நம்பிக்கை என்பது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பது அல்ல.நம்பிக்கை என்பது நேர்மறை சிந்தனை.எனக்கு எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கும்,நடப்பவை அனைத்தும் நல்லதுக்கே,நிச்சயம் நான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவேன் என்ற நம்பிக்கைதான் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
நிலையில்லா இந்த உலகில் தன்னம்பிக்கை முதல் கடவுள் நம்பிக்கை வரை அனைத்து நம்பிக்கைகளும் பொய்யே, ஆனால் நிலையில்லா இந்த உலகில்
“இந்த நிலையும் மாறும் “
என்ற நம்பிக்கையே உண்மையானது.
இந்த நம்பிக்கை தான் ஒவ்வொரு மனிதனையும் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றது.