்கு உங்கள் அறிவியல் என்ன சொல்கிறது என்று கேட்பார்கள்.
அதற்கு என்னுடைய பதில் அறிவியல் படி நிச்சயம் ஒருவனுடைய செயலுக்கும் எதிர்வினை உண்டு, எதிர்வினையின் பாதிப்பு சில நேரம் ஊரை பாதித்து, தெருவைப் பாதித்து, உறவுகளை பாதித்து, கடைசியாக தவறு செய்தவனை பாதிக்கலாம். சில நேரம் பாதிப்புக்கு முன்பே தவறு செய்தவன் இறந்தும் போகலாம், ஆனால் நிச்சயம் எதிர்வினையின் பாதிப்பை அவனை சுற்றி உள்ளவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.
அரசியல் தலைவர்களும், சமுதாய தலைவர்களும் மக்களிடம் பிரிவினை அரசியலை ஏற்படுத்தி பதவிக்கு வந்து சுகமான, சுகபோக வாழ்க்கை வாழ்வதுபோல் தோன்றினாலும் அவர்கள் வைத்த தீ யில் அவருடைய மூன்றாவது தலைமுறை கருகுவதற்கும் வாய்ப்பு உள்ளது, எனவே உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அறிவியல் விழிப்புணர்வு என்று சொல்லி அறிவியல் கண்காட்சிகளில் பள்ளி மாணவர்களுக்கு பயன்படாத பொருட்களை காட்சி படுத்துவதை விட இந்த கட்டுரையை கல்வியாளர்கள் முழுமையாக புரிந்துகொண்டு இந்த அறிவியல் தத்துவத்தை மாணவர்களுக்கு செயல்முறை மூலம் விவரித்தால் மாணவர்கள் ஒழுக்கத்தையும், நேர்மையையும் கடைபிடித்து மேன்மையான சமுதாயத்தை உருவாக்குவார்கள், இது தொடர்பாக கல்வியாளர்கள் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் விருப்பமாக உள்ளேன்.