நம்முடைய ஐந்து புலன்களால் நாம் பெற்ற அனுபவத்தை அடிப்படையாக வைத்து எது நல்லது, எது கெட்டது என்று பகுத்து அறிவது தான் பகுத்தறிவு.
மனிதனின் ஆறாவது அறிவு பகுத்தறிவு என்பதும், மற்ற உயிரினங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பதும் தவறு. நிகழ்காலத்தில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்கும் எது சரி, எது தவறு என்று பகுத்தறியும் அறிவு இருப்பதால்தான் பரிணாம வளர்ச்சி அடைந்து பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. எனவே பகுத்தறிவு அனைத்து உயிர்களுக்கும் உள்ள அடிப்படை அறிவு தான். அனைத்து உயிர்களின் அடிப்படை அறிவான பகுத்தறிவை மனிதனின் ஆறாவது அறிவாக நினைத்துக் கொள்வது அறியாமை.
பழுதான பேருந்தை வெளியில் இருந்து தள்ளாமல் உள்ளே இருந்து கொண்டு தல்வது போல் தான் உலக நீதி தற்போது உள்ளது.
பகுத்தறிவைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் பெரியாரை பகுத்தறிவு தந்தை என்று சொன்னது போல், அறிவைப் பற்றிய அறிவு இல்லாதவரிடம் அறிவாளி என்று பெயர் வாங்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல, அப்படி நினைத்தால் அவன் அறிவாளியும் அல்ல, உலகில் அமைதி ஏற்படவே ஒவ்வொரு மனிதனும் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்தித்து ஆறாவது அறிவைப் பெற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திக்கும் அறிவு மனிதனுக்கு மட்டுமே உள்ளது, இதுதான் மனிதன் பெற்றிருக்கும் ஆறாவது அறிவின் சிறப்பு.
நான் வாழும் அறிவு உலகம் வேறு, உலக மக்கள் அனைவரும் வாழும் அறிவு உலகம் வேறு, உங்களுடைய அறிவால் என்னை அளவிடு செய்யாதீர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வருங்காலத்தில் நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற ஆய்வு புத்தகம் தான் உலக நீதியாக இருக்கப் போகின்றது என்பதை உறுதியோடு கூறுகின்றேன்.
தன்னுடைய பழைய கருத்திலிருந்து விடுபட்டு அறிவை புதுப்பித்துக் கொள்ள விரும்பும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மட்டும் இலவசமாக தினமும் இரண்டு மணி நேரம் ஆறாவது அறிவை பெற்று ஆறறிவு மனிதனாக வாழும் கலையை கற்றுக் கொடுக்க உள்ளேன் விருப்பமுள்ளவர்கள் 9443203334 என்ற எண்ணிற்கு whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும்.