எது சிறந்த எழுத்து ?
யார் சிறந்த வாசகர் ?
எது அளவுகோல் ?
எந்த ஒரு எழுத்து யார் எழுதியது என்ற தாங்குதல் இல்லாமல் மக்களின் மனதை கொள்ளை கொள்கின்றதோ அதுதான் சிறந்த எழுத்து.
எந்த ஒரு வாசகன் யார் எழுதியது என்பதை பார்க்காமல் எழுத்தின் ஜீவனைப் புரிந்து கொள்கிறானோ அவன் தான் சிறந்த வாசகன். யார் எழுதியது என்பதை தெரிந்து கொண்டு, எழுதியவரை நம்பி கருத்தை புரிந்தது போல் நம்புபவன் சராசரி வாசகன்.
புத்தர், விவேகானந்தர், காந்தி, பெரியார், போன்ற சாதனை மனிதர்களுடைய பெயர்கள் அவர்களுடைய எழுத்துக்கு தாங்குதலாக இல்லை என்றால், எத்தனை பேரை அவர்களுடைய கருத்துகள் சென்று சேர்ந்திருக்கும் என்பது கேள்விக்குறிதான்.
வாசகன் படித்ததை புரிந்து கொள்வதற்கு கருத்தை சார்ந்த அறிவு வேண்டும். இல்லை என்றால் யார் எழுதியது என்பதை தெரிந்து நம்ப வேண்டும் என்பது கட்டாயமாகிவிடுவதால் பெரும்பாலான எழுத்துக்கள் எழுத்தாளர்களின் பிரபல தன்மையைப் பொருத்தே மக்களை சென்றடைகின்றன.
இந்த நிலையில் என்னுடைய எழுத்துக்கள் யார் எழுதியது என்ற தாங்கு தல் இல்லாமல் இணையத்தில் இந்த உலகை வட்டம் இடுவதை பார்க்கும் போது எனக்கு நிறைவாக உள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் சிறந்த வாசகர்களே.
நன்றி...