கற்பு என்பது அது ஒரு அரியாமை, ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது கற்பு.
அறியாமையால் புனிதமாக உள்ளது கற்பு,
கற்பு என்பதன் பொருள் ஒழுக்கம் மட்டும் அல்ல, ஒருவருக்கு மேல் யாரிடமும் உறவு வைத்துக்கொண்ட அனுபவம் இல்லை என்ற அறியாமையே கற்பு ஆகும்.
ஒருவர் கற்போடு வாழ்வதால் இந்த உலகத்திற்கு பெரிய பயன் ஏதும் இல்லை, ஆனால் தன் வாழ்க்கைத் துணையுடன் கற்போடு வாழ்கின்றவர்களால் மட்டும்தான் நிறைவான இல்லற வாழ்க்கையை அனுபவிக்க முடியும், கற்பு என்பது சுயநலன்,இதுதான் கற்பின் சிறப்பு.
மாருதி கார் வைத்திருப்பவர் ஒரு நாள் ஆடி காரை ஓட்டி அனுபவித்து விட்டால் அது நாள் வரை மாருதி காரில் அடைந்த இன்பங்கள் அனைத்தும் அவருக்கு துன்பமாக தெரியும். இது போல்தான் இல்லற வாழ்க்கையும், பலருடன் தொடர்பு உள்ளவர்கள் திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்க்கையில் நிறைவு இருக்காது.
பலஆயிரம் கோடியை ஒருவர் சம்பாதித்து உலக அழகி உடன் உறவு வைத்துக் கொண்டாலும், கற்பால் பெறக்கூடிய நிறைவான இல்லற வாழ்க்கையை யாராலும் பெறமுடியாது என்பது தான் கற்பின் சிறப்பு.
கற்பு அறியாமையால் புனிதமானது !
கற்பைப் பற்றிய அறியாமையால் பலர் இன்பத்தை இழந்து விட்டார்கள் !
கற்பைப் பற்றிய அறிவு இல்லாமல் பல பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் கற்பு பெண்ணுக்கு எதிரானது என்று சமத்துவம் பேசி பலருடைய இன்பமான வாழ்க்கையை அழித்து விட்டார்கள்.
கற்பு புனிதமானது !
கற்பு நிறைவானது !!