15 November 2023
by
Vijayakumaran
அறிவைப் பற்றிய புரிதல் இல்லாமல் யாரும் “அறியாமையே இன்பத்தை கொடுக்கும் “என்ற வாக்கியத்தை புரிந்து கொள்ள முடியாது. நான் எழுதிய” புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை படித்த பிறகு இந்த வாக்கியத்தை படித்தால் மட்டுமே புரியும்.
அறிவைப் பற்றிய புரிதல் இருந்தால் மட்டுமே கெட்ட அறிவை தவிர்த்து நல்ல அறிவை மட்டும் பெற முடியும்.
அறிவில் நல்லறிவு, கெட்டறிவு என்று இரண்டு அறிவு இருக்கா என்று பலருக்கும் வியப்பாக இருக்கும். அறிவைப் பற்றிய புரிதல் இல்லாததால் தான் அறிவாளி என்று திரைப்படத்திற்கு பெயர் வைத்துள்ளார்கள். இங்கு அனைவருமே அறிவாளி தான், அறிவால் யாரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை.
தகவலை யாரிடமும் திணிக்க முடியாது, தன் முயற்சியால் தேடி தெரிந்து கொண்டால் மட்டுமே அறிவு தனக்குள் வரும்.
அறிவில் கெட்ட அறிவு இருப்பதை உணர்ந்ததாலேயே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே “திருவாசகத்தில்” மாணிக்கவாசகர் சிவபெருமானை புகழ்ந்து பாடும்பொழுது நல்லறிவே என்று சிவபெருமானை சொல்கின்றார். மாணிக்கவாசகர் நல்லறிவை கடவுளாகவே பார்க்கின்றார்.
கடவுளுக்கு நிகரான நல்லறிவை மட்டும் நமக்குள் கொண்டு வருவது எப்படி என்பதை தெளிவுபடுத்த தான் இந்த கட்டுரை நம்முடைய ஐந்து புலன்களால் நாம் பெறுவது மட்டுமே அறிவு. அறிவு இல்லாமல் புத்தகம் படிப்பதால் பெறப்படும் தகவல் ஒருபோதும் அறிவாகாது.
நம்முடைய ஐந்து புலன்களால் நாம் பெரும் அறிவு மூளையில் சேகரிக்கப்பட்டு நம்மை நம்முடைய அனுமதியில்லாமலேயே இயக்கும். இது இயற்கையின் விதி, இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இதற்கு சான்று ஒருவரிடம் மருந்தை கொடுத்துவிட்டு இந்த மருந்தை உட்கொள்ளும் பொழுது குரங்கை நினைக்க கூடாது, அப்போதுதான் இந்த மருந்து வேலை செய்யும் என்று சொல்லிவிட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் அந்த மருந்தை உட்கொள்ள முடியாது. எனவே அறிவுக்கு எதை தெரியப்படுத்த வேண்டும் என்பதை அறிவால் ஆளுமை செய்வதே ஏழாவது அறிவு. நான் எழுதிய “ஏழாவது அறிவு “என்ற புத்தகத்தில் தெளிவாக இதைப்பற்றி எழுதி இருக்கின்றேன்.
ஒருவர் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதற்கு ஏழாவது அறிவு மிக மிக அவசியம். ஏழாவது அறிவின் வேலை கெட்ட அறிவில் இருந்து நம்மை பாதுகாத்து அறியாமையில் வைத்திருப்பது தான்.
நாம் பெரும் அறிவு நமக்கு நன்மைகளை செய்தால் அது நல்லறிவு, தீமைகளை செய்தால் அது கெட்ட அறிவு, கெட்ட அறிவை பெறாமல் அறியாமையில் இருந்தால் “அறியாமையும் நன்மையே “.
பிறப்பின் நோக்கம் ஆனந்தமான உணர்வை அனுபவிப்பது மட்டுமே,அறிவைப் பெறுவது உயிரின் நோக்கம் அல்ல. எனவே ஆனந்தத்தை அடைய எந்த அறிவு தேவையோ அந்த அறிவை மட்டும் பெற்றாலே போதும். அளவான செல்வத்தை போல், அளவான அறிவே ஆனந்தத்தை கொடுக்கும்.
கெட்ட அறிவு என்பது திருடன், கொலைகாரன், குடிகாரன், புகைபிடிப்பவன், போதைப்பொருள் பயன்படுத்துபவன், பொய் சொல்பவன், பொறாமைக்காரன், புறம் சொல்பவன், ஒழுக்கம் இல்லாதவன், கற்ப்பு இல்லாதவன், உழைக்காதவன், சோம்பேறி, குறுக்கு வழியில் பணம் தேடுபவன், நம்பிக்கை துரோகி மற்றும் இது போன்றவர்களிடம் நாம் நட்பு வைத்திருந்தால் நமக்கும் ஒட்டிக் கொள்ளும்.
கெட்ட அறிவு என்பது கெட்ட மனிதர்களிடம் இருந்து வருவது போல், கெட்ட அனுபவத்திலிருந்தும் நமக்கு கெட்ட அறிவு வரும். கொடூர நிகழ்வுகளை அல்லது ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை கேட்டாலோ அல்லது பார்த்தாலோ நமக்குள் கெட்ட அறிவு வந்துவிடும்.
10 லட்சம் ரூபாய் car யை ஆனந்தமாக ஓட்டி அனுபவித்து கொண்டு இருக்கும் நபர், நண்பன் புதியதாக வாங்கிய ஒரு கோடி ரூபாய் car யை ஓட்டி பார்த்து விட்டால் அன்று முதல் அவருடைய car இன்பத்தை கொடுக்காது. அது போல் தான் வீடு மற்றும் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும்.நம் தகுதிக்கு மேல் ஒரு பொருளை அனுபவித்து விட்டால் நம்மிடம் இருக்கும் பொருள் நமக்கு ஆனந்தத்தை கொடுக்காது, நம்முடைய ஆனந்தத்தை கெடுக்கும் அறிவு கெட்ட அறிவு தான்.
இல்லற வாழ்க்கையில் இன்பமாக வாழ கற்பு என்ற அறியாமை மிக மிக முக்கியம். அறியாமையால் கற்பு புனிதம் ஆகின்றது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வேறு ஒருவருடன் பாலியல் ரீதியான அனுபவம் இல்லை என்ற அறியாமையே இல்லறத்தின் இன்பத்திற்கு வேர்.
இந்தக் கட்டுரையில் நான் என்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப எழுத இது கதை அல்ல,நான் ஆய்வு செய்து எழுதிய அறிவில் உன்மை.
10 வயதில் என்னுடைய அம்மா எனக்கு சொன்னா அறிவுரை “கெட்ட பாசங்களுடன் பழகாதே”என்பதுதான் அந்த நல்லறிவு கடவுளைப் போல் என்னுள் வந்து நிரந்தரமாக தங்கி விட்டதால் 59 வயதாகின்ற நிலையிலும் என்னை கடவுளைப் போல் கெட்ட அறிவிலிருந்து பாதுகாக்கின்றது.
என்னுடைய அம்மா சொன்ன மூன்று வார்த்தை கடவுளைப் போல் என்னுள் இருந்து, கெட்ட அறிவில் இருந்து என்னை காத்து ஆனந்தத்தை கொடுப்பது போல் நான் எழுதிய இந்த கட்டுரையும் நல்லறிவும் உங்களுக்குள் கடவுளாக இருந்து ஆனந்தத்தை கொடுக்கும் என்று நம்புகின்றேன்.