"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" இதன் பொருள் அறிவால் அனைவரும் சமம் என்பது தான் நிரம்ப படித்தவன் சொல்வதை உண்மை என்று நம்பி விடாதே, உண்மையா என்று உன் அறிவால் ஆய்வு செய்தபிறகு ஏற்றுக்கொள் என்று பொருள். அறிவு என்ற வார்த்தையின் இடையில் வல்லினம் 'றி 'யா இடையினம் 'ரி' யா என்று எழுதுவதற்கு தமிழ்ப்புலமை தேவை, அறிவைப் பற்றி எழுதுவதற்கு வாழ்வியல் அறிவு வேண்டும் தமிழ்ப்புலமை தேவையில்லை. தமிழ்ப் புலமை பெற்றவர்கள் அறிவைப் பற்றிய அறிவைப் பெறாததால் இதுவரைக்கும் யாரும் சரியான பொருளை இந்த குறளுக்கு எழுதவில்ல. எனவே விதியைப் பற்றியும் அறிவைப் பற்றியும் நான் ஆய்வு செய்து எழுதியதை படித்து இனியும் காலதாமதம் செய்யாமல் ஊடகங்களும், எழுத்தாளர்களும் தமிழனின் 2000 ம் ஆண்டுக்கு முந்தைய அறிவை உலகம் அறிய செய்ய வேண்டியது அவர்கள் கடமை.
கீழடியில் பானை ஓடுகளில் தமிழனின் பெருமையை தேடும் தமிழன் நம் மொழிகளில் உள்ள பெருமையை தேடலாமே.