“அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்
வெற்றி உன்னை தேடு வரும்.” – A.R. ரகுமான்
----------------------
தன்னுடைய தகுதிக்கு மேல் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்தால் அவமானப்படுவாய்.
அவமானம் என்பது மற்றவர்களால் ஏற்படுவது அல்ல,
நீயாகவே ஏற்படுத்திக் கொள்வது.
எந்த இடத்தில் உனக்கு மரியாதைத் தேவை என்று என்னுகின்றாயோ அந்த இடத்துக்குரிய தகுதியை நீ வளர்த்துக் கொண்டால் மரியாதை தானாக உனக்கு கிடைக்கும், எல்லா இடத்திலும் மரியாதையை பெற்றவர் இந்த உலகில் யாரும் இல்லை.
தகுதிக்கு அதிகமாக மரியாதையை எதிர்பார்ப்பவன் வாழ்நாள் முழுவதும் அவமானப்பட வேண்டியது தான்.
இசையில் உலகப்புகழ் பெற்ற A.R. ரகுமான் அரசு விழாக்களில் பிரதமருக்கு இணையாக தனக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அது அவருக்கு அவமானம் தான்.
யாரை விடவும் நான் உயர்ந்தவன் அல்ல என்ற உண்மை நிலையை யார் புரிந்து கொள்கின்றார்களோ அவர்கள் எப்போதும் அவமானப்படுவது இல்லை.