நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! எனவே அனைவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொள்வேன்.
என்னைவிட யாரும் அறிவாள் உயர்ந்தவர் அல்ல! எனவே யார் ஒருவர் ஆலோசனையையும் ஆய்வு செய்யாமல் ஏற்க்கமாட்டேன்.
இது எனக்காக மட்டும் எழுதப்பட்டது அல்ல,இது ஒவ்வொருவரும் ஏற்க்க வேண்டிய உறுதிமொழியாகும். அப்போது தான் இந்த உலகில் அனைவரும் அறிவாள் சமம் என்ற சமத்துவம் உருவாகும். இதை நான் எழுதியவுடன் இறைவன் விலை மதிக்கமுடியாத ஒன்றை கொடுத்ததை போல் உணர்ந்தேன்.இந்த வார்த்தைகள் சிற்ப்பம் போல் செதுக்கப்பட்டுள்ளது.செங்கல்லை பயன்படுத்தும் கொத்தனாரிடம் சிற்பம் கிடைத்தால் ஒழுங்கற்ற கல் என்று ஒதுக்கபடும். அதுபோல்,400 பக்கத்திர்க்கு நாவலை படித்து உணர்வில் கலக்கும் வாசகர்களுக்கு நான் எழுதிய 4 வரிகள் புரியவில்லை.
நான் எழுதிய எழுத்துக்கள் மக்களுக்கு எப்போது புரிகின்றதோ அப்போது பகட்டான பலரின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு அறிவாள் அனைவரும் சமம் என்ற சமத்துவம் உருவாகும்.இது சமத்துவத்திற்க்கான விதை.