தியானம் (Meditation)என்றால் என்ன ?
ஏன் தியானம் செய்ய வேண்டும்?தியானம் செய்வதால் என்ன பயன் ?இது தான் நம் அனைவரின் கேள்வியும். இதர்க்கான சரியான பதிலை யாரும் நமக்கு இதுவரை சொல்லவில்லை. தியானத்தில் சிறந்த புத்தர் கூட நமக்கு
தெளிவுபடுத்தவில்லை. தியானத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல் தியானத்தோடு ஆன்மீகத்தை சேர்த்து பலர் பனம் சம்பாதித்துக்கொண்டுள்ளனர்.
தியானம் என்பது ஆன்மீகம் அல்ல, தியானம் என்பது அறிவின் உச்சம்!, உணர்வின் உச்சம் !,ஆம் தியானம் ஒரு கலை,அதை பழக, பழகதான் அது நம் வசப்படும்.ஒரு மனிதனுடைய செயலுக்கு அவனுடைய அறிவும், உணர்வும், தான் காரணம், அந்த அறிவையும், உணர்வையும், தனித்தனியாக ஆளுமை செய்ய பழகுவதுதான் தியானம்.
உணர்வு தியானம் என்பது இசையை கேட்பது, ஓவியத்தை ரசிப்பது,வாசனையை நுகர்வது, உணவை ருசிப்பது, உடலின் வருடுதலை ரசிப்பது போன்ற மெய்மறந்த உணர்வில் அறிவின் ஆளுமை இல்லாமல்்மூழ்குவதுதான் உணர்வு தியானம்.
அறிவு தியானம் என்பது உணர்வின் ஆளுமை இல்லாமல், சாதி, மதம், மொழி, நாடு, என்ற எந்தபற்றும் இல்லாமல் நான் என்ற உணர்வு இல்லா ஆன்மீகத்தேடலும்,, நாம்பெற்ற அறிவை பயன்படுத்தி ஒரு செயலில் அல்லது ஆய்வில் ஈடுபடும் போது அதில் முழு கவனத்தை செலுத்துவதும் அறிவு தியானமாகும்.
தியானம் என்பது உணர்வையும், அறிவையும், கட்டுப்படுத்தும் பயிற்சி. உதாரணத்திற்கு, நாம் படித்து கொண்டு இருக்கும்போது நம் எதிரில் இனிப்பை வைத்தார்கள் என்றால் நாம் என்னசெய்வது? இனிப்பை சாப்பிட கூடாது என்று அறிவு சொன்னால் அந்த இனிப்பை பற்றி சிந்திக்காமல் முழு கவனத்துடன் படிப்பைதொடர்வதும், இனிப்பை சாப்பிடலாம் என்று உணர்வு சொன்னால்
படிப்பை நிறுத்திவிட்டு இனிப்பை உண்டு முழுஇன்பத்தில் திளைப்பதும் தியானப் பயிர்ச்சிதான்.
நாம் செய்கின்ற செயலை முழு ஈடுபாட்டோடு செய்ய பழகும் செயல்தான் தியானம்.
உணர்வை கட்டுப்படுத்தும் செயல்தான் தியானம்.
உணர்வின் உச்சம் செல்லும் செயல்தான் தியானம்.
அறிவின் ஆளுமைதான் தியானம்.
உணர்வோடு வாழ்ந்தால்தான் வாழ்க்கை! அறிவோடு வாழ்ந்தால் தான் மனிதன்! இரண்டையும் சரியாக கையாள்வதுதான் தியானம்.
கண்ணை மூடி அமர்ந்திருப்பதர்க்கு பெயர் தியானம் அல்ல.
ஒவ்வொரு நொடியும் உன் உணர்வையும், அறிவையும், ஆளுமை செய்வது தான் தியானம்.