குமார்விதிகள் என்ற புத்தகத்தை நான் எழுதி முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பதிவிட்டிருந்தேன், மேலும் பல ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தேன், இந்த புத்தகத்தை படித்தவர்கள் யாரும் அவர்களுடைய கருத்துக்களை எனக்கு தெரிவிக்கவில்லை, கருத்தை தெரிவிக்க தயங்குகிறார்கள். காரணம் நான் எழுதிய புத்தகம் என்னுடைய அறிவை வெளிப்படுத்துவது போல், நான் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு என்னுடைய புத்தகத்தை விமர்சித்தால் அவர்களுடைய அறிவு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சமே.
பகுத்தறிவாளர்கள், முற்போக்கு வாதிகள், நாத்திகர்கள், ஆன்மீகவாதிகள், மதத்தலைவர்கள், எழுத்தாளர்கள்,கல்வியாளர்கள் அனைவருக்கும் நான் பகிரங்கமாக அறைகூவல் விடுக்கின்றேன்.
நான் எழுதிய “குமார் விதிகள் “என்ற புத்தகத்தை படித்துவிட்டு புத்தகத்தைப் பற்றிய உங்களுடைய விமர்சனத்தின் மூலம் உங்களுடைய அறிவை மக்களிடம் வெளிப்படுத்துமாறு அறை கூவல் விடுக்கின்றேன்.
என்னுடைய எழுத்தையும், என்னையும் அளவுக்கு அதிகமாக புகழ்ந்தாலும் சரி, தரம் தாழ்ந்து விமர்சித்தாலும் சரி, அனைத்து விமர்சனங்களையும் சமகாலத்து சமுதாயத்தின் அறிவுக்கு சான்றாகவே நான் பார்க்கின்றேன்.
என்னுடைய சிந்தனையும், செயலும் என் கட்டுப்பாட்டில் இல்லை என்ற அறிவை நான் பெற்றுவிட்டதால்,தற்பெருமையிலிருந்து விடுபட்டு இயந்திரம் போல் வாழும் நான் எழுதிய புத்தகத்தை மனிதர்களால் புரிந்து கொள்ள முடியுமா என்றால் கேள்வி குறிதான் ?
நான் பெற்றிருக்கும் அறிவு எனக்கு சொந்தமானது அல்ல, என்னை சுற்றி வாழும் மக்களிடம் இருந்து நான் பெற்றது,தமிழ் மொழிக்கு சொந்தமானது, நான் எழுதிய ஆறு விதிகளும் உலக நீதியாக மாறினால் அது தமிழர்களுக்கு தான் பெருமையை சேர்க்கும்.
“குமார் விதிகள்” என்ற புத்தகம் கவிதை புத்தகமோ, இலக்கிய புத்தகமோ அல்ல. இது உலக நீதியை மாற்றக்கூடிய வலிமையை உள்ளடக்கிய புத்தகம். இதை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாது, எனவே அறிவாளி என்ற முகமூடியை அணிந்து கொண்டு தங்கள் அருகில் இருக்கும் பகுத்தறிவாளர்கள், முற்போக்கு வாதிகள், நாத்திகர்கள், ஆன்மீகவாதிகள், ஆன்மீக குருக்கள், மதவாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் இந்த புத்தகத்தை பகிர்ந்து விட்டு புத்தகத்தைப் பற்றிய அவர்களுடைய கருத்தை கேட்டால் பலருடைய முகமூடி கழண்டு விடும்.அப்போது அங்கு அறிவு சமத்துவம் உருவாகும், அறிவு சமத்துவத்தை உருவாக்க பலருடைய முகமூடியை கழட்ட வேண்டி உள்ளதால், வாசகர்கள், முகநூல் நண்பர்கள், whatsapp நண்பர்கள் அனைவரும் அதிகம் பகிருங்கள், விமர்சனங்களை எதிர்கொள்ள உறுதியுடன் இருக்கின்றேன்.