ஒருவரிடம் உங்களுக்கு இதை சார்ந்த அனுபவம் இல்லை என்றால் ஒப்புக்கொள்வார், ஆனால் அவரிடம் இதை சார்ந்த அறிவு உங்களிடம் இல்லை என்றால் கோபித்துக் கொள்வார், காரணம் அனுபவம்தான் அறிவு என்ற அறிவு இந்த சமுதாயத்திற்கு இல்லாததால்தான்.
அனுபவம் இல்லாமல் படிப்பால் தான் பெற்ற தகவலை அறிவாக நினைக்கும் இந்த சமுதாயத்தை அறியாமையில் இருந்து மீட்டெடுக்க, நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதி இருந்தாலும் அந்தத் தகவலை அறிவாக மாற்றி கொள்ளும் அனுபவம் (அறிவு )படித்தவர்களுக்கு இருந்தால் தான் அனுபவமும், அறிவும் ஒன்றுதான் என்ற புரிதல் ஏற்பட்டு படிப்பும், அறிவும் வேறு வேறு என்ற உண்மை தெரிய வரும்.
“அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெறமுடியும் “என்ற நான் பெற்ற அறிவு யார் ஏற்றுக்கொண்டாலும், ஏற்காவிட்டாலும்,
யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஒருநாள் இந்த உலகையே ஆளுமை செய்யும்.