3 June 2017
by
Vijayakumaran
1.அறிவால் அனைவரும் சமம். 2.அனுபவம் இல்லாமல் புத்தகம் படிப்பதால் அறிவு வளராது. 3.அறிவு என்பது படிப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. 4.அறிவு இல்லாமல் அறிவைப் பெற முடியாது. அறிவை அறிவால் ஆளுமை செய்வது ஏழாவது அறிவு. 5.எதை நாம் பார்க்கின்றோமோ, எதை நாம் கேட்கின்றோமோ அது நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஆளும். 6.திருமனத்திற்கு முன் காதல் என்பது விபச்சாரத்திற்கு சமமானது. 7.தூக்கு தண்டனை என்பது அறிவற்ற சமுதாயத்தின் செயல். 8.தண்டனை என்ற வார்த்தையே புதிய நீதிக்கு எதிரானது. 9.குற்றவாளி தண்டனைக்கு உரியவர் அல்ல, அவர் இந்த சமுதாயத்தால் பாதிக்க பட்டவர்.இது புதிய நீதி. 10.தண்டனை கொடுக்கக் கூடிய தகுதியும், உரிமையும் நீதி அரசர்களுக்கு இல்லை. 11.மனசாட்சியும்,நீதியும் வெவ்வேறானவை. 12.மனசாட்சி தனிமனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அறிவு. 13.ஆணும் பெண்ணும் உயிரால் சமம். 14.ஆணும் பெண்ணும் அறிவாலும், உணர்வாலும் வேறுபட்டவர்கள் தான். 15.சாதிக் கொடுமை என்று எதுவும் இந்த உலகில் இல்லை.பொருளாதார கொடுமைதான் இருக்கின்றது. 16.விதி என்பது உண்மை, எது நடக்குமோ அது நடந்தே தீரும். 17.கடவுளும், உயிரும் ஒன்று, இரண்டும் இல்லை ஆனால் இருக்கு. 18.ஒருவனுடைய சிந்தனைக்கும்,செயலுக்கும் அவன் காரணம் அல்ல. 19.நீ என்னவாக ஆக வேண்டும் என்று எண்ணுகின்றாயோ அதுவாகவே ஆவாய் ஆனால் எதை எண்ணவேண்டும் என்பதை நீ தீர்மானிக்க முடியாது. 20.உன்னுடைய செயலுக்கு நீ காரணம் அல்ல.ஆனால் உன் செயலுக்கான பலனை நீயே அனுபவிப்பாய். 21.ஒருவர் பெற்ற அனுபவத்தை வேறு ஒருவருக்கு கொடுக்கமுடியாது. 22.ஆணைப்பெண்ணும், பெண்னை ஆணும் புரிந்து கொள்ளவே முடியாது. 23.ஆணும், பெண்ணும், அறிவாலும் உணர்வாலும் தனித் தனி உலகம்.எந்த மொழியாலும் அவர்களிடையே அறிவையும், உண்ர்வையும் பரிமாறிக் கொள்ள முடியாது. 24.நாம் பார்த்த வடிவத்தைத் தவிர வேறு ஒரு வடிவத்தை நம்மால் உருவாக்க முடியாது. 25.புதியதாக எதை ஒன்றையும் சிந்திக்கவே முடியாது, தொடர்பு இல்லாமல். 26.சாதனை என்று எதுவும் இல்லை, சாதித்தவனும் எவனும் இல்லை. 27.மகான் என்று யாரும் இல்லை, அனைவரும் சாதாரன மனிதர்கள்தான். 28.ஒருவருடைய உயர்ந்த நிலைக்கும், தாழ்ந்த நிலைக்கும் அவர்கள் காரணம் அல்ல. 29.நாம் ஒரு கல்லைப் போல் தான், வெளிஉலகம் இயக்கினால் தான் நாம் இயங்க முடியும். 30.நாம் ஒரு கல்லைப் போல் தான் என்பதால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று யாரும் இல்லை. இவைகள் அனைத்தும் அறிவியல் படி உண்மையே.இந்த அறிவை நீங்கள் பெறவேண்டும் என்றால், நான் எழுதிய புத்தகங்களைப் படித்து புரிந்து கொள்ளுங்கள். தமிழில் தானே எழுதி இருக்கின்றீர்கள் இது புரியாது என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அது தவறு, புரிதல் என்பது நான் சொன்ன கருத்தை உங்கள் அறிவால் ஏற்றுக்கொள்வது என்று பொருள் "அறிவால் அனைவரும் சமம்" இந்த வாக்கியம் புரியும்.ஆனால் இந்த கருத்தை உங்கள் அறிவு தவறு என்று சொல்வதால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.இந்த கருத்தை நான் எழுதிய புத்தகத்தை படிப்பதால் சரி என்று உங்கள் அறிவுக்கு தோன்றும்.அப்போது தான் நீங்கள் இந்த மூன்று வார்த்தையை புரிந்து கொண்டதாக பொருள்.இந்த எழுத்துக்கள் உங்கள் வீட்டின் அழகு பொருளாக இல்லாமல் உங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் சிறந்த ஆயுதமாக இருக்கும். இதை சிறப்பாகப்பயன்படுத்த கற்றுக்கொண்டால் சமுதாயத்தில் சமத்துவம் உருவாகும், சமத்துவம் என்றால் சாதி வேற்றுமையைக்களைவது மட்டும் அல்ல.நீதிபதிக்கும் குற்றவாளிக்குமான வேறுபாட்டையே கலையும் புதிய சமத்துவம் உருவாக அனைவரும் உலக மக்களிடம் இந்த அறிவு கிளர்ச்சியை செய்யவேண்டும். என்னுடைய புத்தகங்கள் பலருக்கு புரியாது. புரியவில்லை என்பதால் தூக்கி எரிந்து விடாதீர்கள்.மற்ற புத்தகத்தைப்போல் இதையும் ஓர் அழகு பொருளாக பாதுகாத்து வையுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு அது உதவலாம்.இது புதிய தலைமுறைக்கான புதிய மார்க்கம். இந்த மார்க்கம் வழியாக அனைத்து மத மக்களும் பயணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அறிவால் அனைவரும் சமம் என்ற உண்மையை நான் உணர்ந்தவன். எனவே அறிவால் நான் உயர்ந்தவன் என்பதை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக நான் புத்தகங்களை எழுதவில்லை. எழுதுவது என் தொழிலும் அல்ல எழுதுவதை தொழிலாக வைத்து இருப்பவர்கள் மூலையை பிரதானமாக வைத்து எழுதுவார்கள். நான் என் வாழ்க்கை அனுபவத்தை பிரதானமாக வைத்து எழுதிருக்கின்றேன். எழுதியே ஆகவேண்டும் என்று எண்ணி எதையோ ஒன்றைத்தேடி பிடித்து எழுதுவதற்கும் நான் இதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு.மூலையைப்பயன் படுத்தி எழுதிய வரிகள் " கண்ணுக்கு மை அழகு", " கவிதைக்குப்பொய் அழகு" என்பது பணத்திற்காக எழுதிய பாடல் வரிகள். பார்வை இல்லாத கண்ணுக்கு மை தடவி இருந்தால் அது அழகாக இருக்குமா? பொய் சொல்வதற்காக கவிதை இல்லை, கடலை கடுகில் அடைத்துவிடும் வரிகள் தான் கவிதைக்கு அழகு. எழுதுவதைத்தொழிலாக செய்பவர்கள் அறிவால் யாரைவிடவும் உயர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் வியாபாரிகள். நம்மிடம் அறிவை வாங்கி, நம்மிடமே விற்பவர்கள். நாம் அனைவருமே அறிவை உற்பத்தி செய்பவர்கள் தான். ஒருவர் எழுதி ஆயிரம் பேர் அதை படிப்பதால் அறிவு வளராது, ஆயிரம் பேர் எழுதி ஆயிரம் பேர் படிக்க வேண்டும் அப்போது தான் அனைவருடைய அறிவும் பயன்படும் அறிவான சமுதாயம் உருவாகும். அதை தான் இப்போது Facebookம், WhatsAppம் சிறப்பாக செய்கின்றன. இதை அனைவரும் பயன் படுத்தி அவரவர்கள் பெற்ற அறிவைப்பதிவு செய்ய வேண்டும். உண்மையான புதிய சமத்துவம் உருவாக நான் ஆய்வு செய்து எழுதிய புத்தகங்களைப்படித்து பயன் பெறுங்கள்.