8 October 2024
by
Vijayakumaran
அறிவு என்றால் என்ன ?
ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும் இந்த அறிவைப் பெறவில்லை நான் எழுதிய புத்தகத்தை படித்து அதை அறிவாக பெற முடியாத அறிவில்லாதவரிடம் இருந்து நான் பெற்ற அனுபவத்தால் தான் இந்த அறிவை பெற்றேன்.
நம்முடைய ஐந்து புலன்களின் அனுபவத்தால் பெறுவதுதான் அறிவு. அந்த, அந்த புலன்களின் வேலையை அந்த, அந்த புலன்கள் செய்தால் மட்டுமே அறிவை பெற முடியும். நாவின் சுவை அறிதலை கண்ணால் பார்த்து படித்து விட்டால் அது அறிவாகாது. எனவே படிப்பு தகவலை மட்டுமே கொடுக்கும் அறிவை கொடுக்காது. எனவே அனுபவஅறிவு இல்லாத ஒன்றை நாம் படித்தால் அது நமக்கு அறிவாக மாறாது.
ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவு அல்ல நன்மை, தீமையை பகுத்து அறியக்கூடிய பகுத்தறிவு என்பது மிருகங்களிடமும் உள்ளது. ஆறாவது அறிவு என்பது உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திப்பதால் பெரும் அறிவே ஆறாவது அறிவு.இந்த ஆறாவது அறிவு உள்ள மனிதன் மட்டுமே மனிதனாக வாழ்கின்றான். இந்த அளவுகோலை வைத்துக் கொண்டு ஆறறிவு உள்ள மனிதனைத் தேடினால் ஆயிரத்தில் ஒருவர் கூட எனக்கு கிடைக்கவில்லை, அதனால் தான் நான் எழுதிய புத்தகத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற அடிப்படை கணித அறிவியலை புரிந்து கொள்வது போல் வாழ்வியல் அறிவியலை அடிப்படை அறிவு உள்ள அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கணிதத்தை போல் ஒவ்வொரு நிலையாக தெளிவுபடுத்தி நான் எழுதியதை பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை காரணம் அவர்களுடைய உணர்வு ஆறாவது அறிவைப் பெற சம்மதிக்கவில்லை என்பதே.
அதிகம் படித்து இருப்பதால் தன்னை அறிவாளி என்று எண்ணிக் கொண்டு இருக்கும் வாசகர் ஒருவர் விதி உண்மை என்று நான் எழுதியிருந்த கட்டுரையை படித்துவிட்டு என்னை முட்டாள் என்றும், விதி உண்மை என்றால் உலக நீதியே மாறிவிடும் எனவே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் விமர்சித்திருந்தார்.ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சம் வெகுதூரத்திற்கு தெரிய வேண்டும் என்றால் மெழுகுவர்த்தி அருகில் அடர்ந்த இருட்டு இருக்க வேண்டும் அந்த இருட்டு தான் என்னை விமர்சிக்கும் ஆறறிவு இல்லாதவர்கள்.
கணிதத்தில் தவறு இருந்தால் இந்த இடத்தில் தவறு என்று சுட்டிக் காட்டினால் அது அறிவின் வெளிப்பாடு, கணிதத்தில் எந்த தவறும் இல்லை ஆனால் விடையை நான் ஏற்க மாட்டேன் காரணம் பத்தும் பத்தும் 110 என்று பலனை அனுபவித்த நான் பத்தும் பத்தும் நூறு என்ற புதிய விடையால் பத்து ரூபாயை இழக்க விரும்பவில்லை என்றால் அவர்தான் ஆறறிவு இல்லாத மனிதர்.
தனக்கு எது நன்மையோ அதுவே சரியானது என்று ஒருவன் நினைத்தால் அவன் ஆறாவது அறிவை பெறவே முடியாது.
பலனை எதிர்பார்த்து நம் உணர்வு அறிவை தடை செய்தால் ஆறாவது அறிவை பெற முடியாது.
நேற்றைய அறிவு இன்று நமக்கு தவறாக தோன்றுவது தான் புதிய அறிவை பெற்று இருக்கின்றோம் என்பதற்கு சான்று.
சனாதன தர்மத்தை ஆதரிப்பதும், பெரியாரை பகுத்தறிவு தந்தை என்று சொல்வதும் புதிய அறிவை பெறாததற்கு சான்று.
நான் எழுதிய “குமார் விதிகள்”என்ற புத்தகத்தை படித்து நீங்கள் ஆறறிவு மனிதனா என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன் என்னுடைய அறிவை வளர்த்துக் கொள்ள.