11 October 2024
by
Vijayakumaran
ஆறாவது அறிவு இல்லாத மனிதனும், மிருகமும் அறிவால் ஒன்று. மிருகமாக இருக்கும் மனிதர்களுக்கு ஆறாவது அறிவை கொடுப்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதுவதால் இந்த கட்டுரைக்கு “பாலம் “என்று தலைப்பு வைத்துள்ளேன்.
ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவு அல்ல, மிருகத்திடமும் பகுத்தறிவு இருப்பதால் ஆறாவது அறிவு என்பது உணர்விலிருந்து விடுபட்டு சிந்திப்பதால் பெறுவதே ஆறாவது அறிவு.
நான் 25 சதவிகிதம் மிருகமாகவும், 50 சதவிகிதம் மனிதனாகவும்,மிதம்உள்ள 25 சதவீதம் உணர்வில்லாத இயந்திரம் என்ற நிலைக்கு நான் சென்றதால் தான் ஆறாவது அறிவை பெற முடிந்தது. நான் ஐந்து அறிவில் பல ஆண்டுகள் மக்களோடு வாழ்ந்த அனுபவம் எனக்கு இருப்பதால் மக்கள் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் எந்த மனநிலையில் இப்போது இருக்கிறேன் என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியாது,எனவே உங்களுக்கு இருக்கும் அறிவை வைத்துக்கொண்டு என்னை விமர்சனம் செய்ய வார்த்தையை தேடாமல் நான் எழுதியதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
சாமியார்கள் சொர்க்கம், நரகம், முற்பிறவி போன்ற இடங்களுக்கு எல்லாம் சென்று வந்தவர்களைப் போல் கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்கு உள்ளேயே தேடுங்கள் கடவுளை பார்க்கலாம் என்று மக்களுக்கு புரிய வைப்பதுபோல் நம்ப வைத்து ஏமாற்றுவது என்னுடைய நோக்கம் அல்ல. கற்பனையிலேயே ஒன்றை உணர்ந்தது போல் நினைப்பது மனநோய், மனநோய் உள்ளவர்கள் தான் சாமியார்களிடம் செல்கின்றார்கள்.
நடந்த உண்மை சம்பவம்,
என்னிடம் வேலை செய்பவர் பேயை பார்த்ததாக சொன்னார், நான் சொன்னேன் பேய்யென்று ஒன்று இல்லை அது ஒரு பிரம்மை என்று, அதற்கு அவர் சொன்னார் பேய் இருப்பது உண்மை அது சிலர் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்றார், நான் சொன்னேன் ஆமாம் சிலருக்கு மட்டும்தான் தெரியும் ஏன் தெரியுமா! நம் கண் ஒரு காச்சியை பார்த்து மூளைக்கு செய்தியை அனுப்புவதால் தான் நாம் பார்க்கும் பொருள் நமக்கு தெரிகின்றது. இரவு நேரத்தில் சிலருக்கு கண் பார்க்காமலேயே மூளையில் ஏற்கனவே பதிவு செய்ய பட்டிருக்கும் கற்பனை காட்சியை கண் பார்த்ததாக முளை எடுத்துக்கொண்டு பேயைப் பார்த்தது போல் தோற்றத்தை பலருக்கு கொடுத்துவிடும் இது ஒருவகை மூளையின் கோளாறு என்றேன். அதன் பிறகு பேய் அவர் கண்ணுக்கு தெரிந்தால் சுதாரித்துக் கொண்டு பார்ப்பார் பேய் இருக்காது. இது போல் தான் கடவுளை உணர முடியும் என்று உள்ளே தேடு, வெளியே தேடு என்று மக்களை சாமியார்கள் ஏமாற்றுகின்றார்கள்.
என் பார்வையில் சாமியாரிடம் கடவுள் சக்தி இருக்கு, அவர் கடவுளை உணர வைப்பார் என்று செல்கின்றவர்கள் அனைவரும் மூளையின் செயல்பாட்டில், சிந்தனையில் கோளாறு உள்ளவர்கள்தான் அவர்களை நான் பரிதாபமாக பார்க்கின்றேன்.
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று இரண்டு பொருளை வைத்து கணிதத்தை சொல்லிக் கொடுப்பது போல் அறிவால் புரிய வைத்து நான் இருக்கும் ஆறாவது அறிவு என்ற அறிவு உலகத்திற்கு மக்களை அழைத்து சென்று துன்பத்திலிருந்து விடுபட வைப்பது தான் என்னுடைய நோக்கம்.
நான் நானல்ல என்பதை ஒருவன் புரிந்து கொள்ளும்போது தான் ஞான நிலையை அடைகின்றான் !
ஞான நிலையை அடையும் போது தான் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட முடியும் !
உணர்வில் இருந்து விடுபட்டால் தான் ஆறாவது அறிவை பெற முடியும் !
ஆறாவது அறிவை பெற்றால்தான் மனிதனாக முடியும்!
நான் நானல்ல என்பதை எப்படி புரிந்து கொள்வது?
நம்முடைய உடம்பை நான் என்று நினைப்பது நாம் பெற்ற அறிவு அல்ல, பிறப்பால் நாம் பெற்ற உணர்வு. ஒவ்வொரு உடலும் இந்த உலகில் வாழ வேண்டும் என்பதற்காக தான் நான் என்ற உணர்வோடு பிறக்கின்றன. இந்த நான் என்ற உணர்வில் இருந்து நாம் விடுபடவே முடியாது. பிறக்கும் போது நான் என்ற உணர்வோடு பிறக்கும் நாம் இறக்கும்போது தான் நான் என்ற உணர்வில் இருந்து விடுதலை பெறுகின்றோம். அதனால் தான் மரணத்தைப் பற்றி நான் எழுதி இருக்கின்றேன் “மரணம் என்பது நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை” என்று.
நான் என்ற உணர்வு ஒவ்வொரு உடலில் உணர்வு,ஒவ்வொரு உடலும் தன்னைத்தானே நான் என்று நினைத்துக் கொள்வது உயிரின் தன்மை. நான் என்ற உணர்வு ஒரு மாயை என்பதை ஆன்மீகத்தால் வள்ளலார் உணர்ந்ததால்தான் அனைத்து உயிரையும் தன் உயிராக எண்ணி வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார், வள்ளலாரைப் போல் ஆன்மிகத்தால் ஞான நிலையை அடைந்த ஞானி ஒருவர் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு மயக்க மருந்து இல்லாமலேயே அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார், அந்த அளவிற்கு ஒருவர் உணர்விலிருந்து விடுபடுவது என்பது இறந்ததற்கு சமம். அந்த நிலைக்கு ஒரு மனிதன் செல்வதும் தேவையற்றது.
கடவுள் நம்பிக்கையாலும் ஒருவர் நான் நானல்ல என்ற ஞான நிலையை அடையலாம், அறிவியல் புரிதலாலும் ஒருவர் ஞான நிலையை அடையலாம். கடவுள் நம்பிக்கையால் ஞான நிலையை அடைபவர்கள் வாழும் பொழுதே உணர்விலிருந்து முழுமையாக விடுபட்டு உயிருடன் இருக்கும் பொழுதே இறந்த நிலையை அடைந்து வாழ்க்கையையே இழந்து விடுவார்கள்.
அறிவியல் புரிதலோடு ஞான நிலையை அடைவது என்பது மின்சார சுற்று NC,NOபோன்றது, வீட்டில் உள்ள மின்சார அழைப்பு மணி NC,NOஎன்று மாறி மாறி இயங்குவதால் தான் ஓசை கேட்கின்றது, இயல்பு நிலையான NC க்கு சொல்லவில்லை என்றால் மின்சாரம் இருந்தும் ஓசை கேட்காது. அது போல் தான் வாழ்க்கையில் எப்போதும் உணர்வில் இருந்து விடுபட்டு NO ஐ போல் ஆன்மீக ஞானியாக இருந்தால் பிறப்பே பயனற்றது.
அறிவியல் படி நம் உடல் பல கலவையின் கூட்டுப்பொருள், இந்த பொருளுக்குள் உயிரும் இல்லை, ஆத்மாவும் இல்லை.
உடல் இயங்கினால் உயிர் இருக்கு என்று பொருள், இயக்கத்தின் பெயர்தான் உயிர், பொருளின் இயக்கம் நின்றவுடன் உடல் எங்கிருந்து வந்ததோ அது போல் இந்த உடல் இந்த உலகில் கரைந்து விடும்.இந்த பொருளுக்கு முன் ஜென்மமும் இல்லை, மறு ஜென்மமும் இல்லை.
நான் என்ற உடலின் உணர்விலிருந்து நாம் உயிர் உள்ளவரை விடுபட முடியாது. ஆனால் நாம் துள்ளும்போது புவி ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு சிறிது நேரம் மேலே இருப்பது போல் நம்முடைய அறிவின் ஆளுமையால் சிறிது நேரம் உணர்வில் இருந்து விடுபட்டு இருக்க முடியும்.
சிறிது நேரம் உணர்வில் இருந்து விடுபடுவதால் நாம் பெரும் நன்மைகள்.
1)தோல்வியின் போது, நோயின் போது, கஷ்டத்தில் இருக்கும் போது நான் என்ற உணவில் இருந்து அறிவின் ஆளுமையால் விடுபட்டால் துன்பத்திலிருந்து விடுபடலாம்!
2)நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டால் ஆறாவது அறிவைப் பெற்று மனிதனாகலாம்!
3)நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டால் போட்டி,பொறாமை என்ற உணர்வில் இருந்து விடுபட்டு அனைவரும் சமம் என்ற அறிவு பெற்று அனைவரின் அன்பையும் பெறலாம்!
4)நம்மை சுற்றி உள்ளவர்கள் அனைவருக்கும் ஆறாவது அறிவை கொடுத்துவிட்டால் மனிதர்கள் மத்தியில் பாதுகாப்பாக வாழலாம்!
5)மது பழக்கத்திலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்!
6)லஞ்சம் வாங்காமல் நேர்மையான, ஒழுக்கமான வாழ்க்கையை வாழலாம்!
7)பதவிக்கும்,பேருக்கு ஆசைப்பட்டு துன்பப் படாமல் வாழலாம்!
8)மற்றவர் மீது ஆளுமை செலுத்த வேண்டும் என்று எண்ணி நம் வாழ்க்கையை தொலைக்காமல் வாழலாம் !
9)ஆறாவது அறிவின் மூலம் யாரை விடவும் நான் உயர்ந்தவனும் அல்ல தாழ்ந்தவனும் அல்ல என்ற அறிவைப் பெறும் போது ஆனந்தமாக வாழலாம்!
நான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்பதற்காக நான் வாழும் ஆறாவது அறிவு என்ற உலகத்திற்கு அனைவரையும் வரவேற்கின்றேன்.