28 April 2020
by
Vijayakumaran
காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்கையையே புரிந்ததாக, அறிவாக எண்ணி ஏமாறுகிறோம். இதுதான் இன்றைய சமுதாய அறிவு.
விதியைப் பற்றிய என்னுடைய ஆய்வை மக்களிடம் கொண்டு செல்லும் போதுதான் தெரிகின்றது என்னை சுற்றி உள்ளவர்களில் ஆயிரத்தில் 999பேர் நம்பிக்கை என்ற குப்பையால் சிந்திக்க முடியாமல், புரிதல் இல்லாமல், நம்பிக்கையையே புரிதலாக எண்ணி தன்னையே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று.
நியூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டறிவதற்கு முன்புவரை மரத்திலிருந்து பழம் விழுவதற்குக் காரணம் கடவுளின் செயல் என்று மக்கள் நம்பி இருப்பார்கள். காரணம் தெரியாத அனைத்துக்கும் மனிதன் கடவுளின் பெயரைச் சொல்லி காரணத்தை அறிந்ததை போல் நம்பி ஏமாந்து இருக்கின்றான். நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த பிறகு மக்களுக்கு புரிய வந்தது,
இன்று மரத்திலிருந்து பழம் விழுவதற்கு புவியீர்ப்பு விசை தான் காரணம் என்று, புரிந்ததும் யாரும் கடவுளின் செயல் என்று நம்புவதில்லை.
விதி உண்மை என்று கீதையில் சொல்லிருக்கு, பைபிளில் சொல்லிருக்கு, குர்ஆனில் சொல்லிருக்கு, என்பது எல்லாம் நம்பிக்கையே. 4x4=16 என்று கணிதம் தெரியாமல் விடையை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் பயனில்லை, காரணம் 3x3 என்ன என்று கேட்டால் விடை தெரியாது. அது போல் விதி உண்மை என்று நம்புவதால் பயனில்லை, விதி எதனால் உண்மை என்ற அறிவியல் புரிதல் வேண்டும். நம்பிக்கை புரிதலாக மாறினால்தான் புதிய நீதியும், சட்டமும், உருவாகும். புரிதல் இல்லாத நம்பிக்கை பயனற்றது
ஆத்திகனுக்கும், மதவாதிக்கும், விதியை அறிவியலால் புரிந்து கொண்டால் கடவுள் இல்லை என்பது உறுதியாகி விடும் என்ற பயத்தாலும், நாத்திகனுக்கு விதியை உண்மை என்று தன் பகுத்தறிவால் புரிந்து கொண்டால் அவர்களுடைய கொள்கைகள் பொய்த்து விடும் என்ற பயத்தாலும், என்னுடைய ஆய்வை ஏற்கத் தயங்குகின்றனர். ஒவ்வொரு மனிதனும் தனக்கு எது நன்மையோ அதற்கு ஏற்றார் போல் நம்புவதும், நம்பாததும், புரிந்ததும், புரியாததும், போல் நடிக்கின்றனர். தன்னலம் பாராமல் உண்மையை உரக்கச் சொல்ல இந்த உலகில் யாராவது இருக்கின்றார்களா என்ற தேடலை இந்த பதிவு.
விதியை நான் கண்டுபிடிக்கவில்லை விதியால் இந்த உலகம் இயங்குவதை நான் கண்டறிந்தேன். நான் அறிந்ததை இந்த உலகத்துக்கு தெரியப்படுத்துகிறேன்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர் நேர்மையானவராக, ஒழுக்கமானவராக, இருந்தால் தான் நமக்கு பாதுகாப்பு. அதுபோல் விதியை உண்மை என்று நம்மை சுற்றி உள்ளவர்கள் புரிந்து கொண்டால் தான் நமக்கு பாதுகாப்பு.
கதை ஆசிரியருக்கு அவர் எழுதிய கதை சொந்தம். அதுபோல் விதியை நான் அறிந்ததால் விதி எனக்கு சொந்தமல்ல, சூரியனைப் போல் அனைவருக்கும் சொந்தம்.என்னுடைய எழுத்தை நான் ப்ரமோட் செய்கின்றேன் என்று எண்ணாமல் நாம் பெரும் அறிவால் நமக்கு நன்மை என்ற புரிதலோடு நம்பிக்கை என்ற குப்பையில் இருந்து விடுபட்டு புதிய அறிவை தேடுங்கள். அறிவு நீரைப் போன்றது தான் இருக்கும் இடத்திலிருந்து தாழ்ந்த அல்லது சமமான இடத்துக்கு தான் போய் சேரும், எனவே அறிவால் அனைவரும் சமம் என்ற புரிதலோடு தன்னுடைய மத,கடவுள் நம்பிக்கையை உயர்ந்ததாக எண்ணாமல் மாற்றுக் கருத்தை உள்வாங்கினால் தான் புதிய அறிவைப் பெறமுடியும். விதி உண்மை என்ற புரிதலை, அறிவை, ஒருவர் மற்றவரிடம் கொண்டு சேர்ப்பது நம் அனைவருக்கும் நன்மையைத் தரும்.