ஒருவர் நம்பிக்கையை வேறு ஒரு நம்பிக்கையால் சிதைத்தால் அதுவும் அறிவற்ற செயலே.
12 March 2021by
Vijayakumaran
சிறுவயதில் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே.
அறிவு இல்லாத சிறுவயதில் கடவுளை நம்பினேன், வளர்ந்து அறிவைப் பெற்ற பிறகு கடவுள் இல்லை என்பதை என் அறிவு பெற்றதால், கடவுள் செய்கின்ற செயலை அறிவியல் செய்கின்றது என்பதையும், அனைத்து வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு என்பதையும் புரிந்து கொண்டதால் வளர்ந்த பிறகும் எந்த தவறையும் நான் செய்ய நினைப்பதில்லை.
இந்த சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும், குறைந்ததற்கு காரணம். படிக்காதவர்களிடம் கடவுள் நம்பிக்கையை சிதைத்ததும், படித்தவர்களுக்கு கடவுளைப் பற்றிய அறிவியல் அறிவை சரியாக கொடுக்காததுவுமே காரணம்.
ஒருவர் நம்பிக்கையை வேறு ஒரு நம்பிக்கையால் சிதைத்தால் அதுவும் அறிவற்ற செயலே.
ஒருவர் நம்பிக்கையை தவறு என்று புரிய வைப்பதே அறிவு.
அறிவு இல்லாத இந்த மக்களிடம் கடவுள் இல்லை என்ற வேறு ஒரு நம்பிக்கையே இன்றைய குற்றங்களுக்கு காரணம்.இதை சரி செய்யாமல் ஆயிரம் குற்றவாளியை தூக்கிலிட்டாலும் சமுதாயத்தில் குற்றங்கள் குறையாது.