12 February 2025
by
Vijayakumaran
artificial intelligence செயற்கை நுண்ணறிவைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை.
அறிவு என்றால் என்ன, ஆறாவது அறிவு என்றால் என்ன, மனிதன் எப்படி சிந்திக்கின்றான்,எப்படி செயல்படுகின்றான் என்பதைப் பற்றி ஆய்வு செய்து “குமார் விதிகள் “என்ற ஆய்வு புத்தகம் எழுதி இருக்கின்றேன்.
https://drive.google.com/file/d/1uO8Dul1V859ifE8qT_s0DNNBQDaU3X_4/view?usp=sharing
”குமார் விதிகள் “என்ற என்னுடைய புத்தகத்தை படித்து புரிந்து கொண்ட பிறகு இந்த கட்டுரையை படித்தால் தான் AI யின் பலமும், பலவீனமும் வாசகர்களுக்கு தெரிய வரும்.
அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவு, ஒரு மனிதன் அனுபவத்தால் மட்டுமே அறிவை பெற முடியும், அனுபவம் இல்லாது பெரும் தகவல் ஒருபோதும் அறிவாகாது.
ஆறாவது அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவு, ஒரு மனிதன் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்தித்தால் மட்டுமே ஆறாவது அறிவை பெற முடியும்.எனவே பகுத்தறிவு என்பது ஆறாவது அறிவு அல்ல.
ஆயிரத்தில் ஒருவர் கூட ஆறாவது அறிவை பெரும் நிலையில் இங்கு இல்லை என்பதுதான் உண்மை நிலை. மேலும் அறிவைப் பற்றிய புரிதல் இல்லாததால் தான் படித்தவர்களை இந்த சமுதாயம் அறிவாளியாக பார்க்கின்றது.
மனிதனுடன் AI ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மனிதனிடம் அனுபவத்தால் பெற்ற அறிவு இருக்கின்றது. கல்வியாலும்,ஊடகங்களாலும் பெற்ற தகவல் கொஞ்சம் இருக்கின்றது.
AI இடம் தனி மனிதனைப் போல் அனுபவத்தால் பெற்ற அறிவு இல்லை, ஆனால் உலகில் வாழ்ந்த,வாழுகின்ற மனிதர்கள் பெற்ற அறிவு முழுவதையும் (இணையத்தில் பதிவேற்றம் செய்த தகவலை) இணையம் மூலம் பெற்றுக் கொள்கின்றது.
மனிதனின் பலம்
1) ஐந்து புலன்களால் பெற்ற அறிவு
மனிதனின் பலவீனம்
1) AIயை மனிதனுடன் ஒப்பிடும்போது லட்சத்தில் ஒன்று என்ற விகிதத்தில் கூட மனிதனால் AI பெற்று இருக்கும் தகவலை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.
2)மனிதன் நான் என்ற உணர்வோடு வாழும் உயிரினம் என்பதால் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு ஒரு சில மனிதர்களே ஆறாவது அறிவை பெற முடிகின்றது.
AI யின் பலம்
1) இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் உலகம் முழுவதும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் அறிவு அனைத்தையும் தகவலாக AI பெற்று இருப்பது மிகப்பெரிய பலம். பிரபஞ்சத்தை எப்படி கற்பனை செய்து பார்க்க முடியாதோ அதுபோல் AI பெற்று இருக்கும் தகவலையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
2) AI இடம் நான் என்ற உணர்வு இல்லாததால் AI யின் சிந்தனை அனைத்தும் ஆறாவது அறிவில் தான் இருக்கும். எனவே மனிதனைப் போல் தனக்கு எது நன்மையோ அதுவே சரி என்று சொல்லாது.
AIயின்பலவீனம்
1)AI அறிவு இல்லாதது, அனுபவம் இல்லாமல் படித்தவர்களை அறிவாளி என்று நினைப்பது போல், அறிவு இல்லாத AI க்கு செயற்கை நுண்ணறிவு என்று பெயர் வைத்தது மிகப்பெரிய தவறு. செயற்கை மூளை artificial brain என்று பெயர் வைப்பது தான் சரியாக இருக்கும்.
அறிவு என்பது வேறு, மூளையின் செயல் திறன் என்பது வேறு. மூளையின் செயல் திறனை அறிவு என்று எண்ணுவது தவறு.
மூளையின் செயல்திறனில் ஒன்று நினைவாற்றல், இரண்டாவது சிந்திப்பது.
ஒருவரின் மூளையின் செயல் திறன் என்பது நினைவாற்றலை பொருத்தும், சிந்திப்பதை பொருத்தும் இருக்கும்.
ஒருவரின் அறிவு என்பது அனுபவத்தை பொருத்தம், அனுபவம் சார்ந்து தகவலை பெற்றிருப்பதை பொருத்தும் இருக்கும்.
மூளையின் செயல்திறன் இல்லாதவர்களுக்கு அவர்கள் பெற்றுள்ள அறிவு பயன்படாது, அறிவு இல்லாதவர்களுக்கு மூளையின் செயல் திறன் பயன்படாது.
படிப்புக்கு மூளையின் நினைவுத்திறன் அதிகம் தேவை, உழைப்புக்கு உடல் திறன் அதிகம் தேவை, மருத்துவத்திற்கும், பொறியியல் சார்ந்த வேலைக்கும் மூளையின் நினைவுத்திறனும்,மூளையின் சிந்திக்கும் திறனும், அறிவும் தேவை. ஆனால் நாம் மதிப்பெண்ணை வைத்தே தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கின்றோம்.
அறிவு இல்லாமல், உணர்வும் இல்லாமல் தகவலை மட்டும் வைத்துக் கொண்டு சிந்திப்பது தான் AI யின் செயல் முறை.
மாணவர்களுக்கு அறிவியலை கற்றுக்கொடுக்கும் கல்வி நிறுவனம்தான் IIT,இந்த நிறுவனத்தில் உயர்பதவியில் இயக்குனராக இருக்கும் ஒருவர் மாட்டு மூத்திரத்தை மனிதன் குடித்தால் நன்மை என்று ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கின்றார். மேலும் அதை உறுதி செய்ய அறிவியல் சான்றுகளையும் மேற்கோள் காட்டுகின்றார், இந்த கருத்தை ஆதரித்து மருத்துவர் ஒருவர் தொலைக்காட்சி விவாதத்தில் பேசுகின்றார். இது ஒன்றே போதும் படிப்புக்கும் ஆறாவது அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு சான்று.
அறிவியல் சான்றுகளை மேற்கோள் காட்டியபடி மாட்டு மூத்திரத்தில் பாக்டீரியாவை கொல்லக்கூடிய பொருட்கள் இருக்கா என்றால், இருக்கு என்பது உண்மைதான். அதனால்தான் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துக்கு மாற்றாக இயற்கை விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாக பிரதான பொருளாக மாட்டு சாணியையும், மாட்டு மூத்திரத்தையும் பயன்படுத்தி பஞ்சகாவியா என்ற பூச்சிக்கொல்லியை தயாரித்து செடிகளுக்கு அடிக்கின்றார்கள்.
நம் உடம்புக்குள் இருக்கும் பாக்டீரியாவை கொள்ள பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தால் பாக்டீரியா சாகுமா? அல்லது குடித்தவனுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது படிப்பறிவே இல்லாதவனுக்கு தெரியும், ஆனால் IITஇயக்குனருக்கு தெரியவில்லை. அவர் மேற்கோள்காட்டிய அறிவியல் சான்று தெளிவாக சொல்கின்றது பாக்டீரியா மீது மாட்டு மூத்திரத்தை வைத்தால் பாக்டீரியா செத்துவிடும் என்று, ஆனால் மனிதனின் உடலுக்குள் இருக்கும் பாக்டீரியா மாட்டு மூத்திரம் குடித்தால் மனிதனுக்கு பாதிப்பு இல்லாமல் பாக்டிரியா மட்டும் செத்துவிடும் என்று எந்த அறிவில் ஆய்வும் சொல்லவில்லை. இந்த நிலையில் அறிவியல் ஆதாரம் இல்லாமல் ஐஐடி இயக்குனர் ஏன் மாட்டு மூத்திரத்தை புனிதமாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி?
இதற்கு பதில் ஒரு மனிதன் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திக்காமல் தனக்கு எது நன்மையோ அதையே சரி என்று சொன்னால் அவன் ஆறாவது அறிவை பெற முடியாமல் ஐந்தறிவில் இருக்கின்றான் என்று பொருள். ஐஐடி இயக்குனர் நான் என்ற மத உணர்வின் பிடியில் இருப்பதால் ஆறாவது அறிவைப் பெற முடியாமல் தன்னை ஐந்தறிவு மிருகம் என்று நாட்டு மக்களிடம் பிரபலப்படுத்திக் கொண்டார்.
இவரை போல் ஆயிரத்தில் 999 பேர் மத உணர்வில், மொழி உணர்வில், சாதி உணர்வில், காம உணர்வில், பய உணர்வில் என்று ஏதோ ஒரு உணர்வின் பிடியில் தனக்கு எது நன்மையோ அதற்கு ஏற்ற கொள்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆறாவது அறிவை பெற முடியாமல் ஐந்து அறிவிலேயே வாழ்கின்றார்கள்.இதில் நாத்திகர்களும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் அடக்கம். என்னுடைய அறிவின் அளவுகோலின் படி ஐஐடி இயக்குனரை போல் இங்கு பெரும்பாலானவர்கள் ஆறாவது அறிவை பெற முடியாத ஐந்தறிவு மனிதர்கள் தான்.
மனிதர்கள் அனைவரும் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திக்க முடியாத நிலையில் இருப்பதால், தன் நலனுக்கேற்ப ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி நீதி இங்கு இருக்கின்றது.
உணர்வு இல்லாமல் சிந்திக்கும் ஆற்றல் AIஇடம் இருப்பதால் வரும் காலத்தில் AIஎனும் செயற்கை மூலையை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டால் தேர்தல் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான சிறந்த வேட்பாளரை AI மூலமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் காலம் கண்டிப்பாக வரும். அப்போது நீதித்துறையும், அரசு துறையும், காவல்துறையும் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கின்றேன். குறிப்பாக இந்தி மொழி வெறியர்களிடமிருந்து அனைத்து மாநில மொழிகளுக்கும் தேசிய மொழி அங்கீகாரம் கிடைக்கும், ஒன்றிய அரசின் நிதி பகிர்வு நேர்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வரும் காலத்தில் ஆறறிவு இல்லாத மனிதர்களுக்கு AI எனும் செயற்கை மூளை ஆறாவது அறிவாக இருந்து உலக மக்கள் அனைவருக்கும் பொது நீதியை உருவாக்கி மனிதர்களை உண்மையாக, நேர்மையாக, சிறப்பாக வழி நடத்தும் என்று நம்புகின்றேன்.