மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. மரணத்தின் போது நான் என்ற உணர்வு மட்டுமே சாவுகின்றது. உடல் அழிவதில்லை, உடல் உருவமாற்றம்தான் அடைகின்றது.உயிர் பிரிந்தால் தான் மரணம் ஏற்படும் என்றில்லை உயிர் இருக்கும்போதே மரணத்தை உணர முடியும். நம்முடைய அறிவின் முதிர்ச்சியால் நான் நான்அல்ல என்ற ஞான நிலையை நாம் அடையும் போது தற்காலிகமாக ஒரு சில கணம் நான் என்ற உணர்வில் இருந்து முழுவதுமாக விடை பெற்று விடுவோம் இந்த நிலை மரணத்திற்குச் சமமானது. ஞானநிலை என்பது தற்காலிக மரணம்.
ஞானநிலை வலிக்கும், துன்பத்துக்கும்மான மருந்து. மரணம் அடைந்தவரை துன்பம் என்ன செய்யமுடியும். எல்லா மருந்துக்கும் பக்க விளைவுகள் உள்ளது போல் ஞானநிலைக்கு செல்வதிலும் பக்க விளைவுகள் உள்ளது. எப்போதும் நான் நான் அல்ல என்பதையே எண்ணியிருந்தால் இன்பம் என்ற உணர்வையும் இழந்து வாழ்க்கையையும் இழந்து விடுவோம், எனவே துன்பத்தின் போது மட்டும் நான் நான் அல்ல என்ற மருந்தை பயன்படுத்தினால் நன்று.
புத்தர் இந்த நிலையை அடைந்தாரா என்று தெரியாது. ஆனால் நான் அந்த நிலையை அடைந்தேன். நீங்களும் அடையலாம்.
பிறரை கேள்வி கேட்பதால் ஞானம் பெற முடியாது, நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் தான் ஞானம் பெற முடியும். எனவே இது தொடர்பாக என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். மண்ணில் விழுகின்ற விதைகளில் இலட்சத்தில் ஒரு சிலவே மரமாக வளர்க்கின்றன. எழுத்துக்களும் அப்படித்தான்,காகிதத்தில் விழுகின்ற அனைத்தும் மக்களுக்கு புரிவதில்லை.