ஒவ்வொருவருடைய வெற்றிக்கும், சாதனைக்கும், அறியாமையே காரணம்.
20 July 2021by
Vijayakumaran
புத்தர், பட்டினத்தார் போன்ற அரசர்கள் ஞானம் பெற்ற உடன் அவர்களுடைய அறிவைப் பயன்படுத்தி பல நாடுகளை வெற்றி கொண்டு தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தி சாதனை படைத்திருக்கலாமே !பிறகு ஏன் அறிவு வந்தவுடன் இயல்பான வாழ்க்கையை வாழாமல் துறவு கொண்டார்கள் !
உணர்வுபூர்வமான, இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு, கற்பு போன்ற அறியாமையே ஒரு மனிதனுக்கு தேவைப்படுகின்றது,
எனவே உலகில் உள்ள அனைவரும் ஞானம் பெற்று வாழ்க்கையை ஞானத்தால் தொலைக்க வேண்டுமென்று அவசியமில்லை,
எனவே நோயை குணப்படுத்த ஊருக்கு ஒரு மருத்துவர் இருப்பது போல் மக்களை நல்வழியில் நடத்த நாட்டுக்கு ஒரு ஞானி இருந்தாலே போதும். எனவே புரியாத வாழ்க்கையை புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை,முயற்சிக்க வேண்டாம், ஆயிரத்தில் ஒருவருக்கு புரிந்தாலே போதும், நாடு நலம் பெறும்.