ஒவ்வொரு உணர்வுகளும் தனித்தனி உலகம். ஒரு உணர்வில் வாழும் பொழுது மற்றொரு உணர்வு உலகத்தில் நாம் வாழ முடியாது.
ஒரு மனிதன் பல உணர்வு உலகில் மாறி மாறி வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை.
அன்பு, பாசம், குடும்பம், உணவு, விளையாட்டு, போட்டி, பணம், படிப்பு,புகழ், பதவி, காமம், நட்பு, என்று பல உணர்வுகள் மனிதனுக்கு இன்பத்தை கொடுத்தாலும், ஒரே ஒரு உணர்வு உலகத்தில் தன் வாழ்க்கையை தொலைத்து விடுவதை நன்மையாக இருந்தால் சாதனையாக பார்க்கின்றார்கள், கெடுதலாக இருந்தால் மட்டும் பழக்கத்தின் அடிமைத்தனமாக பார்க்கின்றார்கள், உண்மையில் இரண்டுமே உணர்வுக்கு அடிமையாகும் செயல்தான்.
ஆறு சுவையும் உணவுக்கு தேவை என்பதை போல் வாழும் நாட்களில் பருவத்திற்கு ஏற்ப அனைத்து உணர்வு உலகத்திலும் வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை.