2 October 2023
by
Vijayakumaran
அறிவு என்றால் என்ன என்பதை நான் ஆய்வு செய்து “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகம் எழுதியதன் மூலம் நான் பெற்ற அறிவே இந்த கட்டுரை எழுதுவதற்கு மூலக்காரணம்.
அறிவால் ஆணும், பெண்ணும் தனித்தனி உலகம். ஆணின் உணர்வை பெண்ணும், பெண்ணின் உணர்வை ஆணும் புரிந்து கொள்ளவே முடியாது.
ஒரு நிகழ்வு ஆணுக்கு கொடுக்கும் அறிவும், பெண்ணுக்கு கொடுக்கும் அறிவும் வெவ்வேறு. அறிவிலும், திறனிலும் ஆணும், பெண்ணும் சமம் அல்ல என்பது அறிவியல் உண்மை.
ஆண்களின் இயல்பான உணர்வு சண்டை போடுவது, போட்டி போடுவது, மற்றவர்களை தன் ஆளுமையால் அடிமைப்படுத்துவது ஆண் பிறப்பால் பெற்ற உணர்வு. அதனால் தான் ஆண்களுக்கு சண்டை, திகில், போட்டி போன்ற திரைப்படங்கள் பிடிக்கின்றன.
பெண்களின் இயல்பான உணர்வு குடும்ப கட்டமைப்பை உருவாக்குவது தான். எனவே குடும்பத்தின் உண்மையான உரிமையாளர் பெண்கள் தான். அதனால்தான் பெண்களின் உணர்வை தூண்டும் குடும்ப கதை நாடகத்தையும், திரைப்படத்தையும் விரும்பிப் பார்க்கின்றார்கள்.
பெண்ணின் தேவை ஆணிடமும், ஆணின் தேவை பெண்ணிடமும், இருந்தால் மட்டுமே ஆண், பெண் இருவரும் குடும்பமாக சேர்ந்து வாழ முடியும் என்பது இயற்கையின் நீதி. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது அடிமைத்தனம் என்று தவறாக எண்ணி ஆணுக்கு நிகராக பெண்ணிடம் அதிகாரத்தை குவிப்பது இயற்கைக்கு எதிரானது.
பெண், ஆணை தன் குடும்பத்தின் தலைவனாக ஏற்றுக் கொள்வதற்கு காரணம், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்காக மட்டுமே, தற்போது இந்த இரண்டும் பல பெண்களுக்கு தேவை இல்லை என்பதால் தான், பாலுணர்வின் தேவை தேவையில்லை என்று தோன்றிய உடன் கணவனை விவாகரத்து செய்து விடுகின்றார்கள்.
பெண்ணிடம் உரிமையை கொடுப்பதற்கும், அதிகாரத்தை குவிப்பதற்கும் வேற்றுமை உண்டு. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, பேச்சுரிமை, ஜனநாயக உரிமை என்று அனைத்து உரிமையும் கொடுக்கலாம் அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் வேலை வாய்ப்புகலிலும், தேர்தலிலும் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் பெண்களிடம் அதிகாரத்தை குவித்தால் அது இயற்கையின் நீதிக்கு எதிரானது.
பெண்ணை விட ஆணே உடல் வலிமை மிக்கவன் என்பது இயற்கையின் நீதி. ஒரு பெண்ணுக்கு ஆணால் தான் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற நிலையில், ராணுவத்திலும், காவல்துறையிலும், தேர்தலிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் அதிகாரத்தை கொடுத்தால் அவர்களால் இந்த நாட்டை காப்பாற்ற முடியுமா? முடியும் என்று பல முரண்பாடான முற்போக்கு வாதிகள் நினைக்கலாம் அவர்களுக்கான பதில் இது, இட ஒதுக்கீட்டின் மூலம் அதிகாரத்துக்கு வரும் பெண்களால் ஆண்களுக்கு நிகராக இந்த நாட்டை பாதுகாக்க முடியும் என்றால் இட ஒதுக்கீடு இல்லாமல் பெண்கள், ஆண்களை சமதளத்தில் போட்டி போட்டு வெற்றி பெற்றே வரலாமே, ஏன் ஒதுக்கீடு மூலம் அதிகாரத்தை பெண்களிடம் கொடுக்க வேண்டும். ஆண்களை வெல்லும் திறன் பெண்களிடம் இல்லை அதனால் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்கும்.ஆண்களுக்கு நிகரான திறன் உள்ளவர்கள் பெண்கள் என்பதற்கும் முரண்பாடு இல்லையா?
பொது இடங்களில் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பாக ஆண் காவலர்கள் செல்வது எதார்த்தமாக இருந்தாலும், பெண்களை கையாள்வதற்கு பெண் காவலர்கள் தேவைதான். தேவைக்கு ஏற்ப பெண்களுக்கு வேலை கொடுப்பதில் எந்த தவறும் இல்லை, பெண்களின் பணியை ஆண்களால் திறம்பட செய்ய முடியாது என்பதை போல், ஆண்களின் பணியையும் பெண்களால் திறம்பட செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களால் திறன்பட செய்யக்கூடிய வேலையை பெண்களுக்கும், ஆண்களால் திறன்பட செய்யக்கூடிய வேலையை ஆண்களுக்கும் கொடுப்பதுதான் அறிவு.
பொறியாளராக பெண்களும் படிக்கலாம் ஆனால் ஆண்களைப் போல் பெண்களால் களத்தில் பணி செய்ய முடியுமா என்றால், முடியாது என்பதுதான் கடந்த கால வரலாறு. நெய்வேலியில் பணியில் சேர்ந்த பல பெண் பொறியாளர்கள் களத்திற்கு சென்று பணி செய்ததே இல்லை, அலுவலகத்தில் மின்விசிறியின் காற்றை வாங்கிக்கொண்டு பணி உயர்வும் பெற்று, AC அறை வரை சென்று, மாதம் பல லட்சம் ரூபாய் ஊதியம் பெற்று பணி நிறைவும் பெற்று விட்டார்கள். பொறியியல் படித்துவிட்டு களத்தில் பணி செய்ய ஆண்கள் காத்திருக்கின்ற சூழலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைகள் கொடுப்பதால்தான் பல அரசுத்துறை நிறுவனங்கள் திறம்பட செயல்படாமல் நட்டத்தில் இயங்குகின்றன.
IPS க்கு பெண்களும் படிக்கலாம் ஆனால் ஆண்களுக்கு நிகராக திறன் வாய்ந்த காவல்துறை அதிகாரியாக களத்தில் செயல்பட முடியுமா என்றால் முடியாது. காரணம் அவர் பெண், பெண்களுக்கு கிரிமினல்களை, மக்கள் கூட்டத்தை எப்படி கையாள்வது என்ற அனுபவ அறிவு இருக்காது, இந்த அறிவு இல்லாத பெண் எப்படி காவல்துறையை திறன்பட நிர்வகிக்க முடியும்.
பெண்ணால் ஒருபோதும் ஆணுடைய அறிவையும், உடல் திறனையும் பெற முடியாது என்பது இயற்கையின் நீதி.
பெண்ணை, ஆணுக்கு நிகராக உயர்த்த வேண்டும் என்பதற்காக காவல் துறையில் ஆண் அதிகாரிக்கு மேல் அதிகாரியாக பெண்ணை இட ஒதுக்கீட்டின் மூலம் நியமிப்பது அறிவில்லாத செயல்.
மனித உரிமையில் ஆணும், பெண்ணும் சமம். ஆனால் அறிவிலும், திறனிலும் ஆணும், பெண்ணும் சமம் அல்ல. இந்த வேற்றுமை தான் ஆணையும், பெண்ணையும் ஆயுள் முழுவதும் இனைத்து வைக்கின்றது.
இயற்கையின் நீதியை புரிந்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சமம் என்று எண்ணி தகுதி இல்லாத பெண்களிடம் அதிகாரத்தை இட ஒதுக்கீடு மூலம் கொடுத்தால் அது குடும்ப அமைப்பை சிதைத்து ஆண்களை குடும்பம் இல்லாத அனாதைகள் ஆக்கிவிடும்.
இறுதியாக என்னுடைய ஆய்வின் முடிவு :-
1) ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ஆணின் தேவையை பெண்ணும், பெண்ணின் தேவையை ஆணும் பூர்த்தி செய்ய வேண்டும்.
2) ஆணும், பெண்ணும் பாலுணர்வுக்காக திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ்வதற்கு பால் உணர்வின் தேவைகள் மட்டும் பூர்த்தியானால் போதாது.
3)பெண்ணால் மட்டுமே குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பத்தை உருவாக்க முடியும், அந்த குடும்பத்தில் தன்னை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆணின் தேவை, ஆணின் தேவையை பூர்த்தி செய்ய ஒரு பெண் குடும்ப பெண்ணாக இருந்தால் போதும்.அதனால்தான் பெண்ணிடம் கற்பையும், ஆணிடம் வீரத்தையும், உடல் வலிமையையும் திருமணத்திற்கான தகுதியாக முன்னோர்கள் கருதினார்கள்.
4) பெண்ணின் தேவை பொருளாதார பாதுகாப்பும், சமூக பாதுகாப்பும் இந்த இரண்டையும் ஒரு ஆண் பூர்த்தி செய்தால் இருவரும் இயல்பாகவே சேர்ந்திருப்பார்கள், எனவே பெண்ணின் பொருளாதார தேவையை ஆண் பூர்த்தி செய்யும் இடத்தில் இருந்தால் மட்டுமே குடும்பத்தில் ஆணுக்கு இடம் உண்டு என்பதே இயற்கையின் நீதி.
5) இயற்கையின் நீதியை புரிந்து கொள்ளாமல் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, அரசு வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீடு, என்று பெண்களுக்கு அதிகாரத்தை அள்ளிக் கொடுத்தால் ஆண்களின் தேவை பெண்களுக்கு தேவைப்படாமல் குடும்ப அமைப்பு காலப்போக்கில் சிதைந்து விடும். இதற்கு சான்று மனம் முறிவுக்காக நீதிமன்றம் செல்லும் பெண்களில் பெரும்பாலானவர்கள் அதிகம் சம்பாதிக்கும் பெண்களே.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பதை போல் தகுதிக்கு மேல் பெண்களிடம் இட ஒதுக்கீட்டின் மூலம் செல்வத்தையும், அதிகாரத்தையும் குவித்தால் அது சமுதாயத்திற்கு கேடு. எனவே தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கொடுப்பது தவறு.