கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான்
15 October 2021by
Vijayakumaran
கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான். என்னால் முடியும், என்னால் எதுவும் முடியும் என்று எண்ணுவதும் உணர்வின் வெளிப்பாடுதான். இந்த நம்பிக்கையை “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற அறிவை கொடுத்து ஒருவர் நம்பிக்கையை உடைத்து விடலாம் அப்படி ஒருவர் நம்பிக்கையை உடைத்துவிட்டால் அவர் பெற்ற அறிவே அவருக்கு சூனியமாகிவிடும், எனவே யாருடைய நம்பிக்கையையும் யாரும் உடைக்க வேண்டாம் கனவிலும், கற்பனையிலும்மே மனிதன் வாழ்க்கை சுகமாக கழியட்டும் !
தன்னம்பிக்கையை போல் கடவுள் நம்பிக்கையும் தனிமனித நம்பிக்கையாக இருந்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
கடவுள் நம்பிக்கை ஒரு சமுதாயத்தின் நீதியாக மாறும் போதுதான் அந்த நம்பிக்கையை தவறு என்று சொல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.
கடவுள் நம்பிக்கையில் ஒரு மனிதன் தன் மீது எவ்வளவு ஊசியை வேண்டுமானாலும் குத்திக் கொள்ளலாம் அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதே கடவுளின் பெயரால் சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்தி உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேற்றுமையை ஏற்படுத்தி அறியாமையில் உள்ள மக்களை ஏமாற்றுவது தான் தவறு.இந்த தவறை தடுக்கவே கடவுள் நம்பிக்கையை உடைக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.
கடவுள் இல்லை! ஆனால் கடவுளை நம்பலாம்!!
விதி உண்மை! ஆனால் விதியை நம்ப கூடாது !!
தன்னம்பிக்கை ஒரு மாயை !அதை நம்பினால் தான் வாழ்க்கை !!